ஏப்ரல் 07 2005
தராசு
வ..வ..வம்பு
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
முத்தொள்ளாயிரம்
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
உள்ளங்கையில் உலகம்
கட்டுரை
நியுஜெர்சி ரவுண்டப்
மஜுலா சிங்கப்புரா
அறிவிப்பு
ஆன்மீகக் கதைகள்
அறிவிப்பு
கவிதை
திரைவிமர்சனம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
இலக்கியவாதி  புதிது
- சத்யராஜ்குமார்
ஹர்ஷத் மேத்தா
- சசிகுமார்
- சத்யராஜ்குமார்
கோடிட்ட இடங்கள்
- சித்ரன்
சுய சாசனம்
- பாஸ்டன் பாலாஜி
என்னை எழுதியவர்கள்
- சத்யராஜ்குமார்
களம்
- நாகூர் ரூமி
கங்கை இல்லாத காசி
- பாஸ்டன் பாலாஜி
வார்த்தையல்ல, வாக்கியம்
- என். சொக்கன்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
 
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா? : மருத்துவர் - நோயாளி
- பத்மா அர்விந்த்
| Printable version |


மருத்துவரின் அலுவலகத்திலோ அல்லது மருத்துவமனையில் இருக்கும் போதோ பெரும்பாலும் நாம் ஒருவித அமைதியான நிலையிலே இருக்கிறோம். மருத்துவரிடம் நாம் ஒரு உரையாடலை தொடர்வது இல்லை. இது பெரும்பாலும் சொல்வதை கேட்கும் மாணவர்களைப்போல, அவருடைய திறனுக்கு மதிப்பளித்தோ அல்லது நமக்கு ஒன்றும் தெரியாது என்ற நிலையிலோ அமைதியாக இருந்துவிடுகிறோம். உரையாட தயங்குவதால் நாம் என்ன நினைக்கிறோம் என்பது புரியாமல், மருத்துவர் தடுமாறுவது உண்மை. ஆசியாவிலிருந்து வந்தவர்கள் பெரும்பாலும் தங்களின் விருப்பத்தை/ ஆமோதிப்பதை தலையாட்டுவதம் மூலம் தெரிவிக்கிறார்கள் என்பது போல அமெரிக்காவில் உள்ள மருத்துவர்கள் தெரிந்திருந்தாலும், வாய்மொழி அதிக சக்தி வாய்ந்தது. இந்த நிலைக்கு நோயாளிகள் மட்டுமே கரணமில்லை. சில மருத்துவர்களுடன் அவர்களுக்கான  முந்தைய அனுபவங்களும் அவர்கள் வளர்க்கப்பட்ட விதமும் காரணமாகின்றன. பழக்க வழக்கங்களை மாற்றிக்கொள்ள ஒரு நல்ல உரையாடல் அவசியம்.

ஒருவர் அடிக்கடி வரும் முதுகு வலியால் அவஸ்தைபடுகிறார் என   வைத்துக்கொள்வோம். மருத்துவரிடம் செல்லும் அவர், சமீப காலத்தில் தன் உடலில் ஏற்பட்ட மாற்றங்கள் அனைத்தையும் கூறவேண்டும். நாமாக இது காரணம் இல்லை என்று நினைத்துக் கொண்டு சொல்லாமல் இருக்கக்கூடாது. இதன் மூலம் மருத்துவருக்கும் உங்கள் எண்ணங்களை அறிய முடிகிறது.

நாம் ஒவ்வொருவரும் நமது செயலை, சிந்தனையை சரியானதென்றே எப்போதும் நினைப்பதால், மாற்று கருத்து சொல்லும் ஒருவருடன் ஒருவித மாறான நோக்கில் (conflict) இருக்கிறோம். காலையில் பல் விளக்க அடம் பிடிக்கும் குழந்தையிலிருந்து. குழந்தையிடம் மன்றாடும் பெற்றோர்கள், உடனே உனக்கு கார் பிரஷ் வேண்டுமா ? சூப்பர்மன் பிரஷ் வேண்டுமா ? என்றோ, பல் விளக்கி உடனே தயாரானால், மிட்டாய் கிடைக்கும் என்றோ சொல்லி குழந்தையை தயார் செய்வது நித்தம் தொடரும். பிறகு இதில் குளிப்பதில் அடம், கிளம்ப அடம் என்று ஒரு தொடர்கதையாகிவிடும். மேலும் பரிசுகள் வேண்டும் என்றோ, அந்த கவனமும் அன்பும் வேண்டும் என்றோ நித்தம் அடம் பிடிக்கிறது. அதற்கு மாறாக, குழந்தையிடம் பல் தேய்க்காவிட்டால், பளீரென்ற அழகு பாப்பாவின் சிரிப்பு போயவிடும், வாயில் பூபு வரும் அப்பா, அம்மா எல்லோரும் பல் தேய்ப்பது போல பாப்பாவும் தேய்க்க வேண்டும் என்று இரண்டு நாட்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டே வந்தால், புரிந்தாலும் புரியாவிட்டாலும், இதில் நீங்கள் கண்டிப்பாக இருப்பதும், பல் விளக்காவிட்டால் தனக்கு பூபு வரும் என்பதும் குழந்தைக்கு நிச்சயம் புரிந்துவிடும்.

கீழே உள்ள இரு மாறுபட்ட  உரையாடலளைக் கவனியுங்கள்.

மருத்துவர்: நீங்கள் கொழுப்பு அதிகம் உள்ள உணவு உண்பதை கட்டுப்படுத்த வேண்டும்.

நோயாளி: நான் அதிகம் அம்மாதிரி உண்பதில்லை, எப்போதாவது சில சமயம்……………..

மருத்துவர்: உங்கள் முதுகுக்கு நல்லது என்று சொன்னேன்

நோயாளி: மனதிற்குள் (கொழுப்பு அதிகமானால் இதயத்தை பாதிக்கும் என்றல்லவா சொல்வார்கள்) வெளியே: முயற்சி செய்கிறேன்.


இரண்டாவது வகை:

மருத்துவர்: உங்கள் முதுகு வலிக்கு என்ன காரணமாக இருக்கும், உங்கள் உடலில், பணியில் சமீப காலத்தில் ஏதேனும் மாற்றம் உண்டா?

நோயாளி: நான் சற்று எடை கூடியிருக்கிறேன். முன்னெல்லாம் நிறைய நடக்க வேண்டியிருக்கும் ஆனால், இப்போது அப்படையில்லை

மருத்துவர்: உங்கள் உயரத்திற்கு எடை அதிகம் இல்லை, ஆனால் நம் கால்கள் ஒரே எடைக்கு பழகி விட்டு திடீரென இரண்டு பவுண்டு கூட ஆனாலும், அது முதுகெலும்பில் பாரத்தை தருகிறது. சிலர் உணவில் கட்டுப்பாடு கொண்டு எடை கட்டுமானத்தில் வைத்து இருப்பார்கள். சிலர் உடல் பயிறி செய்வார்கள். இதில் உங்களுக்கு எது எளிதாக இருக்கும். இங்கே முடிவெடுப்பது நோயாளியின் கையில். அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அவரின் தன்மானம் உயர்த்தப்படுகிறது

நோயாளி: உடற்பயிற்சி செய்யவேண்டும் என்றுதான் ஆசையாயிருக்கிறது. ஆனாலும் பாருங்கள் ஒருநாளைப்போல வீட்டிற்கு திரும்பும்போது அசதியாயிருக்கிறது. ஒன்று மாற்றி ஒன்று ஒரே வேலை

மருத்துவர்: என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. எனக்கும் அதே நிலை தான். என்னிடம் வரும் பலர் உங்களைப்போலத்தான், உங்கள் வாடிக்கையாளரின் தேவையை குறித்த கலத்தில் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற காரணத்தால் வேலை செய்யவேண்டியிருக்கிரது ( இங்கே நீங்கள் மட்டும் தனியே இல்லை என்பது உணர்த்த படுகிறது. இது உங்களை ஒரு comfortable stageக்கு கொண்டு செல்கிறது.

வேண்டுமானல் ஒன்று செய்யுங்கள். மாடிப்படிகளில் கூடுமானவரை ஏறி செல்லுங்கள், மதியம் ஒரு 20 மணித்துளிகள் உங்கள் அலுவலகத்தை சுற்றி நண்பர்களுடன் நடந்து பாருங்கள், காரை தொலை தூரம் நிறுத்திவிட்டு நடக்க முயற்சி செய்து பாருங்கள். உங்களால் முடியாதது இல்லை என்று சொல்லி நிறுத்தி விட வேண்டும். இதற்கு மேலும் மருத்துவர் அறிவுறை கூறினால், மனம் மீண்டும் சண்டை போட தயராகிவிடும்.

இது சரிவராவிட்டால் சொல்லுங்கள் எங்கள் nutrionistஉடன் பேசலாம் என்று சொல்லலாம்.

இரண்டாம் முறையில் நோயாளிக்கு தான் மட்டும் தனியே இல்லை என்பதும், தான் முடிவெடுத்த ஒரு திருப்தியும் இருக்கும். மேலும் எடை குறைவதால் வரும் நன்மைகளும் மனதில் ஒரு முற்போக்கான சிந்தனையை தரும்.

அதே சமயம் மருத்துவருக்கு நோயளியின் மனநிலை புரியும். நோயாளி இன்னமும் குழப்பத்தில் இருக்கிறாரா, தயார்நிலையில் இருக்கிறாரா என்று. குழப்ப நிலையில் இருந்தால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று அடுத்த வாரம் யோசிப்போமா?

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com - Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |