மார்ச் 23 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
உடல் நலம் பேணுவோம் : பறவை காய்ச்சல்
- பத்மா அர்விந்த்
| Printable version | URL |

பறவை காய்ச்சல் ஏற்படுத்தும் இன்ஃளுயன்ஸா H5N1 வைரஸ் பறவைகளில் காணப்படும். பறவைகளிடையே விரைவாக பரவக்கூடிய தொற்றுநோய்க்கு காரணமான இந்த நுண்ணுயிர்க்கிருமி சில வகை மரபணு மாற்றங்களால் மனிதரிடையேயும் பரவக்கூடும். கால்நடைகளிடையே சமீபத்தில் மிக அதிகமாக பரவி இருக்கும் இந்த காய்ச்சல் உலகத்தில் பல நாடுகளில் இருப்பதால், பறவைகளும் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு இடம் மாறுவதாலும், இறைச்சிக்காக ஏற்றுமதி செய்யப்படுவதாலும் மிகுந்த கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.
 
இவை பெரும்பாலும் ஏற்கெனவே நோயுற்ற கால்நடைகளின் அருகாமை, சுத்தம் செய்யப்படாத இடத்தில் வைத்த உணவு போன்றவைகளால் ஏற்பட்டிருக்க கூடும். மனிதர்களுக்கும் இந்த காய்ச்சல் பரவக்கூடும் எல்லா இன்ஃளுயன்ஸா கிருமிகளும் மரபணுக்களில் மாற்றம் அடையக்கூடியதென்பதாலும், மனிதருக்கு வந்தால் ஒருவரிடம் இருந்து இன்னொருவர்க்கு பரவுவது எளிது என்பதாலும் விஞ்ஞானிகள் கவலை கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.

மனிதரிடையே பறவைக்காய்ச்சல் வந்த விவரம்: ஜனவரி 2004 முதல் கம்போடியா, சீனா, இந்தோனேசியா, தாய்லந்து, வியட்நாம், துருக்கி மற்றும் இராக்கில் வந்ததாக தெரிகிறது.

தாய்லாந்தில் அக்டோபர், நவம்பர் டிசம்பரில் பல நோயாளிகள் பறவைக்காய்ச்சல் கொண்டதாக தெரிகிறது..
2004 ஜூன் கடைசியில்மிக கொடிய பறவை காய்ச்சல் கிருமிகள் பாதிப்பால் பல கால்நடை மிருகங்கள் பாதிக்கப்பட்டதாக ஆசியா மற்றும் ஐரோப்பா கண்டத்தின் நாடுகளில் இருந்து வந்த செய்திகள் தெரிவிக்கின்றன. ஜூன் 2005 இல் கம்போடியா, சீனா, மங்கோலியா, க்ரோடியா, ரோமானியா நாடுகளில் பறவைகள் மூலமாக இந்த காய்ச்சல் பரவுவதாக சொல்லப்பட்டது.

கீழே உள்ள வரைபடம் நாடுகளில் பறவைக்காய்ச்சல் கிருமிகள் பரவும் தற்போதைய நிலையை சொல்லும்.

BirdFlu Affected Countriesதற்போதைய நிலைமை:

H5N51 மூலம் நோய்க்கிருமிகள் மனிதர்களுக்கும் பரவ  கூடிய சாத்தியங்களும், அதனால் பாதிக்கப்பட்ட மனிதர்களும் இருக்கிறார்கள். கீழ்க்கண்ட அட்டவணை அதை தெளிவு படுத்துகிறது.

Cumulative Number of Confirmed Human Cases of Avian Influenza A/(H5N1) Reported to WHO  (24 March 2006)

 

 

Country
2003
2004
2005
2006
Total
 
Cases
Deaths
Cases
Deaths
Cases
Deaths
Cases
Deaths
Cases
Deaths
Azerbaijan
0
0
0
0
0
0
7
5
7
5
Cambodia
0
0
0
0
4
4
1
1
5
5
China
0
0
0
0
8
5
8
6
16
11
Indonesia
0
0
0
0
17
11
12
11
29
22
Iraq
0
0
0
0
0
0
2
2
2
2
Thailand
0
0
17
12
5
2
0
0
22
14
Turkey
0
0
0
0
0
0
12
4
12
4
Vietnam
3
3
29
20
61
19
0
0
93
42
Total
3
3
46
32
95
41
42
29
186
105

Total number of cases includes number of deaths.
WHO reports only laboratory-confirmed cases.

சில வகை கிருமிகளுக்கு மனிதர்களின் உடலின் இயற்கையான எதிர்ப்பு சக்தி உண்டு. ஆனால் பறவைக்காய்ச்சலுக்கான இன்ஃளுயன்சா கிருமிகளுக்கு இயற்கையான எதிர்ப்பு சக்தி இல்லை. ஆகையால் இந்த கிருமிகள் மனிதர்களிடம் விரைவாக பரவ சாத்தியங்கள் இருப்பதால் அதிக கவலையைத் தருகிறது.
மேலும் வியட்நாமில் பாதிக்கப்பட்ட மனிதனின் உடலில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட கிருமியின் மரபணு வரிசைப்பட்டியலில் (sequencing) பல நோய் எதிர்ப்பு ஆண்டிபையாடிக்ஸ் என்னும் மருந்துகளுக்கும், வரஸ் கிருமிகள் கொல்லும் மருந்துகளின்  வினைகளுக்கு தடை இருப்பதும் கவலலயை இன்னும் அதிகரிக்கிறது.
இதற்கு மிக விரைவாக தங்கள் மரபணுக்களின் வரிசையை மாற்றிக்கொள்லும் சக்தி இருப்பதால்தான் என்பதும் தெரிய வருகிறது. தற்போதைய h5n51 நோய்க்கிருமிகள் ஆஸெல்ட்மிவிர், சானாமிவிர் போன்ற மருந்துகளுக்கு செயலிழக்கின்றன. இன்னமும் தடுப்பூசி செலுத்த மருந்து ஆராய்ச்சி நிலையில் இருக்கின்றது.
ஆராய்ச்சிகள் படி இப்போது பரவி வரும் நோய்க்கிருமிகள் முன்பெப்போதும் இருந்ததைவிட அதிக வீரியம் இருப்பதாக தெரிய வருகின்றது. 2004இல் வியட்நாமில் இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தைக்கு முதலில் சுவாச நோயாக ஆரம்பித்து அதன்பின் அவனுடைய தண்டுவடம், குடல் என்று எல்லா இடங்களிலும் பரவியது கண்டுகொள்ளப்பட்டது. இதனால், இவ்வகை கிருமிகள் ஒரு குறிப்பிட்ட இயக்கத்தை மட்டும் பாதிக்காமல் பல இடங்களையும் பாதிக்க வல்லதாக தெரியவருகிறது. தற்போது பறவைக்காய்ச்சல் உள்ள நாடுகளில் இருந்து பறவைகளை இறக்குமதி செய்வது நிறுத்தப்பட்டிருக்கிறது. பயணம் செய்ய விரும்புபவர்கள் கீழ்க்காணும் இணய தளத்தில் இருந்து பயணத்தின் முன் மேற்கொள்ள வேண்டிய பரிசோதனைகள், பாதுகாப்பு செய்கைகள் பற்றி தெரிந்து கொள்ளவும்.

Also see Guidelines and Recommendations - Interim Guidance about Avian Influenza A (H5N1) for  Citizens Living Abroad.

அமெரிக்காவில் என்ன செய்கிறோம்?:  மே 2005இல் அமெரிக்க நோய் தடுப்பு நிறுவனம் உலக அலவில் உலக மயமாகும் ப்ளூ தடுப்பு வேலைச் எய்யும் முழுவில் சேர்ந்து கொண்டது. இந்த குழு உலக அளாவில், அமெரிக்காவின் உள்நாட்டு அளாவில் இந்த காய்ச்சலை தடுக்க திட்டங்கள் தீட்டிவருகிறது.

உள்நாட்டு அளவில் பறவைக்காய்ச்சல் பரவுவதை கவனமாக கண்காணிக்கிறோம்.
இதற்காக ஒரு உடல் நல  அபாய அறிவிப்பு ஏற்பாடு செய்யப்பட்டு என் போன்றவர்களுக்கு 24 மணி நேரமும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன..  உடனே ஆ   வ  ண     செய்ய பணிக்கப் பட்டிருக்கிறார்கள். எப்படி பறவைக்காய்ச்சலை கண்டுபிடிப்பது, திடீரென தொற்றுநோயாகிவிட்டால் எப்படி தடுப்பூசிகள் கொடுப்பது, எங்கே உணவகங்கள் ஏற்படுத்துவது போன்ற திட்டமிடுதலை ஆரம்பித்து செய்து வருகிறோம்.

இராணுவம், வெட்டிரன் குழு மற்றும் பல அரசு அலுவகங்கள், மன நல சிகிச்சையகங்கள் இவற்றுடன் பல வித திட்டங்கள் தயாரித்து அவற்றை சோதனை செய்து வருகிறோம்.

உலக அளவில் பல்லாயிரக்கணக்கான தொகையில் ஒரு கண்காணிப்பு மையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

துரித கதியில் பரிசோதனைகள் செய்ய சோதனைச்சாலைகள் தொடங்க நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. நிறைய பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டிருக்கிறது.  உடனுக்குடன் கண்டறிய, ஒரு தொகுப்ப பரிசோதனை பை வழங்கப்பட்டிருக்கிறது. இதைக்கொண்டு நாமே (தனியார் மருத்துவமனைகளில்) காய்ச்சல் எந்த வகை சேர்ந்தது என்று கண்டறிய முடியும்.

சாதாரண காய்ச்சல் போலவே கை கழுவாமல் எந்த உணவையும் உண்ணாதீர்கள். அதேபோல தும்மும் போதும் இருமும் போதும் பக்கத்தில் இருப்பவர் கவனம் கொண்டு கைக்குட்டையால் மூக்கை மூடிக்கொள்ளுதலும், வீட்டில் யாருக்கேனும் உடல் நிலை சரி இல்லை என்றாலும் கதவு திறக்கும் கைப்பிடி போன்றவற்றை துடைப்பதும் போன்ற பழக்கங்களை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.

|
oooOooo
பத்மா அர்விந்த் அவர்களின் இதர படைப்புகள்.   உடல் நலம் பேணுவோம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |