இயக்குனர் ஆர். செல்வராஜ் சமூதாய அக்கரையுடன் இயக்கியிருக்கும் படம் உப்பு. தெருவை சுத்தம் செய்யும் தினக்கூலிகளின் அவலநிலையையும், அன்பிற்கும் பாசத்திற்கும் ஏங்கும் அவர்களின் நிலையை கண்முன்னே நிறுத்தியிருக்கிறார் இயக்குனர்.
படத்தில் தெருவை சுத்தம் செய்யும் பெண்ணாக ரோஜா (உப்பு). ரோஜா நிஜமாகவே "நடித்திருப்பது" இந்த படத்தில்தான். இந்தப் படத்திற்காக தெருவை சுத்தம் செய்பவர்களோடு பழகி அவர்களுடைய பழக்க வழக்கங்களை தன் நடிப்பால் அசத்தியிருக்கிறார். படத்தில் ஸ்டார் வேல்யூ உள்ள ஒரே ஆளும் இவர்தான். முன்பு கதாநாயகியாக பளிச்சென்று வந்த ரோஜா, இதில் படம் முழுவதும் ஒரு வித சோகத்துடன் வருகிறார்.
இவருடைய கணவராக வரும் வேந்தன், லண்டனிலிருந்து வந்தவர். இவர்களைத் தவிர பெயர் தெரியாத சின்னத் திரை நட்சத்திரங்கள்.
தெரு சுத்தம் செய்பவர்களை ஒதுக்கும் சமூதாயம் - அதை எதிர்த்து போரிட நினைக்கும் பெண் - பணம் படுத்தும் பாடு - நம்பிய வாழ்க்கைத்துணை ஏமாற்றுவது - முடிவில் வாய்ஸ் ஓவரில் இயக்குனர் பேசுவதும் - சோகம்.
படத்திற்கு இசை இசைஞானி இளையராஜா. ஜி. அசோகன் மற்றும் செந்தில் விநாயகர் படத்தை தயாரித்துள்ளனர்.
|