ஏப்ரல் 06 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
திரையோவியம் : வேட்டையாடு விளையாடு - இசை விமர்சனம்
- கே.ராமப்ரசாத்
| Printable version | URL |

Kamal,Jothikaதாளம் போடவைக்கும் இசை

ஒளி மற்றும் ஒலி காட்டுவதையும் அறிவிப்பதையும் உணர்ந்த பின் உண்மையில் காண்பதும், கேட்பதும் கிடையாது என்னும் ஒரு கலீல் கிப்ரன் கவிதைக்கு ஏற்ப, ஒரு புதிய வட்டாரத்துக்குள் என் ஆன்மா நுழைந்துவிட்டது. இப்படப் பாடல் படம் வெளிவந்த பின் காட்சி அமைப்போடு பார்த்து கேட்டு ஏற்படும் ஒரு அபிப்பிராயத்தை விட எந்தக் காட்சிப் பின்னணியின் கற்பனைக்கும் இடம் தராமல் வெறும் ஒலியாக, வார்த்தையாக முன்னதாகவே கேட்டு விட்டது அதுவும் முதல் முறை கேட்டவுடனே பிடித்து விட்டது.

மஹாலட்சுமியும் ஸ்ரீநிவாஸும் பாடியுள்ள உயிரிலே எனது உயிரிலே ஒரு துளி தீயை உதறினால் என்ற பாடல் இசை மற்றும் வார்த்தைகள் தெளிவாக, அமைதியாக இனிமையாக உள்ளது. இது நடந்திடக் கூடுமா இரு துருவங்கள் சேருமா என்னும் உச்ச ஸ்தாயில் வரும் இடம் மிக அருமை. வா வந்து என்னைச் சேர்ந்திடு என் தோள்களில் தேய்ந்திடு என்று வரும் இடத்தில் உள்ள வயலின்கள் இசை இழைவது அனுபவித்துக் கேட்கப்பட வேண்டிய ஒன்று. ம்ஹூஹூம் ம் ம்ஹூஹூம் என்று வரும் கடைசி ஹம்மிங் அழகானது.பின்னணி இசை இல்லாமலும் தனியாக முணுமுணுக்கவும் சுகமாக உள்ளது. இப்பாடல் இருவர் பேசிக் கொள்வதுபோல (!) உள்ளது.

பாம்பே ஜெயஸ்ரீ மற்றும் உன்னி மேனன் பாடிய பார்த்த நாள் முதல் நாளே உன்னைப் பார்த்த முதல் நாளே காட்சிப் பிழை போலே உணர்ந்தேன் காட்சிப் பிழை போலே ஒர் அலையாய் வந்து எனை அடித்தாய் கடலாய் மாறி பின் எனை இழுத்தாய் எனத் துவங்கும் பெண் குரலும், உன் அலாதி அன்பினில் நனைந்தபின் நனைந்தபின் நானும் மழையானேன் என முடியும் ஆண் குரல் தொடர்ச்சியும் கேட்க இனிமை. இப்பாடல் சடாரெனெ மாறும் தாள வடிவங்கள் கொண்டது. அம்மாற்றமும் ஒரு நொடிக்கும் குறைவான கால இடைவெளியில் நிகழ்வது கேட்டு அனுபவிக்க வேண்டிய ஒன்று. உன்னை மறந்து நீ தூக்கத்தில் சிரித்தாய் தூங்காமல் அதைக் கண்டு ரசித்தேன், தூக்கம் மறந்து நான் உனைக் காணும் காட்சி கனவாக வந்ததென்று நினைத்தேன் என உன்னி மேனன் பாடும் அழகு கற்பனையைத் தூண்டுவது. இப்பாடலும் இருவர் பேசிக்கொள்வது போன்ற ஒரு பாடல்.

ஹரிஹரன் பாடிய வெண்ணிலவே எனத் துவங்கி துடிப்பான இசையுடன் மஞ்சள் வெயில் மாலையிலே மெல்ல மெல்ல இருளுதே பளிச்சிடும் விளக்குகள் பகல் போல் காட்டுதே என்று தொடரும் பாடல் தாளம் போட வைக்கும் ரகம். ஹரிஹரன் குரலுடன் இணைந்து இசையும் கித்தார் ஒலி - மிக மெல்லிதாக - ஹெட் போனில் கேட்டால் தெரியும் அதன் உடன் இசைவு. தாரத்தா தாரத்தார தாரத்தா தாரத்தாரத் தாராஆஆஆ என்னும் பாடல் ஹம்மிங் ஹரிஹரனுக்கே உரிய ஸ்டைல்

நெருப்பே பாடல் தாளம் போட வைத்தாலும் இசையின் தாள லயம் ஒன்று போல உள்ளது. ஜூகல்பந்தி போல ஒரு இசை வடிவம்.

கற்க கற்க பாடலும் அவ்வாறே. ராப் வகையை நினைவுபடுத்துகிறது. பொதுவாக இப்பாடலில் ஏற்ற இறக்கங்கள் இசையில் குறைவு.

பொதுவாக எல்லாப் பாடல்களுமே ஹெட் போனில் கேட்க ரம்மியமாக உள்ளன.

என் பார்வையில் பாடல் வரிசை நான் எழுதியுள்ளபடி.

பாடல்களை இணையத்தில் கேட்க

http://www.thenisai.com/tamil/songs/hj_112.htm

| |
oooOooo
கே.ராமப்ரசாத் அவர்களின் இதர படைப்புகள்.   திரையோவியம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |