ஏப்ரல் 06 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
தராசு : திரையுலகமும் அரசியல் கட்சிகளும்
- மீனா [feedback@tamiloviam.com]
| Printable version | URL |

Simran Vindhiya Sarala அரசியல் கட்சிகளில் நடிகர்கள் இணைவதும் விலகுவதும் புதிதில்லை என்றாலும் சில நாட்களுக்கு முன்பாக எந்தவிதமான முன்னறிவிப்புமின்றி பாக்கியராஜ் தி.மு.கவில் சேர்ந்ததும், சிம்ரன் அ.தி.மு.கவில் இணைந்ததும் மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தின. அந்தப் பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில் இன்று சரத்குமார் தி.மு.கவிலிருந்து விலகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தி.மு.கவிலிருந்து விலகினாலும் ஏற்கனவே தான் கற்ற அரசியல் பாடங்களும், தனது ரசிகர்களும் தாய்மார்களும் தனக்கு ஆதரவு தந்து தனது அரசியல் வாழ்க்கைக்கு துணை நிற்பார்கள் என்று கூறி தான் தனது அரசியல் வாழ்வை தொடரப்போவதை சூசகமாக அறிவித்துள்ளார். ஏற்கனவே இத்தேர்தலில் முழுமூச்சாக தனது புதிய கட்சியுடன் விஜயகாந்த் இறங்கியுள்ளது நிச்சயமாக தமிழக அரசியலில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

அரசியல் கட்சிகளில் நடிகர்கள் இணைவதும் அவர்களை கட்சித் தலைவர்கள் பிரசாரத்திற்காகவும் வேட்பாளர்களாக நிறுத்துவதும் சகஜமாக நிகழும் ஒன்றுதான். சட்டமன்றத் தேர்தல் மட்டுமல்லாது நாடாளுமன்றத் தேர்தலிலும் திரையுலகைச் சேர்ந்தவர்களை அரசியல் கட்சிகள் பெரிய அளவில் ஈடுபடுத்துவதை மக்கள் ஏற்கனவே பலமுறை கண்டுள்ளார்கள். இதற்கு உதாரணமாக சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் வடமாநிலங்களிலும் தென்மாநிலங்களிலும் தேசிய கட்சிகளின் சார்பாக ஏகப்பட்ட நட்சத்திரங்கள் பிரச்சாரம் செய்ததும் நட்சத்திரங்களில் பலரும் வேட்பாளர்களாக நின்றனர். நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலில் இரண்டு திராவிடக் கட்சிகளின் சார்பாக சில மேலும் சென்னையில் இன்று ஒரே மேடையில் தோன்றி நடிகைகள் சிம்ரன், விந்தியா, கோவை சரளா ஆகியோர் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார்கள் என்று பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன.

சினிமா நட்சத்திரங்கள் வேட்பாளர்களாக நிற்பதாலும் அவர்கள் பிரச்சாரம் செய்வதாலும் மட்டுமே எந்த ஒரு அரசியல் கட்சியின் தலையெழுத்தையும் தேர்தல் சமயத்தில் மாற்ற முடியாது. ஆனாலும் நம் மக்களுக்கு சினிமா நட்சத்திரங்களின் மீதுள்ள மோகத்தால் தான் அரசியல் கட்சிகள் நடிகர்களை பெருமளவில் பிரசாரங்களில் ஈடுபடுத்தி வருகின்றன. மகாத்மா காந்திக்கு எதிராக ஏதாவது ஒரு பிரபல நடிகரை நிறுத்தினால் காந்தி டெபாசிட்டையே இழந்துவிடுவார் என்று ஒரு பிரபல கேலிப்பேச்சு உண்டு.

அரசியலில் ஒரு பெரிய இடத்தைப் பிடிக்க சினிமா ஒரு கதவு என்பது தமிழகத்தைப் பொறுத்தவரை தெரிந்த விஷயம். மூன்று தமிழக முதல்வர்கள் சினிமா துறையிலிருந்து வந்துள்ளது அரசியலுக்கும் சினிமாவிற்கும் தமிழகத்தைப் பொறுத்தவரை உள்ள நெருங்கிய தொடர்பைக் காட்டும். தமிழக முதல்வர்களாக சினிமாத் துறையைச் சேர்ந்த மூன்று பேர் வந்திருந்தாலும் அவர்கள் தங்களது தனிப்பட்ட திறமையால் தான் முதல்வரானார்கள்.

தேர்தல் நெருங்கி வரும் இந்த வேளையில் மக்களுக்கு ஒரு வேண்டுகோள். வெறும் சினிமா நட்சத்திரங்களின் பிரச்சாரங்களாலும், அவர்கள் வேட்பாளார்களாக நிற்பதாலும் மட்டுமே தகுதியற்ற ஒருவரை தேர்ந்தெடுத்து சட்டமன்றத்திற்கு அனுப்பி 5 ஆண்டுகளுக்கு அவதிப்படாதீர்கள். திறமையான - போதிய தகுதிகள் உள்ள ஒருவரை தேர்ந்தெடுக்க முயலுங்கள்.

 

 

| |
oooOooo
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   தராசு பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |