மார்ச் 24 2005
தராசு
வ..வ..வம்பு
மஜுலா சிங்கப்புரா
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
உள்ளங்கையில் உலகம்
பங்குச்சந்தை ஒரு பார்வை
கவிதை
முத்தொள்ளாயிரம்
திரைவிமர்சனம்
அறிவிப்பு
நையாண்டி
 
  முதல் பக்கம்
தொடர்கள்
இலக்கியவாதி  புதிது
- சத்யராஜ்குமார்
ஹர்ஷத் மேத்தா  புதிது
- சசிகுமார்
- சத்யராஜ்குமார்
கோடிட்ட இடங்கள்
- சித்ரன்
சுய சாசனம்
- பாஸ்டன் பாலாஜி
என்னை எழுதியவர்கள்
- சத்யராஜ்குமார்
களம்
- நாகூர் ரூமி
கங்கை இல்லாத காசி
- பாஸ்டன் பாலாஜி
வார்த்தையல்ல, வாக்கியம்
- என். சொக்கன்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
 
நையாண்டி : சந்திரமுகியில் ரி-மிக்ஸ் செய்ய முடியாத பாடல்கள் !!
- பாஸ்டன் பாலாஜி
| Printable version |

ரஜினியால் சந்திரமுகியில் ரி-மிக்ஸ் செய்ய முடியாத பாடல்கள் !!


(கருணாநிதி தவறாக எடுத்துக் கொள்ளக்கூடும் என்பதால்:)

தர்மத்தின் தலைவன்

யாரு யாரு
இந்தக் கிழவன் யாரு
அட நாறு நாரு
பிஞ்ச தேங்கா நாரு
ஆளும் வயசு
எங்களுக்குக் கிழவா
கிழவா
நீங்க ஆடி தீர்த்த
ஆளுதானே பொதுவா
பொதுவா

(ராமதாஸை எதிர்த்துப் பாடியதாக அர்த்தப்படும் என்பதால்:)

ஊர்க்காவலன்
ஊரு சொல்லும்
பேச்சில்
உண்மையிருக்கா
உண்மை சொல்லப்
போனால்
வம்பு வழக்கா

அறிவுக்கு மேலே
சக்தியிருக்கா
அன்புக்கு மேலே
பக்தியிருக்கா

(எடுத்த சபதம் )

(ரசிகர்களை தொண்டர்களாக மாற்றுகிறார் என்று அவதூறு கிளம்பும் என்பதால்:)

நான் சிகப்பு மனிதன்

வெண்மேகம் விண்ணில்
நின்று
கண்ணே இன்று
பன்னீர் தூவும்

விடிகாலை
வெள்ளிமீனே
என் வாழ்வே
உன்னால்தானே
கண்ணே நான் அண்ணன்
அல்ல
உன்னை ஈன்ற அன்னை
நானே

என்னாளும் எந்தன்
பக்கம்
தாயே நீ வேண்டும்

உன் ஆவி
எந்தன் ஆவி
இரண்டும் ஒன்றாகும்

உன் கால்கள்
இல்லாமல்
என் கால்கள் போகுமோ


(ஜெயலலிதாவின் ஆதரவு கோருகிறார் என்று புரிந்து கொள்வதால்:)

கொடி பறக்குது

அன்னை மடியில் கண்
திறந்தோம்
மண்ணின் மடியில் கண்
மறைந்தோம்

அன்னை என்பவள்
அருகில் வந்துமே
பிள்ளை அறியவே
இல்லையே

பிள்ளை அன்னையை
அறிந்த வேளையில்
அன்னை உணரவே இல்லையே


(ரஜினி மட்டும் உத்தமரா என்று வாதம் வரப்போவதால்:)

நான் சிகப்பு மனிதன்

பந்தலும் மேடையும்
போட்டுக்கறான்
ஒரு துண்டையும்
தோளில்
மாட்டிக்கறான்

ஓட்டுக்கள் போட்டிட
கேட்கிறான்
அதைப் போட்டதும்
புத்திய
மாத்திக்கறான்

எல்லாமே வேஷந்தான்
ஏதேதோ கோஷந்தான்
எங்கேயும்
தில்லுமுல்லு
திண்டாடுது
தேசந்தான்

என்னாளும் கோழைகளா
எதுக்கு வாழணும்
அப்பாவி
மனுசனெல்லாம்
சிவப்பா மாறணும்

ஒருத்தனும் இங்கே
சித்தனும் இல்லே
புத்தனும் இல்லே

(எல்லாருமே திருடங்கதான்)


(கூட்டணி கட்சிகளைக் காதிருக்கச் செல்வதாக நினைக்க வைப்பதால்:)

தளபதி

பார்வை பூத்திட
பாதை பார்த்திட
பாவை ராதையோ வாட

இரவும் போனது
பகலும் போனது
மன்னன் இல்லையே கூட ..


(விஜய்காந்த் சண்டைக்கு வருவார் என்பதால்:)

ராஜாதி ராஜா

தற்காப்புக்காக
நான் போடும் சண்டை
தப்பாக ஒருநாளும்
போனதில்ல

சரக்கு இருந்தா
வித்துப்பாரு

யேய் வெத்துவேட்டு
ஓரங்கட்டு

என்கிட்ட மோதாதே
நான் ராஜாதிராஜனடா
வம்புக்கு
இழுக்காதே
நான் வீராதிவீரனடா

இனி தப்பாட்டம்
என்னோடு ஆடாதே
அட...
அப்புறமா
குத்துப்பட்டு
ஓடாதே

(ரசிகர்களை சும்மா உசுப்பேத்தி விடுகிறார் என்பதால்:)

ப்ரியா

பாடிப் பாடி
அழைக்கின்றேன்
ஜாடையாக செய்தி
சொல்வாய்
பாதையொன்று கண்டு
கொள்ள
நீயும் பாடுவாய்

தயக்கமென்ன
கலக்கமென்ன

தேவீ
குரல்கொடு

ஓ... ப்ரியா...

நேரம் பார்த்து
நெருங்குவேன்
காவல் தாண்டி காக்க
வந்தேன்
போட்டியென்று வந்த
பின்னே
நேரில் மோதுவேன்

கவலையில்லை
மயக்கமில்லை


(முன்பின் முரணில் ஜான் கெர்ரியாகிப் போவார் என்பதால்:)

மனிதன்

கடவுள் மனிதன்
படைத்தானா
கடவுளை மனிதன்
படைத்தானா
அட...
ரெண்டு பேரும்
இல்லையே!
--------

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com - Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |