மார்ச் 24 2005
தராசு
வ..வ..வம்பு
மஜுலா சிங்கப்புரா
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
உள்ளங்கையில் உலகம்
பங்குச்சந்தை ஒரு பார்வை
கவிதை
முத்தொள்ளாயிரம்
திரைவிமர்சனம்
அறிவிப்பு
நையாண்டி
 
  முதல் பக்கம்
தொடர்கள்
இலக்கியவாதி  புதிது
- சத்யராஜ்குமார்
ஹர்ஷத் மேத்தா  புதிது
- சசிகுமார்
- சத்யராஜ்குமார்
கோடிட்ட இடங்கள்
- சித்ரன்
சுய சாசனம்
- பாஸ்டன் பாலாஜி
என்னை எழுதியவர்கள்
- சத்யராஜ்குமார்
களம்
- நாகூர் ரூமி
கங்கை இல்லாத காசி
- பாஸ்டன் பாலாஜி
வார்த்தையல்ல, வாக்கியம்
- என். சொக்கன்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
 
உள்ளங்கையில் உலகம் : அமெரிக்காவில் செல்லிடைபேசி
- எழில்
| Printable version |

அமெரிக்காவில் ஏற்பட்ட செல்லிடைபேசி வளர்ச்சி குறித்துப் பார்ப்போம். எண்பதுகளில் அமெரிக்காவிலும் பல ஒப்புமை (analog) செல்பேசிச் சேவைகளே இயங்கி வந்தன. சுமார் நான்கு விதமான செல்பேசிச் சேவைகள். எனினும் இவற்றிலும் பல்வேறு குறைபாடுகள். பின்னர் இலக்க முறையில்(Digital) சேவை வழங்கும் எண்ணத்தில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு சி டி எம்  ஏ (CDMA) என்று செல்லமாய் அழைக்கப்படும் குறியீட்டுப் பகுப்பு பல்லணுகல் முறை (Code Division Multiple Access) யைப் பின்பற்ற முடிவு செய்யப்பட்டது. இந்த முறை 1950களில் அமெரிக்க இராணுவம் பயன்படுத்திய சமிக்ஞை முறையின் அடிப்படையில் அமைந்தது. போர்க்காலங்களில் தகவல் பறிமாறிக்கொள்ள இராணுவத்தினர் கம்பியில்லாத் தந்தி முறையைப் பயன்படுத்துவது நாம் அறிந்ததே. இவ்வாறு ராணுவத்திற்குள் அனுப்பப்படும் தகவலானது எதிரி நாட்டவரால் ஒட்டுக் கேட்கப்படும் அபாயம் உள்ளது. மேலும் ஒரு நாட்டு ராணுவத்தினற்கிடையே பறிமாறிக்கொள்ளும் தகவலை அழிக்க அந்தத் தகவல் அனுப்பிய  அதே அதிர்வெண்ணில் (frequency) சக்தி வாய்ந்த இடையூறு (Noise) களை  எதிரி நாடு அலைபரப்பி தகவலை வலுவிழக்கச் செய்யலாம்.  இத்தகைய இடையூறுகளைத் தவிர்க்கும்  ஆற்றலும், ஒட்டுக்கேட்பதை முற்றிலும் ஒழிக்கும் வண்ணமும் அமைந்த ஒரு அற்புத முறையே சி டி எம் ஏ.

இராணுவத்திற்குப் பயன்படுத்திய இம்முறைமையை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தும் வண்ணம் மாற்றியமைக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அமெரிக்காவின்  ஸான் டிகோ (San Diego) நகரில் மையங்கொண்ட பெரிய நிறுவனமான க்வால்காம் (QualComm)  இம்முயற்சியில் இறங்கி ஒரு செல்பேசித் திட்டத்தை வடிவமைத்தது. 1989-ல் இத்திட்டம் வெற்றிகரமாகப் பரிசோதித்துப் பார்க்கப்பட்டது. பின்னர் வழக்கம் போல் திட்ட வரையறைகள் வகுக்கப்பட்டன. 1993-ல் முடிவான இத்திட்டம்  இடைநிலை வரையறை- 95 (Interim Standard IS-95) என்றழைக்கப்பட்டது.  வட அமெரிக்கா முழுவதும் இத்திட்டம் வணிக அடிப்படையில் அமைக்கப்பட்டு வெற்றி பெற்றது. தென் கொரியாவும் இம்முறையைப் பயன்படுத்த ஆரம்பித்தது.இந்தியாவிலும் சி டி எம் ஏ செல்பேசி முறை பரவலானது. ரிலையன்ஸ் நிறுவனம் அளிக்கும் செல்பேசிச் சேவை இவ்வகையைச் சேர்ந்தது தான். உலகம் முழுவதும் இந்தச் சேவையைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை  24 கோடி ஆகும்.

ஜி எஸ் எம் மற்றும் சி டி எம் ஏ தவிர மற்றொரு  செல்பேசி முறையும் உண்டு. ஜப்பானில் பின்பற்றப் படும் முறையே அது. தனியாள் கைத்தொலைபேசி அமைப்பு (Personal Handy System, PHS) என்று அத்திட்டத்தை அழைக்கிறார்கள்.

இத்தனை செல்பேசிச் சேவைத் திட்டங்கள் இருக்கிறதே! அவை எந்தெந்த அதிர்வெண்ணில் (Frequency) இயங்குகின்றன என்று பார்ப்போமா? அனைத்து எண்களும் மெகா ஹெர்ட்ஸ்-ல் (MHz).

ஜி எஸ் எம் -  900 , 1900 , 1800 
ஜி எஸ் எம் 850 ( இது அமெரிக்காவில் )
சி டி எம் ஏ - 800
பி ஹெச் எஸ் - 1900.

சரி, மற்ற செல்பேசிச் சேவைகளை மறந்துவிட்டு, உலகின் 85 விழுக்காட்டினர் பயன்படுத்தும் ஜி எஸ் எம் சேவையைச் சற்று விரிவாயக் கவனிப்போம்.

இரண்டாம் தலைமுறைச் செல்பேசிச் சேவை, என்னென்ன சேவைகளை வாடிக்கையாளருக்கு வழங்குவதாய் உறுதி அளித்தது? மூன்று வகைச் சேவைகள்.

1. தொலைச் சேவைகள் (Tele Services) : தொலைபேசல், குறுந்தகவல் , அவசர அழைப்பு (Emergency call)  மற்றும் தொலைநகல் (Telefax). தொலைநகல் இயந்திரத்தை உங்கள் செல்பேசியுடன் இணைத்து, உங்கள் செல்பேசி மூலம் தொலைநகல் அனுப்ப முடியும்.

2. தாங்குனர் சேவைகள்(Bearer Services): செல்பேசி மூலம் தரவு (Data) பரிமாற்றம் செய்ய உதவும் சேவை இது. ஆனால் தரவுப் பரிமாற்ற வேகம் மிகக் குறைவு. 9.6 கிலோபைட்டுகள் வேகம் தான். ஆமை வேகம்!

3. உப சேவைகள்(Supplementary Services): இந்த உப சேவைகள் தனியாக எந்தப் பயனையும் அளிப்பதில்லை. தொலைச் சேவைகளுக்கு உதவி செய்பவை அல்லது தொலைச்சேவைகளை மேம்படுத்த உதவுபவை. உதாரணத்திற்கு , அழைப்புக் காத்திருத்தல் (Call Waiting) என்பது ஒரு உப சேவை. நீங்கள் ஒரு நண்பருடன் செல்பேசியில் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். அப்பொழுது இன்னொருவர் உங்கள் எண்ணை அழைத்தால் அவருக்கு, "நீங்கள் அழைத்த எண் உபயோகத்தில் உள்ளது (Busy)" எனும் செய்தி அனுப்பப்படும். உங்களது இரண்டாவது நண்பர் உங்களை அழைத்ததே உங்களுக்குத் தெரியாமல் போய் விடும். ஆனால் நீங்கள் "அழைப்புக் காத்திருத்தல்" சேவையை அனுமதித்திருந்தீர்களேயானால் இரண்டாவது நண்பர் உங்களை அழைக்கும் போது உங்களுக்கு அவ்வழைப்பைத் தெரியப்படுத்திவிடும். இரண்டாவது அழைப்பை ஏற்றுக்கொள்வதும் அதனை வெட்டி விட்டு முதல் அழைப்பையே தொடர்வதும் உங்கள் விருப்பம்.  உப சேவைக்கு இன்னுமொரு உதாரணம்: அழைப்பைத் திருப்பல் (Call Divert). உங்களுக்கு வரும் அழைப்பை வேறு ஒரு எண்ணுக்குத் திருப்பி அனுப்புதல். இதுபோல அழைப்பை நிராகரிக்கும் (Call Barring) சேவையும் உண்டு. உங்களுக்கு வரும் அழைப்புகள் அனைத்தையும் நீங்கள் நிராகரிக்க வேண்டுமெனில் இச்சேவையைச் செல்பேசியில் தேர்ந்தெடுத்தால் போதும்! பின்னர் ஒருவரும் உங்களைத் தொந்தரவு செய்ய முடியாது.

ஒரு கம்பியில்லா வலையமைப்பில் (Wireless Network) என்னென்ன கூறுகள் இருக்கின்றன? அதாவது செல்பேசி வலையமைப்பு எவற்றைக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது? சாதாரணமாய்ப் பார்த்தால், நமக்கு நாம் பயன்படுத்தும் கைக்கருவியைத் தவிர வேறு எதுவும் தெரிவதில்லை. மிஞ்சிப் போனால் சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ள உயர்ந்த ஆன்டெனாக்களைப் பார்த்திருப்போம். ஆனால் செல்பேசி வலையமைப்பு, பல்வேறு கூறுகள் ஒன்றாக இணைக்கப்பட்டு இயங்குவது. அவை அனைத்தையும் ஒவ்வொன்றாக  விளக்கலாம்.
அதற்கு முன்பு கைக் கருவியைப் பற்றி சிறிது அறிந்து கொள்ளலாமா?

செல்லிடை பேசி இரு கூறுகளாலானது; கைக் கருவி (Mobile Equipment ) மற்றும் பயனாளர் அடையாள அட்டை (Subscriber Identity Module, SIM). அனைவராலும் ஸிம் கார்ட் என்று செல்லமாக அழைக்கப்படும் இந்த அட்டை இல்லையேல் கைக்கருவியால் பயன் ஏதும் இல்லை. கைக்கருவி உடல் என்றால் ஸிம் அட்டை உயிர் போன்றது. "கைக்கெட்டியது வாய்க்கெட்டாதது போல" என்ற பழமொழியை "செல்போன் இருந்தும் ஸிம் கார்ட் இல்லாதது போல்" என்று இனிமேல் மாற்றிக்கொள்ளலாம். ஸிம் இல்லாத கைக்கருவியிலிருந்து அவரச போலீஸ் எண்ணை மட்டும் அழைக்க முடியும் , மற்றபடி வேறொன்றும் செய்ய இயலாது.

எல்லாக் கைக்கருவிக்கும் ஒரு வரிசை எண் உண்டு, அந்த எண் ஒரு குறிப்பிட்ட கைக் கருவியை அடையாளம் காட்ட உதவும். சர்வதேச கைக்கருவி அடையாள எண் (International Mobile Equipment Identity , IMEI) என்று இதை அழைக்கலாம். உங்கள் செல்பேசியில் *#06#  என்று உள்ளிடுங்கள். பதினைந்து அல்லது பதினாறு இலக்க எண் செல்பேசித் திரையில் தெரியலாம். உங்கள் கைக்கருவி   தொலைந்து விட்டால் அதனைக் கண்டு பிடிப்பது சிரமம் என்றாலும், இந்த எண்ணைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த எண்ணை உங்களது சேவை வழங்குனரிடம் அறிவித்து , அது தொலைந்து விட்டதென நீங்கள் புகார் செய்தால், உங்களது கைக்கருவியை பிறர் பயன்படுத்தா வண்ணம் அதை முடக்கும் வசதியும் உண்டு. இது பற்றி பின்னர் விரிவாகக் கூறுகிறேன்.

கைக்கருவியில் என்னென்ன பகுதிகள் இருக்கின்றன? நாம் பேசும் பேச்சை, அதாவது ஒலி அலைகளை மின் அலைகளாக மாற்றும் ஒலிவாங்கி(Mic) , ஒப்புமை நிலையிலுள்ள மின் அலைகளை இலக்க முறைக்கு மாற்றும் மாற்றி (Analog to Digital Converter) , மாற்றிய  இப்பேச்சு அலைகளை குறியீடு செய்யும் குறிமுறை மாற்றி (Coder/Decoder) , இந்தச் சமிக்ஞைகளை உயர் அதிவெண்ணுக்கு மாற்றும்  தொகுப்பி (Synthesizer),  மாற்றிய இவ்வலைகளை வலையமைப்பிற்கு அனுப்ப உதவும் செலுத்தி(Transmitter) , சமிக்ஞைகளைச் செலுத்தவும், பெறவும் உதவும் அலைக்கம்பம் (Antenna) , செல்பேசி பெற்ற சமிக்ஞைகள் அலைக்கம்பம் வழியே பெறும் பெறுனர் (Receiver) , அவற்றை மீண்டும் மின் அலைகளாக மாற்றும் மாற்றி (Digital to Analog converter) எதிர்முனையில் பேசுபவரின் பேச்சுக்களை வாங்கி அம்மின் அலைகளை மீண்டும் ஒலி அலைகளாக மாற்றும் ஒலி பெருக்கி (Loud Speaker)  எனப் பட்டியல் நீள்கிறது. இவ்வளவு பகுதிகள் இருந்தாலும்  மேற்சொன்ன பகுதிகளில் பலவும் ஒரு சில்லில் (Chip) அடைக்கப்பட்டு விடுவதால் செல்பேசியின் அளவு சிறியதாக்க முடிகிறது. முன்பெல்லாம் செல்பேசிகளில் ஆன்டெனாக்கள் நீட்டிக் கொண்டிருந்தன, தற்போது ஆன்டெனாவையும் உள் வைத்தே அடைக்க முடிகிறது. மேலும், தகவல்களைச் சேமிக்க நினைவகமும் (Memory) , அனைத்துச் செயல்களையும் சரிவரி இயங்க வைக்க ஒரு செயலியும் (Processor) உண்டு.

ஸிம் அட்டையும் ஒரு சிறிய நுண்செயலிதான் (MicroProcessor) . தவிர நிறையக் கோப்புகளைச் சேமித்து வைக்கும் இடமாகவும் இது பயன்படுகிறது. உங்கள் பேசி எண், எந்த நெட்வொர்க்குச் சொந்தமானது என்ற தகவல், சில ரகசியமான தகவல்கள் (உதாரணம், தனியாள் அடையாள எண் , PIN) , வலையமைப்பிற்கும் செல்பேசிக்குமிடையே பரிவர்த்தனை நடைபெறுகையில் தேவைப்படும்  முக்கியத் தகவல்கள் என பல்வேறு குறிப்புக்கள் இந்த அட்டையில் சேமித்து வைக்கப்படுகின்றன. ஒவ்வொரு கைக்கருவிக்கும் ஒரு அடையாள எண் இருப்பதைப்போல ஒவ்வொரு ஸிம் அட்டைக்கும் ஒரு தனி எண் உண்டு. சர்வதேச செல்பேசிப் பயனாளர் அடையாள எண் (International Mobile Subscriber Identity ,IMSI ) என்றிதைக் குறிப்பிடுகிறார்கள். இந்த எண்ணிற்கும் , செல்பேசி எண்ணிற்கும் (Mobile Number)ஒரு சம்மந்தமும் இல்லை. ஆனால்  நெட்நொர்க்கிலிருந்து கைக்கருவிக்குத் தகவல் பரிமாற்றம் நிகழ்கையில்  இந்த எண் கொண்டே உங்கள் செல்பேசி எண் அடையாளம் காணப் படுகிறது.

வலையமைப்பில் உள்ள மற்ற கூறுகளை அடுத்த பதிவில் பார்ப்போம்.

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com - Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |