மார்ச் 30 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
திரைவிமர்சனம் : மதராஸி
- கணேஷ் சந்திரா [ganesh@tamiloviam.com]
| Printable version | URL |

Arjun, Jegapathy Babyகண்ணெதிரே பெற்றோர்களை கொன்ற வில்லன்களை தேடித்தேடி ஹீரோ பழிவாங்கும் கதை. சென்னை வாசியான அர்ஜுன் வில்லன்களை பழிவாங்க மும்பை போகிறார். ஆக்ஷன் கிங் அர்ஜுனே இயக்கி, நடித்திருப்பதால் படம் முழுவதும் ஆக்ஷன் ஆக்ஷன்.

தமிழர்கள் வாழும் தாராவி பகுதிக்கு செல்கிறார் அர்ஜுன். அங்கே அழகான தேவதையாக வேதிகா. மும்பை என்றாலே துப்பாக்கி, தோட்டா, அடியாட்கள்தானே. அப்படி ஒரு கும்பல் வேதிகாவின் அப்பாவை மிரட்டுகிறது. போதாத குறைக்கு வேதிகாவை 'அந்த' தொழிலுக்கு அழைக்கிறது. இதை பார்த்துக் கொண்டிருக்கும் அர்ஜுன் சீறி பாய்கிறார். இடியாய் அந்த கும்பலை விரட்டி அடிக்கிறார்.

வழக்கம்போல் வேதிகாவுக்கு அர்ஜுன் மேல் காதல் பிறக்க, அடிவாங்கிய கும்பலின் தலைவன் ராஜ்கபூர் அர்ஜுனை தன் கூட்டதில் சேர்த்துக்கொள்ள....

மும்பையில் மற்றொரு அடிதடி கூடாரமாக பெப்சி விஜயன் & கோ. இவர் ராஜ்கபூரின் தொழில்முறை எதிரி. விஜயனுக்கு பிரதான அடியாளாக ஜெகபதி பாபு (தெலுங்கில் பிரபலம்)
அர்ஜுனும், ஜெகபதி பாபுவும் ஒரு காலத்தில் நண்பர்களாக இருந்தாலும் எதிர்ரெதிர் கூடாரத்தில் இருந்து கொண்டு சவால் விடுகிறார்கள். அடுத்தவர்கள் திட்டங்களை தவிடு பொடியாக்குகிறார்கள்.

அர்ஜுன் வேதிகா காதல், ஜெகபதி பாபுவின் தம்பி பாசம், அர்ஜுனின் பழிவாங்கும் படலம் என்று போகிறது கதை. ஒரு கட்டத்தில் ராஜ்கபூரும், விஜயனும் சேர்ந்து கொண்டு அர்ஜுன் மற்றும் ஜெகபதி பாபுவை தீர்த்துகட்ட தீர்மானிக்க பதிலுக்கு அர்ஜுனும், ஜெகபதி பாபுவும் அவர்களை பழிவாங்க துடிக்க என்ன நடக்கிறது என்பதே மீதிக் கதை.

படத்தில் அர்ஜுனின் நண்பராக விவேக் வருகிறார். அவரும் வெண்ணிற ஆடை மூர்த்தியும் அடிக்கும் டிராஜெடி கூத்து சுத்த போர். படத்தில் வேதிகாவை தவிர, கலாஜா வேறு இருக்கிறார். இவர் ஜெகபதி பாபுவிற்கு ஜோடியாக வந்து டூயட் பாடுகிறார். தலைவாசல் விஜய் போலீஸ் அதிகாரியாக வந்து போகிறார்.

பாசமிகு அண்ணாக ஜெகபதி பாபு நன்றாக நடித்துள்ளார்.  பல இடங்களில் அர்ஜுன் இருக்கமான முகத்துடன் வருகிறார். சில இடங்களில் நடிக்கிறார். படம் முழுவதும் தோட்டா, கொலை என்றாலும் அதை ரத்த சகதியாக காட்டாமல், குறிப்பால் உணர்த்துகிறார் இயக்குனர்.

முடிவில் வரும் ரயில் சண்டை காட்சிக்கு அதிக ரிஸ்க் எடுத்து சிரமபட்டிருக்கிரார்கள்.

இசை டி.இமான். மனதில் நிற்கும்படி பாடல் எதுவும் அமையவில்லை. ஒளிப்பதிவு கே.எஸ் செல்வராஜ்.

படம் முழுவதும் தோட்டாகள் பறக்கிறது. அடியாட்கள் பறக்கிறார்கள். லாஜிக்கும் சேர்ந்து பறக்கிறது.

| |
oooOooo
கணேஷ் சந்திரா அவர்களின் இதர படைப்புகள்.   திரைவிமர்சனம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |