மார்ச் 24 2005
தராசு
வ..வ..வம்பு
மஜுலா சிங்கப்புரா
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
உள்ளங்கையில் உலகம்
பங்குச்சந்தை ஒரு பார்வை
கவிதை
முத்தொள்ளாயிரம்
திரைவிமர்சனம்
அறிவிப்பு
நையாண்டி
 
  முதல் பக்கம்
தொடர்கள்
இலக்கியவாதி  புதிது
- சத்யராஜ்குமார்
ஹர்ஷத் மேத்தா  புதிது
- சசிகுமார்
- சத்யராஜ்குமார்
கோடிட்ட இடங்கள்
- சித்ரன்
சுய சாசனம்
- பாஸ்டன் பாலாஜி
என்னை எழுதியவர்கள்
- சத்யராஜ்குமார்
களம்
- நாகூர் ரூமி
கங்கை இல்லாத காசி
- பாஸ்டன் பாலாஜி
வார்த்தையல்ல, வாக்கியம்
- என். சொக்கன்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
 
முத்தொள்ளாயிரம் : 'பொது' வில்லன்
- என். சொக்கன்
| Printable version |

பாடல் 95

நம்முடைய திரைப்படங்களில், காதலுக்குப் பல விரோதிகள் இருக்கிறார்கள் - காதலர்களின் பெற்றோரோ, சகோதரரோ, நண்பர்களோ, இன்னபிறரோ இப்படி வில்லனாய்ச் சித்தரிக்கப்படுகிறார்கள் !

ஆனால், இந்த மனித வில்லன்களைக்காட்டிலும், காதலர்களுக்கு அதிக கொடுமை செய்யக்கூடிய ஒரு 'முக்கிய' மற்றும் 'பொது' வில்லன் - பிரிவு !

பிரிந்திருக்கும் காதலர்களின் இரவு, மிகவும் நீளமானது என்று திருக்குறள் சொல்கிறது, 'நெடிய கழியும் இரா' என்று வர்ணிக்கும் வள்ளுவர் 'கொடியார் கொடுமையின் கொடுமை !', என்று அதைச் சொல்கிறார் !

உண்மையில், இந்த ராப்பொழுது, ஒரு இரட்டை வேடதாரி - சில சமயங்களில் வில்லனாகவும், சில சமயங்களில் கதாநாயகனானவும் தோற்றம் தரக்கூடிய மாயப்பொழுது !

காதலனைப் பிரிந்திருக்கும் காதலிகளுக்கு, ராத்திரிப் பொழுது தாங்கமுடியாத அவஸ்தையாய் இருக்கிறது - தூக்கம் வருவதில்லை, படுக்கை நோகிறது, கண்களை மூடினால் கனவுகள், திறந்தால் நினைவுகள் - ஊரே உறங்கிக்கொண்டிருக்க, இவர்களுக்குமட்டும் இந்த அவஸ்தை - துயரமும், தன்னிரக்கமும் அவர்களைச் சூழ்ந்து அழுத்த, பாழாய்ப்போன இந்த ராத்திரி, சீக்கிரத்தில் விடிந்துவிடாதா என்று ஏங்குகிறார்கள் அவர்கள் !

அதேசமயம், காதலனோடு சேர்ந்திருக்கும் காதலிகளுக்கு, அந்த சந்தோஷத்தில், ராப்பொழுது எப்படி விரைகிறது என்றே தெரிவதில்லை - கண்மூடித் திறப்பதற்குள், காணாமல்போய்விடுகிறது ! (குறுந்தொகையில் ஒரு காதலி, 'ஐயோ, சட்டென்று இரவு கழிந்து, பொழுது விடிந்துவிட்டதே ! என்னிடமிருந்து என் காதலனைப் பிரிக்கும் வாளாக இந்த விடியற்காலை வந்துவிட்டதே !', என்று பதறுகிறாள் !)

இந்த முத்தொள்ளாயிரப் பாடலின் நாயகி, பாண்டியனின் காதலி ! மலர்களை நன்றாக விரவித் தொடுத்த மாலையை அணிந்தவன், மார்பில் ஒளி பொருந்திய சந்தனத்தைப் பூசிக்கொண்டவன், அவனை எண்ணி ஏங்கியிருப்பவள் இவள் !

நியாயப்படி பார்த்தால், பாண்டியனைப் பிரிந்திருக்கும் இந்தக் காதலிக்கு, இரவுப்பொழுது ஒரு கொடும் வில்லனாகத் தெரியவேண்டும் - ஆனால், இந்தப் பெண், அந்த உணர்ச்சியைத் தனக்குள் மறைத்துக்கொண்டு, அந்த இரவின்மீது இரக்கப்படுவதுபோல் பேசுகிறாள் !

'ராத்திரிப் பொழுதே ! உன் நிலைமை பரிதாபம்தான் !', என்று கேலிச் சிரிப்போடு சொல்கிறாள் அவள், 'பாண்டியனைப் பிரிந்திருக்கும் காதலிகள், சீக்கிரத்தில் விடிந்துவிடுமாறு உன்னைக் கெஞ்சுவார்கள் ! ஆனால், அவனோடு சேர்ந்து மகிழ்ந்திருக்கும் காதலிகள், "ராத்திரியே, நீ விடியவே வேண்டாம், இப்படியே நீளமாய் நீண்டுகொண்டே இரு !" என்று விரும்புவார்கள் ! இவர்களில் யாருடைய பேச்சைக் கேட்பாய் நீ ?'

புல்லாதார் வல்லே புலர்கென்பார்; புல்லினார்
நில்லாய் இரவே நெடிதுஎன்பார் நல்ல
விராஅமலர்த் தார்மாறன் ஒண்சாந்து அகலம்
இராஅளிப் பட்டது இது.

(புல்லுதல் - தழுவுதல்
வல் - வேகம்
புலர்தல் - விடிதல் (அதிகாலை)
விராஅமலர் - பரவலாய்த் தொடுத்த மலர்கள்
தார் - மாலை
ஒண்சாந்து - ஒளி நிறைந்த சந்தனம்
அகலம் - மார்பு
அளிப்படுதல் - இரக்கத்துக்கு உரியதாக இருத்தல்)


பாடல் 96

பாண்டியனின் நாடு, முத்துகளுக்குப் பெயர் பெற்றது !

பொதுவாக, தண்ணீரினுள்ளிருக்கிற சிப்பியில்தான் ஒளி நிறைந்த முத்துகள் கிடைக்கும். ஆனால், பாண்டியனின் ஆட்சியில், வேறொரு இடத்திலும் முத்துகள் கிடைக்கும் என்கிறார் இந்தப் புலவர் !

வேறு எங்கே ?

பகைவர்களின் ரத்தம் குடிக்கும் வேலை ஏந்திய அரசன் பாண்டியனின், சந்தனம் பூசிய, குளிர்ந்த மார்பு - அதை நினைத்து ஏங்குகிறார்கள் பாண்டிய நாட்டுப் பெண்கள் !

அப்போது, அவனைக் கிடைக்கப்பெறாத ஏக்கத்தில், அவர்களின் விழியோரங்களிலிருந்து முத்துகள் வழிந்தோடுகின்றன !

இப்படி, பாண்டியனோடு சேரமுடியாத பெண்கள், ராப்பகலாய் முத்து விளைவித்துக்கொண்டிருப்பதால்தானோ என்னவோ, பாண்டிய நாடு, முத்துகளுக்குப் புகழ்பெற்றிருக்கிறது !


இப்பிஈன்று இட்ட எறிகதிர் நித்திலம்
கொற்கையே அல்ல படுவது கொற்கைக்
குருதிவேல் மாறன் குளிர்சாந்து அகலம்
கருதியார் கண்ணும் படும்.

(இப்பி - சிப்பி
ஈன்று இட்ட - பெற்றுத் தந்த
எறிகதிர் - ஒளி மிகுந்த
நித்திலம் - முத்து
படுவது - உண்டாவது
குருதி - ரத்தம்
சாந்து - சந்தனம்
அகலம் - மார்பு
கருதியார் - கருதியவர்கள்)

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com - Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |