மார்ச் 31 2005
தராசு
வ..வ..வம்பு
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
மஜுலா சிங்கப்புரா
உள்ளங்கையில் உலகம்
முத்தொள்ளாயிரம்
கவிதை
கட்டுரை
சிறுகதை
அறிவிப்பு
அறிவிப்பு
 
  முதல் பக்கம்
தொடர்கள்
இலக்கியவாதி  புதிது
- சத்யராஜ்குமார்
ஹர்ஷத் மேத்தா
- சசிகுமார்
- சத்யராஜ்குமார்
கோடிட்ட இடங்கள்
- சித்ரன்
சுய சாசனம்
- பாஸ்டன் பாலாஜி
என்னை எழுதியவர்கள்
- சத்யராஜ்குமார்
களம்
- நாகூர் ரூமி
கங்கை இல்லாத காசி
- பாஸ்டன் பாலாஜி
வார்த்தையல்ல, வாக்கியம்
- என். சொக்கன்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
 
அறிவிப்பு : "மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?" புதிய பகுதி
-
| Printable version |

வரும் வாரம் முதல் திருமதி. பத்மா அர்விந்த் எழுதும் "மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?" புதிய பகுதி ஆரம்பம்.

Padma Arvindதற்போது நியூஜெர்சியில் வசித்துவரும் பத்மா, பிறந்ததும் அடிப்படைக் கல்வி கற்றதும் கும்பகோணத்தில். சிறு வயதில் திருக்குறள் போட்டிக்காக தமிழ் படிக்க பின் அதுவே ஆர்வமாய் மாறியது. பத்மாவின் முதல் கதை ஆனந்தவிகடனில் வெளியானது. ஜிப்மரில் மருத்துவ உயிர் வேதியியல் படித்துப் பின் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிலையத்தில் ஆராய்ச்சி (PhD) செய்து கொண்டிருந்தபோது கவனம் அறிவியல் பக்கம் திசைமாறியது. அமெரிக்காவில் உள்ள Cornell medical schoolல் குடலில் வரும் புற்றுநோய்க்கான ஜீன் முறை மருத்துவத்தில் தொடர் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த  போது திருமணமானது. ஆய்வைத் துறந்து, வணிக மேலாண்மையில் (MBA) பட்டம் பெற்றார். Young scientist award from India, Mike Friedmanஒs Best Investigator award from Cornell ஆகிய விருதுகளை அறிவியல், மருத்துவம் ஆகியவற்றில் ஆற்றிய பணிகளுக்காகப் பெற்றுள்ளார். தற்போது பொது நலத்துறையிலும்(MPH) பட்டம் பெற்று, அரசு அங்கீகாரம் பெற்ற திட்டமிடுபவராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். கணவனால் அல்லலுறும் இந்திய பெண்களுக்கு அவர்களின் சட்ட பூர்வமான உரிமைகளை சொல்வது, பாலியல் வன்முறைகளுக்குள்ளாகும் பெண்களுக்கு ஆலோசனை அளிப்பது போன்ற பணிகளிலும் தன்னார்வ தொண்டராய் ஈடுபட்டுள்ளார்.

இவர் இந்த புதிய பகுதியைப் பற்றி குறிப்பிடும் பொழுது..

மருத்துவர்களிடம் நம்முடைய உடல் சுகமில்லாததான அறிகுறிகளை சொன்னால், அதற்கேற்ற மருந்து கொடுக்க உடல் குணமடைகிறது. ஆனால் எல்லாவகை சுகவீனங்களும் அவ்வளவு எளிதானதல்ல. வாழ்க்கை நிலை மாறுவதற்கு ஏற்றார்போல பழக்க வழக்கங்கள் மாறவில்லை எனில் நம்முடைய உடல் பாதிக்கப் படுகிறது. அதுவும் நம்முடைய பழக்க வழக்கங்களே அத்தகைய சுகவீனங்களுக்கு காரணமாகும் போது பள்ளி சென்றபோது ஒரு நாளைக்கு 3 மைல் நடந்த நான், இன்று அதிக பட்சம் நடப்பது 300 அடி தூரம் தான் எனும் போது, அதிக கலோரிகள் செலவாவதில்லை. நாள் முழுதும் நின்று கொண்டு வேலை செய்து விட்டு இப்போது மணிக்கணக்கில் கணிணி முன் அமர்ந்தநிலையில் வேலை. இதற்கு ஈடு செய்ய உடல் பயிற்சி அவசியம். உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருப்பினும் சரிவர செய்வதில்லை.

இங்கே மருத்துவர் பழக்கத்தை மாற்றி கொள்ளுங்கள் என்றுதான் சொல்ல முடியுமே தவிர, மாற்ற முடியாது. அதேபோல நோயாளிகளுக்கும் மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற ஆவல் இருப்பினும் அது இயலாமல் போகிறது. இதற்கு சோம்பல், மன அளவில் முழு தீர்மானமின்மை, நேரமின்மை போன்ற பலவும் காரணமாகிறது. ஆரம்பத்தில் எளிதாக மாறும் பழக்கங்கள் பிறகு இரும்பு வலை என  நம்மைசுற்றி பிணைந்து விடும். இதில் அதிக காப்பி அருந்துவது, அடிக்கடி நொறுக்கு தீனி உண்பது, நகம் கடிப்பது, புகை பிடிப்பது. மது அருந்துவது, பொங்கி வரும் சினத்தை சரியாக வெளிப்படுத்தாமல் மற்றவரிடம் காட்டுவது என பலவும் அடங்கும்.

இந்தியாவில் எனக்கு தெரிந்து நோய் வருவதை தடுக்கும் துறையில் (preventive medicine) பயிற்சி பெற்று அதை பெருமளவில் பயன் படுத்த யாரும் முன்வருவதில்லை. ஆனல் இங்கு அந்த துறையில் பயிற்சி பெற்றவர்கள் தனியே மக்களுக்கு அவர்களுடைய சில பழக்க வழக்கங்களை மாற்ற தேவையான கருத்து வழங்க அனுமதிக்கப் பட்டிருக்கிறார்கள். இவர்கள் உடல் நல  பயிற்சியாளர்கள்(Health educators, Interventionists) என அழைக்கப் படுகிறார்கள். இத்துறையில் பயிற்சி பெற்ற நான் இங்கே சில பழக்க வழக்கங்களை எப்படி மாற்று வது என்பதை பற்றி சில நடைமுறை உண்மை சம்பவங்களுடன் எழுதுகிறேன். உங்களின் கருத்துக்களையும் எதிர்பார்க்கிறேன்.

- பத்மா அர்விந்த்

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com - Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |