ஏப்ரல் 06 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
உடல் நலம் பேணுவோம் : அமில கார சமச்சீர் நிலை
- பத்மா அர்விந்த்
| Printable version | URL |

சென்ற வாரம் தண்ணீரின் அருமைகளை பார்த்தோம். உடல் எவ்வாறு தாகத்தின் மூலம் தண்ணீர் தேவையை சொல்கிறது என்றும் அதை தணிக்கும் முரையையும் பார்த்தோம். இந்த வாரம் இரத்தம் எவ்வாறு தன் அமில அல்லது காரத்தன்மையை சச்சீர் நிலையில் வைத்திருக்கிறது என்று பார்க்கலாம்.

முன்னுரை: இரத்தத்தின் அமிலத்தன்மை  உடலில் அமிலத்தன்மையுள்ல பொருட்கள் உன்ணுவதாலோ உடலின் ரசாயன மாற்றங்களாலோ அ  திகரித்தால், இரத்தத்தின் அமிலத்தனமையும் அதிகரிக்கிறது. அதேபோல காரத்தன்மை உள்ள பொருட்கள் அதிகரித்தல், அல்லது வெளியேறுவது குறைந்தால் இரத்தத்தின் காரத்தன்மை அதிகரிக்கிறது.

உடல் எவ்வாறு சமச்சீர் நிலையை தக்கவைத்துக்கொள்கிறது என்பதே அமில-கார சம ச்சீர் நிலை ஆகும்.சமச்சீர் நிலை தக்கவைத்துக்கொள்வது மிகவும் அவசியம், இல்லை என்றால் உடலின் முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படும் ஒருவகையில் உடலின் கார்பன் டை ஆக்சைடு என்னும் கரியமில வாயுவை நுரையீரல்கள் வெளியேற்றுவதன் மூலம், அமிலத்தன்மை சீராக்க முடியும். கரியமில வாயு மென்மையான அமிலத்தன்மை கொண்டது. இது உடலின் செரிமானம் அதிகரிக்கும் போது உண்டாகும் வேதிவினைகள் உப பொருளாக உண்டாகிறது. வெளியேறாமல் இரத்ததில் இது அதிகரிக்கும் போது அமிலத்தன்மை அதிகரிக்கிறது. மூளை கரியமில வாயு வெளியேற்றப்படும் வேகத்தையும் அளவையும் கட்டுப்படுத்துகிறது. முளை இதன்மூலம் இரத்தத்தின் PH ஐ   சரிப்படுத்துகிறது. சிறுநீரகங்களும் இரத்ததின் அமில காரத்தன்மையை சீரமைக்க உதவுகின்றன. ஆனால் மூளளயைவிட சிறுநீரகங்கள் மிகவும் மெதுவாக வேலை செய்வதால், அதிக நாள் எடுக்கின்றன. இரத்தத்தில் ஒருவகை கார்பானிக் மின்னணுக்கள் மூலமும் சமச்சீர் நிலைமையை தக்க வைத்துக்கொள்ள முடியும். இவர்றிற்கு “buffer என்று பெயர். கார்பானிக் அமிலத்திற்கு செயலிழக்க கார்பானிக் மின்னணுக்கள் என்ற காரத்தன்மை கொண்ட மென்மையான காரம் சீர் படுத்த உதவுகின்றன.

அமிலதன்மை கொண்ட நோய் (acidosis), காரத்தன்மை கொண்ட (alkalosis) என்பது இரண்டு சீரான நிலைமை மாறியதால் வரும் இரண்டு நோய்கள். இதில் அசிடோசிஸ் என்பது அமிலத்தன்மை அதிகரிப்பதாலும் இரத்ததின் Ph குறைவதாலும் வருகிறது. இதில் சுவாசமண்டல குரைபாடு காரணம் என்றால் சுவாச அஸிடோசிஸ் என்றும் சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்யாததால் வந்தால் அதற்கு செரிமான அசிடோசிஸ்(metabolic) என்றும் அழைக்கப்படும்.

அஸிடோசிஸ் என்பது கரியமில வாயு அதிகம் இரத்ததில் சேர்வதாலும் (சுவாச மண்டல அஸிடோஸிஸ்) அல்லது பைகார்பனேட் அயனிகள் குறைவதாலும் உருவாகிறது. இரத்ததின் அமில தன்மை அதிகரிப்பதால், மூளை இன்னும் வேகமாக மூச்சுவிட துரிதப்படுத்துகிறது, இது கரியமில வாயு வெளியேற்ற உதவுகிறது. சிறுநீரகங்கலும் அதிக சிறுநீர் மூலம் சரிப்படுத்த செயல்படுகிறது. ஆனால் அதிக வேலை செய்து இந்த இரு உறுப்புகளும் பழுதடையக்கூடும். இது கோமாவில் முடியக்கூடும். காரணங்கள்: மது, மெத்தனால் போன்றவை அருந்தினால், அவை செரிமானத்திற்கு பிரகு இரத்ததில் உள்ள அமிலத்தை அதிகரிக்கிறது. அதிக ஆஸ்பிரின் எடுத்துக்கொள்ளவதும், நீரிழிவு நோயின் சில கட்டங்களிலும், அமிலம் அதிகம் உருவாகிறது.

நுரையீர்லில் நீர் சேர்ந்துகொள்ளும் போதும், இருமல், எம்பசீமா போன்ற நோய்கள் தாக்கும் போதும் அசிடோஸிச் வரும். இவை நுரையீரல் தசைகளை வலுவிழக்க செய்கிறது. அதேபோல தூக்க மாத்திரைகள், அதிக போதை பொருட்கள் உரிஞ்சுவதாலும் வரக்கூடும்.

வயிற்றுப்போக்கினால் அதிக பைகார்பனேட் அயனிகள் நீங்குவதால், அதிக  உடற்பயிற்சி செய்வதால் லக்டிக் அமிலம் சேர்வதால், சில விஷங்கள் தவறுதலாக உடலில் சேர்வதால், ஆஸ்பிரின் அதிகம் சாப்பிடுவதால் வருகிறது.

அறிகுறிகள்: மென்மையான அமிலத்தன்மை அறிகுறிகள் எதுவும் தென்படாது. மற்றபடி வாந்தி, களைப்பு இரண்டும் அறிகுறிகள். மூச்சு விடுதல் இன்னும் அதிக ஆழமாகவும், வேகமாகவும் இருக்கும். அமிலத்தன்மை அதிகரிக்க, முழப்பம், தள்ளாமை ஆகியவை ஏற்படும். கடைசியில் இரத்த அழுத்தம், வாந்தி, ஏற்பட்டு கோமா, அதன்பின் இறப்பு ஏற்பட வழிஉண்டாகும். எவ்வாறு மருத்துவ ரீதியில் கண்டறியப்படும்? தமனிகளில் இரத்தம் எடுத்து இரத்த கரியமில வாயு அளவு கண்டறிவார்கள்.

இதற்கு குணமாக்க மருந்து எந்த காரணத்தினால் வருகிரதோ அதற்கேற்றவாறு தரவேண்டும். உதாரணமாக நீரிழிவு நோய் ஒரு காரணம் என்றால், அதை கட்டுப்படுத்தாமல் அஸிடோஸிசை குணப்படுத்த முடியாது. சிரைகள் மூலம் பைகார்பனேட் என்ற சோடாஉப்பை செலுத்துவது, அதிக சோடியம் உள்ள திரவங்களை தருவது போன்றவை உதவும்.

|
oooOooo
பத்மா அர்விந்த் அவர்களின் இதர படைப்புகள்.   உடல் நலம் பேணுவோம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |