Tamiloviam
மார்ச் 29 07
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
பாலிவுட் : பிலிம்பேர் அவர்டு 2007
- பாஸ்டன் பாலாஜி
| | Printable version | URL |

அவார்டு ஷோ பார்ப்பதாக இருந்தால் கையில் பேனாவும், மடியில் துண்டு சீட்டும் இருக்கும். அப்படித்தான் இங்கேயும் ஆரம்பித்தது. ரெட் கார்ப்பெட்டில் போட்ட பிளேடு தாங்காமல்,

* ஷாரூக் நன்றாகவே பேசினார். சுய எள்ளல் & தரமான நகைச்சுவை. எழுத்து: கரன் ஜோஹர்.

KaranJohar* அவரும் சிறப்பாகவேத் தொகுத்தளித்தார். மனுசன் ஹீரோவா நடிக்கலாம். என்ன ஸ்மார்ட்!

* கரீனாவின் ஆடைத் தேர்வு அமர்க்களம். அவரின் உடை மட்டுமே, ஏனைய பிறரின் புடைவை இன்ன பிறவில் இருந்து அசத்தல் + மாறுதல்.

* ஸ்ரீதேவி இன்னும் அப்படியே இருக்கிறார். ஹிந்தியில் உரையாட முடியாமல், ஆங்கிலத்தில் அளவளாவினார்.

* மாதவன் ஹிந்தியில் பொளந்து கட்டினார்.

* ஆமிர் கான் ஆஸ்காருக்கு மட்டுமே வருவது ஷாருக்கிற்கு கோபம் ஏற்படுத்தி இருக்கும். ஆனால், இது போன்ற சராசரி விருது விழாக்களுக்கு வராமல் இருப்பதில் ஆமிரின் நியாயம் தெரிகிறது.

* அரங்கம் அளித்த மகாபிரபு, தானம் கொடுத்த தன்யவான் என்று யாஷ் சோப்ராவை சோப் போட்டுத் தேய்த்தார்கள்.

* ஸ்ரீதேவி பம்பரமாய் சுழன்று சுழன்று ஆடினார். எப்பங்க ரீ-எண்ட்ரி? ‘லகே ரஹோ’ தமிழில் ரஜினிக்கு ஜோடி கட்டுங்களேன்…

Madhavan FilmFare* ‘கிருஷ்’ தந்திரக்காட்சிகள் எவ்வளவு கஷ்டம் என்பதை நடித்துக் காட்டி, ஹ்ரித்திக் ரோஷனுக்கு அப்ளாஸ் வாங்கிக் கொடுத்தார் ஷாரூக்.

* விருதை வழங்க வந்தவர்கள் ஏதோ வந்தார்கள்; உறையை நீவினார்கள்; யார் படிப்பது என்று குழம்பினார்கள்; சொல்வதற்கு குழறினார்கள்; ஃபிலிம்ஃபேர் சிலை கொடுப்பதற்கு முரண்டினார்கள்.

* ஒவ்வொரு விருதிற்கும் ஒரு பெருசை அழைப்பது; அவரே சில் வார்த்தை சொல்லி, பரிந்துரைப் பட்டியலை அறிமுகம் செய்து, விருது வழங்குமாறு (அதாவது ஆஸ்கார் மாதிரி) சிம்பிளாக, அழகாக, பவ்யமாக முடித்திருக்கலாம்.

* விழா முழுக்க சமாஜ்வாதி கட்சி மயம். முன்னால் லோக் சபா எம்பி அமிதாப் பச்சனுக்கும் முன்னாள் ராஜ்ய சபா எம்பி ஜெயா பாதுரிக்கும் நடுவில் அமீர் சிங். நல்ல வேளை… ஐஷ்வர்யாவிற்கும் கரீனாவிற்கும் இடையில் சீட்டு வேண்டும் என்று கேட்கவில்லை.

* சான்ஸ் கிடைத்த போது படு கேசுவலாக அமீரின் பெண் மோகத்தை வார ஷாருக் தவரவில்லை. ஷாரூக் abhishek Bachhanகலக்கினார்.

* ஷாரூக்கை விட டைமிங்காக நிகழ்ச்சியில் ஜோக்கடித்தவர் - ஜூஹி சாவ்லா

* ப்ரீத்தி ஜிந்தாவிற்கு சம்பளம் போதவில்லை அல்லது பேசிய தொகை கொடுக்கவில்லை என்று நினைக்கிறேன். செம கடுப்பாக ‘என் லெவலே வேற’ என்பது மாதிரி பந்தா காட்டினார். அதற்கு, விழாவிற்கு வந்து சலித்துக் கொள்ளாத ஆமீர் எவ்வளவோ தேவலாம்.

* ரெட் கார்பெட்டில் பேசியவர் ‘அன்புடன்’ கௌதமியின் தங்கச்சி போல், இண்டெர்வ்யூ எடுக்க ரொம்பவே சிரமப்பட்டார். காபி வித் அனு மாதிரி யாரையாவது போட சொல்லணும்.

| | |
oooOooo
                         
 
பாஸ்டன் பாலாஜி அவர்களின் இதர படைப்புகள்.   பாலிவுட் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2007 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |