மார்ச் 31 2005
தராசு
வ..வ..வம்பு
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
மஜுலா சிங்கப்புரா
உள்ளங்கையில் உலகம்
முத்தொள்ளாயிரம்
கவிதை
கட்டுரை
சிறுகதை
அறிவிப்பு
அறிவிப்பு
 
  முதல் பக்கம்
தொடர்கள்
இலக்கியவாதி  புதிது
- சத்யராஜ்குமார்
ஹர்ஷத் மேத்தா
- சசிகுமார்
- சத்யராஜ்குமார்
கோடிட்ட இடங்கள்
- சித்ரன்
சுய சாசனம்
- பாஸ்டன் பாலாஜி
என்னை எழுதியவர்கள்
- சத்யராஜ்குமார்
களம்
- நாகூர் ரூமி
கங்கை இல்லாத காசி
- பாஸ்டன் பாலாஜி
வார்த்தையல்ல, வாக்கியம்
- என். சொக்கன்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
 
மஜுலா சிங்கப்புரா : "உங்களுக்குத் தொழில் இங்கே அன்பு செய்தல் கண்டீர்!"
- எம்.கே.குமார்
| Printable version |


காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. இரண்டாமடி வைப்பதற்குள் முதலடி பட்ட நீர் காலைவிட்டு நழுவிச்செல்வதைப்போல நல்லதோ கெட்டதோ 'அள்ளிக்கோ அனுபவிச்சுக்கோ ஆண்டுக்கோ அல்லல்பட்டுக்கோ' என்று கை நிறைய காரண காரிய வகையறாக்களை நம்மிடம் கொடுத்துவிட்டு அதற்கான எத்தகைய பிரக்ஞையுமின்றி சீரான ஓட்டத்தில் ஓடிக்கொண்டேயிருக்கிறது. காலடி வைத்தவர்கள் அக்காலத்திற்கேற்ற ஏதாவது ஒரு பெயரை அதற்குச் சூட்டிவிட்டுவிட்டு காலமாகிவிடுகிறார்கள். காலம் உயிர்பெறுகிறது இன்னொரு முறை காலம் என்ற அதே பெயருடன்!

சிங்கப்பூர் சொந்தக்காலில் நிற்க முயற்சித்து 'தத்தக்கப்பித்தக்க' என்று தடுமாறிக்கொண்டிருந்த நேரம், சிங்கப்பூரின் அண்டை நாடுகள் அதனுடன் எப்படி நடந்துகொண்டன என்பது ஒரு தனி வரலாறு! இவற்றில் இந்தோனேஷியாவுடன் அதன் உறவு எப்படி இருந்தது, இந்தோனேசியாவின் ஆட்சியாளர்கள் மட்டுமின்றி, இந்தோனேசியாவின் மிகப்பெரிய கட்சியான பிகேஐ எனப்படும் 'பார்ட்டாய் கொம்யூனிஸ் இந்தோனேசியா' கட்சி, சிங்கப்பூரில் சாதிக்க நினைத்தது என்ன, அதற்காக எத்தகைய இழிவான செயல்களிலெல்லாம் அவை இறங்கின என்பது பற்றியெல்லாம் சில அத்தியாயங்களுக்கு முன் விரிவாகப்பார்த்தோம். அக்காலம் வெகு தொலைவிற்கு அப்பால் இப்போது கிடந்து முனகிக்கொண்டிருக்கிறது.

2004, டிசம்பர் 26, காலை. 'உஜூங் முலோ' அருகில் உள்ள கடற்கரை கிராமம் ஒன்றில் அப்பெரியவர் எழுந்து ஒருமுறை ஓதிவிட்டு வலைமூட்டையை எடுத்துக்கொண்டு படகைத் தள்ளி கடலுக்குள் இறக்குகிறார். படகு கடலைத்தீண்டும் நேரம் மேற்கு நோக்கி கைகூப்புகிறார். கூப்பிய கைகளுக்கிடையே மேகக்கூட்டங்கள் மொத்தமாய் திரண்டு எழுந்து வருவது போன்றதொரு காட்சி! கைகளை விரித்துவிட்டு தொலைவில் பார்க்கிறார். நம்ப முடியவில்லை அவரால். மீண்டும் பார்க்கிறார். ஒரு வினாடி தான்! உயிரலைகள் உள்ளுக்குள்ளே சுளீர் என்க, 'அம்மா' என்று ஓடுகிறார். சத்தம் கேட்டு வீட்டுக்குள்ளே தூங்கிக்கொண்டிருக்கும் அவரது வயதான மனைவியும் அவர்களோடு இருப்பதற்காக வந்த அவரது பேத்தியும் வெளியே வருகிறார்கள். இவர் உள்ளே நுழைய, அவர்கள் வெளியே வர, ஒரு வினாடி சந்திப்புதான்! பிறகு கடலலைகள் அவர்களை வாரிச்சுருட்டிக்கொள்ள மொத்தமாய் மரணத்தில் சங்கமித்துக்கொள்கிறார்கள்.

இந்தோனேசியாவை உலுக்கிய நில அதிர்ச்சியும் அது தொடர்ந்த சுனாமியும் என்றும் மறப்பதிற்கில்லை. இன்றுவரை தொடரும் நில அதிர்வுகளால் கலங்கிப்போயிருக்கிறது இந்தோனேசியா. ஏற்கனவே பொருளாதாரத்தில் படுபாதாள வீழ்ச்சியைக் கண்டுகொண்டிருந்தாலும் மொத்தமாய் முழ்கிக்கிடக்கையில் செய்வதறியாது திகைத்துப்போனது அன்று. இறந்தவர்களின் எண்ணிக்கை ஐயாயிரத்துக்குள் இருக்கக்கூடும் என்றுதான் மீட்புப்பணியில் இறங்க நினைத்தார்கள். ஆனால் அடுத்த அரைமணி நேரத்திற்குள் எத்தனை ஆயிரங்களைத் தொட்டது அது?

இடுப்பிலிருக்கும் வேட்டி அவிழும்போது, கை, தானாக அங்கு உதவச்செல்வதைப் போலல்லவா ஒரு நல்ல நண்பன் செயல்படவேண்டும்?அத்தகைய நல்ல நண்பனாய் சிங்கப்பூருக்கு சிலநேரங்களில் அவர்கள் உதவாமல் போயிருக்கலாம். ஆனால் சிங்கப்பூர்?

செய்தி கேட்ட மறுநிமிடமே, 'இரண்டு மில்லியன் சிங்கப்பூர் டாலர்கள் எங்களின் இலக்கு இதோ வருகிறது எங்களின் உதவி' என்றது சிங்கப்பூர் அரசாங்கம். ஒரு மில்லியன் டாலரை அரசாங்கமே அளிக்க மீதமுள்ள ஒரு மில்லியன் டாலர்களை மக்களிடமிருந்து பெற நினைத்தது. ஆனால் நடந்தது என்ன? இரண்டே நாளில் குவிந்தது ஒரு மில்லியன் டாலர்கள். இலக்கு மாற்றப்பட்டது. ஐந்து மில்லியன்..பத்து மில்லியன்..அப்புறம்.? சிங்கப்பூரின், சிங்கப்பூர் மக்களின் ஒப்பில்லாத உதவிக்கரம் எவ்வளவு கொடுத்தது தெரியுமா? 65 மில்லியன் சிங்கப்பூர் டாலர்கள்.

டிசம்பர் 28 அதிகாலை. தேசிய பாதுகாப்பு மற்றும் முன்னேற்ற அமைச்சகத்திலிருந்து மூன்று C-130 ரக விமானங்களில் இருபத்தியைந்து உறுப்பினர்கள் அடங்கிய மருத்துவக்குழுவை உடனடியாக அனுப்பிவைத்தார் அமைச்சர் 'திரு. செட் ரிக் ·போ.' அதற்கடுத்த நாள் இரண்டு RASF CHINOOK ஹெலிகாப்டர்களில் இந்தோனேசியாவின் 'மேடான்' நகருக்கு (MEDAN) மீட்புக்குழுவினர் அவசரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

31 டிசம்பர் முதல், சிங்கப்பூரின் அனைத்து விமானதளங்களையும் கப்பல் தளங்களையும் இந்தோனேசியாவின் மீட்புக்கும் அவசர உதவிக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை தேவைகள் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான மறுசீரமைப்பு மற்றும் புணரமைப்பிற்காக திறந்துவிட்டது சிங்கப்பூர். மிகப்பெரிய போக்குவரத்து விமானங்களான சி-5, சி-17, பி 747 மற்றும் சி- 130 போன்ற அனைத்து விமானங்களும் சிங்கப்பூரின் 'பாயா லேபர்' விமான தளத்திலிருந்து இந்தோனேசியாவுக்கு பறந்துகொண்டேயிருந்தன. சிங்கப்பூர் குடியரசுப் படையின் ஆறு கனரக ஹெலிகாப்டர்கள் உதவிப்பொருட்களை 'மேடான்' மற்றும் 'அச்சே' நகரங்களிலிருந்து அருகிலுள்ள பகுதிகளுக்கு எடுத்துச்செல்வதற்காய் அங்கேயே இருந்து உதவும் படி பார்த்துக்கொள்ளப்பட்டன. மீட்புப்பணிகளிலும் உதவிப்பொருட்களை அவைகள் கையாண்ட விதத்திலும் சிங்கப்பூர் அரசாங்கமும் ராணுவத்தினரும் உலகம் முழுவதிலிருந்தும் பாராட்டப்பட்டனர்.

ஐக்கிய நாட்டு நிறுவனம் இந்தோனேசியாவிற்கான மீட்புப்பணிகளில் ஈடுபடுவதற்காக, சிங்கப்பூரை, 'கட்டுப்பாட்டு மற்றும் ஒருங்கிணைப்பு மையாமாக்க' உடனே முன்வந்தது. அதன்படி, உதவுதல், நிவாரணப்பணிகளை ஒருங்கிணைத்தல், விமான மற்றும் கப்பல் தொடர்புகளைக் கட்டுப்படுத்துதல், அதற்கான கட்டுப்பாட்டு மையத்தை இந்தோனேசியாவிற்கருகில் கப்பலில் உருவாக்குதல், செய்தித்தொடர்புகளைத் தெரியப்படுத்துதல் மற்றும் ஆவணப்படுத்துதல், மருத்துவ உதவிக்குழுக்களின் செயல்பாடுகள் மற்றும் உதவிப்பொருட்களை ஒழுங்காக பேணுதல் உட்பட பல பொறுப்புகளின் அதிகார மையமாக சிங்கப்பூர் செயல்பட்டது! சிங்கப்பூரின் அமைச்சர்களும் பிரதமர் திரு. லீசியன் லூங் அவர்களும் இந்தோனேசியாவின் பாதிக்கப்பட்ட 'அச்சே, மெலபாவு மற்றும் மேடான்' பகுதிகளுக்குப் பயணம் செய்து அங்கு நடைபெற்று வந்த காரியங்களை முற்றிலுமாக கவனித்துக்கொண்டனர்.

ஜனவரி மூன்றாம் தேதி 'அமெரிக்காவின் சி-5 கேலக்ஸி கார்கோ' விமானமும், ஐந்தாம் தேதி 'நார்வேயன் ஏர்·போர்ஸ் விமானமும்' உதவிப்பொருட்களுடனும் மீட்புக்குழுவினருடனும் சிங்கப்பூரின் 'பாயா லேபர்' விமான தளத்திற்கு வந்தன. 'ஆர்.எஸ்.எஸ் எண்டுயூரா' எனப்படும் சிங்கப்பூரின் கப்பற்படைக்குச் சொந்தமான கப்பல், குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மற்றும் இருபதாயிரம் மில்லியன் டாலர் மதிப்புள்ள பால்பவுடர், மருந்துப்பொருட்கள், விட்டமின் மாத்திரைகள் மற்றும் தொற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளுடன் 'அச்சே' நகருக்கும் 'மேடான்' நகருக்கும் விரைந்தது. 'எம் ஏ டி சி' எனப்படும் 'Mobile Air Traffic Control Tower' சாதனமும் அச்சே நகருக்கும் பாண்டா நகருக்கும் நிறுவப்பட்டன. கனரக வாகனங்களான 'புல்டோசர்களும்' '·போர்க் லி·ப்ட்டுகளும்' இடிந்த கட்டிடங்களையும் சாலைகளையும் சீரமைப்பதற்காக உடனடியாக அனுப்பட்டன.

சாங்கி மருத்துவமனை, சிங்கப்பூர் பொது மருத்துவமனை, தேசிய உடல் நல வாரியம் போன்றவற்றில் இருந்து மருத்துவர்களும் உதவியாளர்களும் கட்டம் கட்டமாக அனுப்பப்பட்டனர். சிங்கப்பூரிலிருந்து சுமார் 600 மீட்புப்படையினர் மொத்தமாக குவிக்கப்பட்டு இந்தோனேசியாவின் பாதுகாப்புப் படையுடன் இணைந்து அங்கு மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். ஆபத்து மற்றும் அவசரகாலங்களில் இருநாடுகளின் இத்தகைய கூட்டுப்பணிகள் இரு நாடுகளுக்கிடையே, இரு நாட்டு மக்களுக்கிடையே மட்டுமின்றி உலக மக்களுக்கிடையேயும் நல்லெண்ண நடவடிக்கைகளை வளர்க்கவல்லன என்பதை உலகுக்கும் ஐக்கிய நாட்டு நிறுவனத்திற்கும் எடுத்துக்காட்டும்படி நடந்து பாராட்டுப் பெற்றிருக்கிறது சிங்கப்பூர்.

இந்தோனேசியாவை பார்வையிடுவதற்கு வந்த 'ஐ.நா' வின் பொதுச்செயலாளர் 'கோ·பி அன்னானும்' இந்தோனேசியாவிற்கான சிங்கப்பூரின் தூதர் 'திரு. எட்வர்ட் லீயிடம்' இதைத்தான் சொல்லியிருக்கிறார். இரு நாடுகளுக்கிடையேயும் இனிமேலும் நல்ல உறவே இருக்கும், இஸ்லாமிய தீவிரவாதம் எழுச்சி பெறாத வரை!

(தொடரும்..)


சிங்கப்பூர் டைம்ஸ் 2015 இதழில் இருந்து

சிங்கப்பூர். ஏப்ரல் 10. வரலாற்றில் இடம்பிடிக்கும் முக்கிய நிகழ்வு சிங்கப்பூரில் நேற்று நடைபெற்றது. சிங்கப்பூர் அரசியல் அமைப்பில் நான்கு மொழிக்கொள்கை, ஆட்சியலில் இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே! இவற்றில் தமிழுக்கு அங்கீகாரம் அளிக்கும் விதமாக சிங்கப்பூரின் வரலாற்றில் தடம் பதிக்கும் முக்கிய நிகழ்வு நேற்று நடந்தது.

சிங்கப்பூரின் மத்திய பகுதியில் இருக்கும் 'தொம் யுன் கும்' சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிங்கப்பூரின் '250வது' தமிழ்ச்சங்கம் நிறுவப்பட்டது. சிங்கப்பூரில் வாழும் மக்களிடையே தமிழ் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கவும் கலை இலக்கியங்களில் பரிச்சயம் ஏற்படுத்தும் நோக்கமாகவும் இந்த 'சிங்கை தமிழ்ச்சங்கம்' ஆரம்பிக்கப்படுவதாக இதன் தலைவர் 'சிங்கை மணவாளன்' தெரிவித்தார். இருநூற்றைம்பது தமிழ்ச்சங்கங்கள் செய்யாத 'அரிய சாதனைகளை' இச்சங்கம் செய்யப்போவதாகவும் அதுவே இதன் முக்கியநோக்கமாக இருக்கும் எனவும் அவர் கூறினார். இதற்காக பெரியவர்களிடமும் குழந்தைகளிடமும் 'அ' முதல் '·' வரையிலான உயிரெழுத்துகளை அறிமுகப்படுத்தும் திட்டத்தையும் அவர் தெரிவித்தார். இதற்காக இப்பயிற்சியில் சிறந்துவிளங்கும் இரு 'வெளிநாட்டினரை' தமிழகத்தில் இருந்து வரவழைக்கப்போவதாகவும் மேலும் அவர் சொன்னார். ஏற்கனவே தமிழகத்தில் இதுபோன்ற தமிழ்ச்சங்கங்கள் நிறைய செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழகத்திலிருந்து வருகை புரிந்திருந்த நடிகை 'சிம்ஸ் ரே' கலந்துகொண்டார். தமிழுக்கும் தமிழ் பேசும் மக்களுக்காகவும் மட்டுமே தாம் வாழ்வதாக அவர் சொன்னார். தாம் அண்மையில் 'யமஹா' என்னும் தமிழ்ப் படத்தில் 'ஆடையில்லாமல்' தோன்றியது தவறில்லை எனவும் அது வெறும் 'கவர்ச்சி மட்டுமே ஆபாசம் இல்லை' எனவும் அவர் கூறினார்.

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com - Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |