மார்ச் 17 2005
தராசு
கார்ட்டூன்
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
உள்ளங்கையில் உலகம்
பங்குச்சந்தை ஒரு பார்வை
முத்தொள்ளாயிரம்
கட்டுரை
அறிவிப்பு
ஆன்மீகக் கதைகள்
கவிதை
திரைவிமர்சனம்
வ..வ..வம்பு
அறிவிப்பு
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • ஹர்ஷத் மேத்தா
 • - சசிகுமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  பங்குச்சந்தை ஒரு பார்வை : Block Deal
  - சசிகுமார்
  | Printable version |

  சென்னையில் மாலை வேளைகளில் கடற்கரை காற்றில் பெறும் சுகம் போல வேறு எதுவும் கிடையாது. கடற்காற்றின் அந்த குளுமைக்கு தான் என்ன ஒரு சக்தி. பல சூழ்நிலைகளில் மனதை சாந்தப்படுத்தும் ஒரு அற்புத மருந்து கடற்காற்று தான். தினமும் வந்து இந்த கடற்காற்றின் சுகம் பெறும் ஆவல் இருந்தாலும் எல்லா நேரங்களிலும் இந்த சுகம் கிடைப்பதில்லை. வாரத்தில் மூன்று நாட்கள் இந்த சுகத்தை பெற்றே தீர வேண்டும் என்று நினைத்து இங்கு வந்து விடுவேன். வெள்ளி, சனி, ஞாயிறு இந்த மாலைகள் கடற்கரையில் கழிந்து விடும். என்னுடன் எனது நண்பன் செல்வாவும் சேர்ந்து விட்டால் அரட்டைக்குப் பஞ்சம் என்ன ?

  இன்று வெள்ளி மாலை அவனுக்காகத் தான் காத்திருக்கிறேன். சென்னையில் கோடை துவங்கி விட்டது. துவக்கமே கொஞ்சம் உக்கிரமாகத் தான் இருக்கிறது. பங்குச்சந்தையும் இந்த வாரம் மிக உக்கிரமாகத் தான் இருந்தது.

  ஒரு வழியாக செல்வாவும் வந்து சேர்ந்தான்.

  "என்ன இவ்வளவு லேட்டா வருகிறாய்" என்று கேட்டேன்

  "உனக்கு என்ன ஆபிசுக்கு மட்டம் போட்டு விட்டு சீக்கிரமா வந்து சேர்ந்து விட்டாய். நான் ஆபிசில் இருந்து வர வேண்டமா"

  "சரி சந்தை என்னாச்சு. காலையில் இருந்து சரிவுடன் இருந்ததால் Mapin Id வாங்குவதற்காக வீட்டில் இருந்து மதியமே புறப்பட்டு விட்டேன். இந்த Mapin Id இல்லாவிட்டால் பங்குகள் வாங்க முடியாதாமே"

  "அது உன்னைப் போன்ற பணக்காரர்களுக்குத் தான். நான் வாங்கும் கொஞ்சப் பங்குகளுக்கு இது தேவையில்லை. ஆனாலும் ஒரு பாதுகாப்பிற்காக நானும் வாங்கி வைத்திருக்கிறேன். இந்தியப் பொருளாதாரம் வளரும் பொழுது நானும் வளர்ந்து விட மாட்டேனா என்ற நப்பாசை தான்"

  "ரொம்பத் தான் பேசுகிறாய். விஷயத்துக்கு வருகிறாயா. நான் கேட்டது இன்றைய வெள்ளிக்கிழமை சந்தை நிலவரம் பற்றி தான்"

  "காலையில் இருந்து சுமார் 40 புள்ளிகள் சரிவுடன் இருந்த சந்தை பின் எகிறியது. மதியம் 2:30 மணிக்கு பிறகு தான் ஏற்றமே இருந்தது. இறுதியில் சுமார் 35 புள்ளிகள் உயர்வை BSE குறியீடும், NSE 13 புள்ளிகள் உயர்வையும் பெற்றன. இன்றைய வர்த்தகத்தில் ஏற்றமும் இறக்கமும் மிக அதிகமாக இருந்தது. குறியீடு சுமார் 100 புள்ளிகளுக்கு இடையே ஏறியும் இறங்கியும் கொண்டுருந்தது. கடந்த ஒரு வாரமாக மிக அதிகமாகச் சரிந்திருந்த பார்தி பங்குகள் இன்று நல்ல உயர்வைப் பெற்றன"

  "திங்களன்று பார்தி பங்குகள் சுமார் 233 ரூபாய்க்கு எகிறியதே ? பின் எப்படி இந்தளவுக்கு சரிந்தது"

  "திங்களன்று பார்தி பங்குகளில் ஒரு பெரிய Block Deal செய்யப்பட்டது. இந்த மொத்த வர்த்தகத்தின் மதிப்பு மட்டும் சுமார் 2500 கோடி. பார்தியின் சுமார் 6% பங்குகள், அதாவது சுமார் 11கோடி பங்குகள் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களால் வாங்கப்பட்டன. இந்தப் பங்குகளை வைத்திருந்த Warburg Pincus என்ற முதலீட்டு நிறுவனம் இந்தப் பங்குகளை சில வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களுக்கு விற்று விட்டது. இது பார்தி பங்குகளில் கடந்த இரு மாதங்களில் செய்யப்பட்ட இரண்டாவது பெரிய Block Deal என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் இதே Warburg Pincus நிறுவனம் 1350 கோடி ரூபாய் மதிப்பிற்கான பார்தி பங்குகளை சில வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களுக்கு விற்று விட்டது. திங்களன்று காலை செய்யப்பட்ட இந்த டீலுக்குப் பிறகு பார்தி பங்குகள் 233 ரூபாய்க்கு எகிறியது. ஆனால் அன்று மாலை ரிசர்வ் வங்கி பார்தி பங்குகளை வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள்
  தன் அனுமதி இல்லாமல் வாங்குவதற்கு தடை விதித்தது. பார்தி பங்குகளில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் பங்கு 48% என்ற நிலையை எட்டி விட்டதால் இந்த நடவடிக்கை. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இந்தப் பங்குகளை வாங்க முடியாத சூழ்நிலையில் இந்தப் பங்குகள் விலை எகிறுவதற்கும் வாய்ப்புகள் இல்லை. எனவே முதலீட்டாளர்கள் பங்குகளை விற்க தொடங்கினர். பங்கு விலை சரிந்தது.  இன்று இந்தப் பங்குகள் குறைந்து விலையில் இருப்பதால் இந்தப் பங்குகளை வாங்குவதற்கு முதலீட்டாளர்கள் ஆர்வம்
  காட்டினர். பார்தி இருக்கட்டும் ஜெட் ஏர்வேசை கவனித்தாயா"

  "கவனித்தேன். ஜெட் ஏர்வேஸ் IPO விலையான ரூ 1100 ஐ விட 10% அதிக விலைக்கு 1,211 ரூபாய்க்கு பங்குச்சந்தையில் லிஸ்ட் செய்யப்பட்டது. திங்களன்று வர்த்தகத்தின் இடையே ரூ1,339 ஐ எட்டி பிறகு 1,172 ரூபாய்க்கு சரிந்து இறுதியில் 1,305 ரூபாயில் முடிந்தது. இது சுமார் 18% லாபம் என்று நினைக்கும் பொழுது நல்ல லாபம் தான் என்று சொல்ல வேண்டும். அது சரி.. திங்களன்று காலை ஜெட் ஏர்வேஸ் லிஸ்டிங், பார்தி Block Deal என்று நல்ல செண்டிமெண்ட்டும் இருந்த சந்தை பின் திடீரென்று சரிந்து விட்டதை கவனித்தாயா "

  "அதை கவனிக்கிறனோ இல்லையோ முதலில் இந்த சுண்டலை கவனிக்கலாம். பசி எடுக்குது"

  "சரியான தீனி பண்டாரம் ஆயிற்றே நீ" என்று செல்வாவை திட்டிக் கொண்டே சுண்டல் வாங்கினேன். மாங்காய் தேங்காய் என்று சுண்டலே ஒரு கதம்பமாக இருந்தது. கடற்கரையும் சுண்டலும் ஒட்டிப்பிறந்தவையோ என்று எனக்கு சில நேரங்களில் தோன்றும்.

  "சரி..சுண்டல் வாங்கியாச்சு,  நான் கேட்டவைக்கு பதில் சொல்கிறாயா"

  "திங்களன்று சந்தையில் நகழ்ந்த சரிவை தானே கேட்கிறாய். கவனித்தேன். காலையில் 30 புள்ளிகள் உயர்வுடன் சந்தை தொடங்கினாலும் மதியத்திற்கு மேல் பார்தி பங்குகளில் வெளிநாட்டு முதலீட்டிற்கு ரிசர்வ் வங்கி விதித்த தடை மற்றும் மும்பையில் ஏற்பட்ட லேசான நிலநடுக்கம் போன்றவை சந்தையின் செண்ட்டிமெண்டை பாதித்தது. இது தவிர முதலீட்டாளர்களும் பங்குகளை விற்க தொடங்க திங்களன்று வர்த்தக முடிவில் BSE குறியீடு 43.69 புள்ளிகள் சரிவுற்று 6,810.04க்கும் NSE Nifty 7.65 புள்ளிகள் சரிந்து 2,146.35 க்கும் வந்து விட்டது".

  "இந்த சரிவிற்கு லாப விற்பனை தான் காரணம் என்று சொல்கிறாயா"

  "திங்களன்று சந்தையின் வர்த்தக இறுதியில் குறியீடுகள் சரிவுற்றதற்கு முக்கிய காரணம் லாப விற்பனை தான் என்று சொல்லலாம். நீயே கூட உன் பங்குகளை விற்று விட்டாய் அல்லவா ?"

  "ஆம் என்னிடம் இருந்த பார்தி பங்குகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடு பற்றிய அறிவிப்பு வெளியானவுடன் விற்று விட்டேன். அடுத்த வாரம் மறுபடியும் வாங்கலாம் என்றிருக்கிறேன். நீ விற்றிருக்க மாட்டாயே"

  "நான் விற்க வில்லை. நான் உன்னைப் போல ஸ்பெக்குலேட்டர் அல்லவே. நான் முதலீட்டாளன்"

  "சரி..சரி.. எதுக்கு இந்தப் பிரச்சனை. அதை விடு. யாருக்கு எது நன்றாக வருகிறதோ அதையே செய்ய வேண்டும். எனக்கு டிரேடிங்கில் லாபம் கிடைக்கிறது. அதைச் செய்கிறேன். உனக்கு நீண்ட கால முதலீடு தான் லாபம் தரும். அதைச் செய்கிறாய்"

  "சரி..அதை விடு. சந்தை இந்த வாரம் முழுவதும் சரிந்து கொண்டே இருக்கிறதே"

  "ஆம். சரிகிறது. சந்தை பட்ஜெட்டிற்கு பிறகு நல்ல உயர்வைப் பெற்றது. நிறையப் பங்குகள் இது வரையில்லாத உச்சக்கட்ட விலையில் இருக்கின்றன. குறியீடும் 7000 ஐ எட்டி விடும் நிலையில் இருக்கிறது. இந்த Pshychological பாதிப்புகள் சந்தையில் முதலீட்டாளர்களை பங்குகளை விற்க வைத்துள்ளது. இது தவிர வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களும் பங்குகளை
  விற்க தொடங்கி உள்ளார்கள்"

  "வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை விற்க தொடங்கியுள்ளது கவலை தரும் ஒன்று அல்ல என்பது தான் எனது கருத்து"

  "நான் உன்னுடைய கருத்தை ஒப்புக் கொள்கிறேன். இந்தியப் பொருளாதாரமும் இந்திய நிறுவனங்களும் உயர்ந்து கொண்டே இருக்கும் பொழுது வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களால் இந்தியப் பங்குச்சந்தையை விட்டு விலகி விட முடியாது. ஆனாலும் ஆசியாவில் இருக்கும்  பல பங்குச்சந்தையில் இருந்து வெளிநாட்டு முதலீடு விலகி கொண்டே இருக்கிறது. இந்தியாவிலும் இது தொடரக் கூடும் என்ற அச்சம் இருக்கத் தானே செய்கிறது"

  "நான் ஏற்கனவே கூறியது போல சந்தை சரியும் பொழுது அதற்கு பல வித காரணங்கள் வந்து சேர்ந்து விடும். நீ சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை. சந்தை சரிவதும் எகிறுவதும் இயல்பு தானே"

  "ஆம். கச்சா எண்ணெய் விலை உயர்ந்த பொழுது உள்ளுரில் இருந்த பாசிடிவ் விஷயங்களை மட்டுமே கவனித்த சந்தை இப்பொழுது கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 55 டாலர் என்ற இலக்கை எட்டியதும் உள்ளுரில் எந்த பாசிடிவ் விஷயங்களும் இல்லாத காரணத்தால் அதனை கூர்ந்து கவனிக்கிறது"

  "உனக்கு ஒன்று தெரியுமா ? கச்சா எண்ணெய் விலை இன்னும் எகிறக் கூடும் என்று சொல்கிறார்கள். நியுயார்க் Commodity சந்தையில் கச்சா எண்ணெய் Option ஒரு பேரல் 100 டாலருக்கு கொடுத்திருக்கிறார்களாம்"

  "எக்னாமிக்ஸ் டைம்ஸ் செய்தி தானே ? நானும் படித்தேன். ஆனால் அந்தளவுக்கு எகிறும் வாய்ப்பல்லாம் இல்லை. 55 க்கு வந்திருக்கும் கச்சா எண்ணெய் விலை இன்னும் சில டாலர்கள் எகிறினாலே பிரச்சனை பெரிதாகி விடும். நீ வேறு 100 டாலர் என்று சொல்லி மறுபடியும் சுனாமி வரப் போகிறது என்ற ரீதியில் பீதியைக் கிளப்பாதே"

  "எல்லோரும் பங்குகளை விற்பதும் குறியீடு சரிய முக்கிய காரணம் என்று சொல்வேன். வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள், உள்ளுர் பரஸ்பர நிதிகள், சிறு முதலீட்டாளர்கள் என அனைவரும் பங்குகளை விற்றிருக்கிறார்கள்"

  "UTI பரஸ்பர நிதி மிக அதிக அளவில் பங்குகளை விற்றிருக்கிறது. ஆனால் பல பரஸ்பர நிதிகள் தங்களின் IPO மூலமாக சுமார் 2000 கோடி திரட்டியுள்ளது. அந்தப் பணம் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படும். இது தவிர இம் மாத இறுதியில் டிரைவேட்டிவ்ஸ் பிரிவில் ஏராளமான Short Positions இருக்கிறது. இதனை சரி செய்ய பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்குவார்கள். அப்பொழுது பங்குகள் எகிறும் என்ற கருத்தும் இருக்கிறது"

  "சரி..இந்த வாரம் ஸ்டீல் பங்குகள் நல்ல விலை ஏறியதே"

  "ஆம் TISCO, SAIL போன்ற ஸ்டீல் பங்குகளுக்கு நல்ல ஏற்றம் இருந்தது. சர்வதேச ரீதியில் ஸ்டீல் விலையில் ஏற்றம் இருப்பதால் இந்தப் பங்குகள் உயர்ந்தன. ஆனால் இறுதியில் இந்தப் பங்குகளும் லாப விற்பனையால் சரிந்து போயின"

  "கடந்த வாரம் நன்றாக லாபம் பார்த்த வங்கிப் பங்குகள் இப்பொழுது சரிந்து விட்டதே"

  "இந்த வாரம் லாப விற்பனையால் வங்கிப் பங்குகள் சரிந்தாலும் வங்கிப் பங்குகளுக்கு நல்ல ஏற்றம் இருக்கிறது. வங்கித் துறையில் அறிவிக்கப்பட்டிருந்த சீர்திருத்தங்களுக்கு இந்த பட்ஜெட்டில் அளிக்கப்பட்ட உத்திரவாதம், வங்கித் துறைக்கு இருக்கும் எதிர்கால வாய்ப்புகள் போன்றவை முதலீட்டாளர்களுக்கு இந்தப் பங்குகள் மீது ஒரு காதலையே ஏற்படுத்தி விட்டன"

  "உண்மை தான் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களும் வங்கிப் பங்குகளில் தங்கள் முதலீட்டை அதிகரித்துள்ளனர். வங்கிப் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பில் சுமார் 21% வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் கைகளிலேயே இருக்கிறதேமே. வங்கிப் பங்குகளுக்கு ஏன் இந்த மவுசு ?"

  "வரும் ஆண்டுகளில் வங்கித் துறை சுமார் 14% வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியப் பொருளாதாரம் வளரும் சூழலில் அந்த வளர்ச்சியின் முக்கிய அங்கமாக இருக்கக்கூடியவை வங்கித் துறை தான். இந்திய தொழில் துறைக்கு தேவைப்படும் முதலீடு வங்கிக் கடன் மூலமாகத் தான் பெற முடியும். இதனால் வங்கிகளின் முக்கியத்துவமும் வங்கிகளுக்கு கிடைக்ககூடிய வர்த்தக வாய்ப்புகளும் அதிகரிக்கும். இதற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் வங்கிகளில் தற்பொழுதுள்ள SLR, CRR போன்ற உச்சவரம்பு நீக்கப்படும்
  என்று பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவித்தார். இதன் மூலம் வங்கிகள் தங்கள் கையிருப்பில் மிகுதியான பணத்தை வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. கையிருப்பில் இருக்கும் பணத்தை கடன் கொடுக்கலாம். இது வங்கிகளின் வர்த்தகத்தை அதிகரிக்கும்"

  "வெளிநாட்டு நேரடி முதலீடு வங்கித்துறையில் வரும் என்றார்களே ? அது என்னவாயிற்று"

  "வங்கித் துறையில் சுமார் 74% அந்நிய நேரடி முதலீட்டை கொண்டு வரும் திட்டமும் அரசிடம் உள்ளது. இதன் மூலம் UTI வங்கிப் போன்ற தனியார்
  வங்கிகளில் வெளிநாட்டு முதலீடு அதிகரிக்கும்"

  "நல்ல விஷயம் தான். இந்த மூதலீடு மிகவும் அவசியம். அந்நிய முதலீடு மூலம் வங்கித் துறைக்கு தேவைப்படும் நிதியுடன் வெளிநாட்டு வங்கிகளின் நவீன தொழில்நுட்பமும் சேரும் பொழுது வங்கித் துறையில் வர்த்தக ரீதியீலான போட்டி அதிகரிக்கும் தானே"

  "சரியாகச் சென்னாய்..பொதுத் துறை வங்கிகளும் தனியார் வங்கிகளுடன் போட்டியிடும் சூழல் இந்த முதலீடு மூலம் ஏற்படும். இவை அனைத்தும் வங்கிகளின் வர்த்தகத்தை அதிகரிக்கும். இந்த எதிர்கால ஏற்றம் தான் வங்கிப் பங்குகளுக்கு முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது".

  "எல்லாம் சரி தான் இந்த வாரம் BSE 153 புள்ளிகளும், NSE 45 புள்ளிகளும் சரிந்து விட்டனவே"

  "இது தான் நமக்கு வாய்ப்பு. குறியீடு உயர்ந்து பின் சரியும் பொழுது பங்குகளை வாங்கி விட வேண்டும். அப்பொழுது தான் நாம் லாபம் பார்க்க முடியும். இந்த சரிவு குறுகிய காலத்தில் மேலும் சரிவடையலாம். ஆனால் குறியீடு கூடிய விரைவில் 7000ஐ எட்டாமல் இருந்து விட முடியுமா"

  "உண்மை தான். பங்குகளின் குறைந்த விலையை நிர்ணயம் செய்து யாராலும் வாங்கவும் முடியாது, அதிக விலையை முடிவு செய்து விற்று விடவும் முடியாது. இடைப்பட்ட விலையில் பங்குகள் விலை குறையும் பொழுது வாங்கி விட வேண்டும். நாளையே வாங்கலாமா"

  "நமக்கு என்ன ஜோதிடமா தெரியும். சந்தையின் சூழலுக்கு ஏற்ப முதலீடு செய்து விட வேண்டியது தான்"

  கடற்கரையில் நன்றாக இருட்டி விட்டது. அலைகளின் சத்தம் ஆர்பரித்துக் கொண்டிருந்தது.

  "சரி..கிளம்பலாமா..வீட்டிற்கு போய் ஒரு வலைப்பதிவு எழுத வேண்டும். ஆமாம் நீ எப்பொழுது வலைப்பதிவு தொடங்க போகிறாய். பதிவுகளை படிக்கிறாயா"

  "படிக்கிறேனே..காதைப் பொத்திக் கொண்டு படிக்கிறேன்"

  "No Comments..நான் எந்த வம்புக்கும் வர விரும்பவில்லை. அடுத்த வாரம் மீண்டும் சந்திப்போம்"

  இந்த வாரச் சந்தை நிலவரம்

  மும்பை பங்குச்சந்தை குறியீடு - BSE

  சந்தை தொடங்கிய நிலை = 6,853.73
  சந்தை முடிவுற்ற நிலை = 6,700.34

  தேசியப் பங்குச்சந்தை குறியீடு - NSE

  சந்தை தொடங்கிய நிலை = 2,154.00
  சந்தை முடிவுற்ற நிலை = 2,109.15

  சரிவு / உயர்வு நிலை

  மும்பை பங்குச்சந்தை - BSE = 153 புள்ளிகள் சரிவு
  தேசியப் பங்குச்சந்தை - NSE = 44 புள்ளிகள் சரிவு

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2005 Tamiloviam.com - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |