மார்ச் 24 2005
தராசு
வ..வ..வம்பு
மஜுலா சிங்கப்புரா
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
உள்ளங்கையில் உலகம்
பங்குச்சந்தை ஒரு பார்வை
கவிதை
முத்தொள்ளாயிரம்
திரைவிமர்சனம்
அறிவிப்பு
நையாண்டி
 
  முதல் பக்கம்
தொடர்கள்
இலக்கியவாதி  புதிது
- சத்யராஜ்குமார்
ஹர்ஷத் மேத்தா  புதிது
- சசிகுமார்
- சத்யராஜ்குமார்
கோடிட்ட இடங்கள்
- சித்ரன்
சுய சாசனம்
- பாஸ்டன் பாலாஜி
என்னை எழுதியவர்கள்
- சத்யராஜ்குமார்
களம்
- நாகூர் ரூமி
கங்கை இல்லாத காசி
- பாஸ்டன் பாலாஜி
வார்த்தையல்ல, வாக்கியம்
- என். சொக்கன்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
 
பங்குச்சந்தை ஒரு பார்வை : பரஸ்பர நிதி - ஒரு பார்வை
- சசிகுமார்
| Printable version |

இந்த வாரம் பரஸ்பர நிதிகளைப் பற்றி கொஞ்சம் கவனிக்கலாம்.

அடுத்த மாதம் ஒரு புதிய நிதி ஆண்டு தொடங்குகிறது. நம்முடைய சேமிப்புகளும், வருமான வரி விகிதங்களிலும் இந்த பட்ஜெட் மூலமாக நிறைய மாற்றங்களை எதிர்நோக்கி இருப்பதை அறிந்திருப்பீர்கள். சம்பளம் வாங்குபவர்களின் கைகளில் கணிசமான பணத்தை ப.சிதம்பரம் விட்டுவைத்துள்ளார். இது தவிர நமது சேமிப்பு முறைகளிலும் நிறைய மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். இதில் முக்கியமானது பரஸ்பர நிதியில் செய்யும் முதலீடுகளுக்கும் வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கும் முறை.

இது வரை வரி விலக்குகளுக்காக மட்டுமே சேமித்து கொண்டிருந்த நாம் இப்பொழுது நமது முதலீடுகளுக்கு வருமான வரியில் இருந்து விலக்கு கொள்வதோடு மட்டுமில்லாமல் பணத்தையும் பெருக்கி கொள்ள முடியும்.

நம்முடைய முதலீடு எப்படி அமைய வேண்டும் ?

பரஸ்பர நிதியுடன், வீட்டுக் கடன், காப்பீடு போன்றவற்றிலும் நாம் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டுமென்று தான் நான் நினைக்கிறேன்.

வீடு ஒரு அற்புதமான முதலீடு. சென்னையை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு சாதாரண வீட்டிற்கு கூட இன்று சுமாராக 3000 ரூபாயை வாடகையாக கொடுக்க வேண்டும். இது தவிர சம்பளத்திலும் ஒரு கணிசமான தொகை வருமான வரியில் சென்று விடுகிறது. ஆனால் வீட்டுகடன் எடுத்து சொந்தமாக வீடு வாங்கும் பொழுது வீட்டு வாடகை மற்றும் வருமான வரியில் மிச்சப்படுத்தப்படும் தொகை போன்றவற்றுடன் மேலும் ஒரு தொகையை கொண்டு நம் வீட்டுக் கடனை திருப்பிச் செலுத்தலாம்.

தற்பொழுதுள்ள சேமிப்பிற்கான 1லட்சம் உச்சவரம்பில் வீட்டுக்கடனுக்கான நமது முதலீடையும் சேர்த்துக் கொள்ளலாம். அதாவது வீட்டுக்கடனுக்கான முதலீட்டு தொகையை இந்த 1 லட்சம் விலக்குகளில் கொண்டு வரலாம். அதே நேரத்தில் அதற்கான வட்டி தொகையையும் வருமான வரியில் இருந்து விலக்கு பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு வீட்டுக் கடனுக்காக நாம் செலுத்தும் அனைத்துப் பணமும் வருமான வரியில் இருந்து விலக்கு பெற்று விடுகிறது.

பட்ஜெட்டை பார்த்து விட்டு வீடு வாங்கலாம் என்று நினைத்தவர்கள் இனி மேல் இந்த முதலீடுகளில் கவனம் செலுத்தலாம்.

அடுத்த நல்ல முதலீடு காப்பீடு. இப்பொழுது பல காப்பீடுகள் உள்ளன. ஆயுள் காப்பீட்டுடன், ஓய்வுதியம் போன்றவையும் நல்ல முதலீடு தான். ஆனால் நமக்கு எந்தளவுக்கு காப்பீடு வேண்டும் என்பதைக் கொண்டு முதலீடு செய்யலாம். வரி விலக்குகளுக்காக தேவையில்லாத காப்பீடுகளை எடுக்கும் நிலை இனி இல்லை.

இந்தப் பட்ஜெட்டின் முக்கியமான ஒன்று - பங்குச்சந்தையில் பரஸ்பர நிதி மூலமாக முதலீடு செய்யும் தொகைக்கும் வருமான வரியில் இருந்து விலக்கு பெற்றுக் கொள்ளலாம் என்பதே.

உதாரணமாக மற்ற முதலீடுகள் தவிர சுமார் 50,000 ரூபாயை பரஸ்பர நிதியில் முதலீடு செய்வதாக வைத்துக் கொள்வோம். இந்த தொகை முழுமைக்கும் வருமான வரி விலக்கு கிடைக்கிறது. இது தவிர பரஸ்பர நிதியில் சாதாரணமாக 15 - 20% வரை லாபம் கிடைக்கும். இதற்கும் வரி கிடையாது. ஆக பணமும் பெருகிறது. நல்ல விஷயம் தானே ?

ஆனால் எந்த வகையான பரஸ்பர நிதியில் முதலீடு செய்வது ?

பங்குச்சந்தையில் எந்தப் பங்குகளில் முதலீடு செய்வது என்பதை தேர்ந்தெடுப்பது போலவே பரஸ்பர நிதியில் எந்த நிதியை தேர்ந்தெடுப்பது என்பதிலும் கவனம் தேவைப்படுகிறது.

நான் வைத்திருக்கும் பரஸ்பர நிதியில் 50-60% வரை லாபம் கொடுக்கும் பரஸ்பர நிதிகளும் உண்டு. 30, 20, 15 என்று வெவ்வெறான எண்களில் லாபம் கொடுக்கும் பரஸ்பர நிதிகளும் உண்டு.

ஒரு பரஸ்பர நிதியின் வெற்றியை எவ்வாறு கண்டு கொள்வது.

உதாரணமாக இந்த ஆண்டு நமது பங்குச்சந்தை 15% லாபம் அடைந்திருக்கிறது என்றால் நமது பரஸ்பர நிதிகள் அதை விட அதிகம் லாபம் அடைய வேண்டும். அதைத்தான் ஒவ்வொரு பண்ட் மேனேஜரும் செய்ய முயலுகிறார்கள். தங்கள் நிதி, குறியீடுகளை மிஞ்ச வேண்டும் என்றே நினைக்கிறார்கள். சில பண்ட்கள் குறியீட்டுடன் ஒட்டி 15% லாபம் கொடுக்கும். சில நிதிகள் 30% கொடுக்கும். மிக நன்றாக நிர்வாகிப்பட்ட நிதி 50% கூட கொடுக்கும்.

பரஸ்பர நிதிகள் பங்குச்சந்தையில் நுழைவதற்கு ஒரு சுலபமான வழி என்றே அனைவரும் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் பங்குகளை தேர்ந்தெடுப்பது போலவே பரஸ்பர நிதிகளை மிக கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். கண்காணிக்கவும் வேண்டும்.

ஒரு பரஸ்பர நிதியின் கடந்த கால செயல்பாடுகள், அதனுடைய NAV அதிகரிக்கும் விதம் போன்றவையை கணக்கில் எடுத்துக் கொண்டு மற்ற பரஸ்பர நிதிகளுடன் ஒப்பிட வேண்டும். ரிலயன்ஸ், டெம்புள்டன், HDFC போன்ற பரஸ்பர நிதிகள் நல்ல லாபம் கொடுக்கும் பரஸ்பர நிதிகள்.

இது போலவே பரஸ்பர நிதிகளின் IPO விலும் முதலீட்டாளர்கள் அதிக கவனம் செலுத்துகிறார்கள். பங்குகளின் IPO தரும் லாபம் போல பரஸ்பர நிதிகளின் IPO வை ஒப்பிட முடியாது. பங்குகளின் IPO எல்லா நிலையிலும் ஓரளவிற்கு நல்ல லாபங்களை "தற்பொழுது" கொடுக்கிறது. ஆனால் பரஸ்பர நிதியின் IPO வேறு விதமானது.

எந்த பரஸ்பர நிதியும் அது எந்தளவிற்கு சிறப்பாக நிர்வாகிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தே உயர்வை பெற முடியும். தற்பொழுது குறியீடுகள் சில நேரங்களில் உயர்வதும் பிறகு சரிவதுமாக இருக்கிறது. பரஸ்பர நிதியின் IPO மூலம் திரட்டப்படும் பணம் பங்குகள் உயர்வான நிலையில் இருக்கும் பொழுது முதலீடு செய்யப்பட்டால் பரஸ்பர நிதியின் NAV ம் சரிவையே அடையும். இது கடந்த காலங்களிலும் நடந்திருக்கிறது.

இவ்வாறான முதலீட்டை விட தற்பொழுது சந்தையில் இருக்கும் நல்ல பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வதே சிறந்தது.

இது போல சிறுக சிறுக முதலீடு செய்யும் முறையான - Systematic Investment Plan போன்றவை மூலமும் பரஸ்பர நிதியில் முதலீடு செய்யலாம். இந்த முறை மூலம் மாதந்தோறும் ஒரு தொகையை பரஸ்பர நிதியில் முதலீடு செய்யலாம். இவ்வாறு முதலீடு செய்யும் பொழுது குறியீடு சரிந்திருக்கும் நேரங்களில் நிறைய யூனிட்களை (Units) பெற முடியும். குறியீடு உயர் நிலையில் இருக்கும் பொழுது குறைவான யூனிட்கள் தான் கிடைக்கும் என்றாலும் சரிந்திருக்கும் பொழுது வாங்கிய யூனிட்களின் விலை எகிறும். தற்பொழுது பங்குச்சந்தை
சரிவதும், உயர்வதுமாக இருக்கும் நிலையில் இந்த வகை முதலீடு நல்ல பலன் கொடுக்கும். தற்பொழுது வாங்கும் யூனிட்களின் விலை குறியீடு 7000 ஐ எட்டும் பொழுது உயர் நிலையில் தானே இருக்கும்.

தற்பொழுது பரஸ்பர நிதிகளில் ஹாட்டான விஷயம் உலகின் நம்பர் 1 பரஸ்பர நிதி நிறுவனமான பிடிலிட்டி (Fidelity) நிறுவனம் தான். இப்பொழுது இந்த நிறுவனம் இந்தியாவிற்கு வந்துள்ளது. தனது பரஸ்பர நிதியின் IPO வையும் வெளியிட்டுள்ளது. இந் நிறுவனம் குறிப்பிட்ட துறையிலோ, குறிப்பிட்ட சந்தை மதிப்பு உள்ள நிறுவனங்களிலோ முதலீடு செய்யாது. மாறாக 75 சிறந்த பங்குகளில் நல்ல நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்ய இருக்கிறது. இந்த பரஸ்பர நிதி IPO  வில் முக்கிய அம்சம், இந்த பங்குகளை தற்பொழுது
விண்ணபிக்கும் பொழுதே SIPக்கும் (Systematic Investment Plan) விண்ணப்பிக்கலாம் என்பதே. இது வரை ஒரு பரஸ்பர நிதியில் சில யூனிட்களாவது கைவசம் இருந்தால் தான் SIP மூலம் முதலீடு செய்ய முடியும். முதலீட்டாளர்கள் இதற்கு விண்ணபிக்கும் பொழுதே இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இது போலவே பங்குச்சந்தையை சார்ந்த Equity Diversified பங்குகளில் முதலீடு செய்வதே தற்போதைய சூழ்நிலையில் பணம் பெருகும் வழி. பட்ஜெட்டில் கொடுக்கப்பட்டுள்ள வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு பணத்தைப்
பெருக்குங்கள்.

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com - Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |