ஏப்ரல் 07 2005
தராசு
வ..வ..வம்பு
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
முத்தொள்ளாயிரம்
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
உள்ளங்கையில் உலகம்
கட்டுரை
நியுஜெர்சி ரவுண்டப்
மஜுலா சிங்கப்புரா
அறிவிப்பு
ஆன்மீகக் கதைகள்
அறிவிப்பு
கவிதை
திரைவிமர்சனம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
இலக்கியவாதி  புதிது
- சத்யராஜ்குமார்
ஹர்ஷத் மேத்தா
- சசிகுமார்
- சத்யராஜ்குமார்
கோடிட்ட இடங்கள்
- சித்ரன்
சுய சாசனம்
- பாஸ்டன் பாலாஜி
என்னை எழுதியவர்கள்
- சத்யராஜ்குமார்
களம்
- நாகூர் ரூமி
கங்கை இல்லாத காசி
- பாஸ்டன் பாலாஜி
வார்த்தையல்ல, வாக்கியம்
- என். சொக்கன்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
 
ஆன்மீகக் கதைகள் : அன்று கல், இன்று குதிரை !
-
| Printable version |

இராம இராவண யுத்தம் முடிந்தது. ஸ்ரீராம பட்டாபிஷேகம் நடந்தது. அவர் அரசாட்சி புரியலானார். அவர் ஆட்சி மேலும் சிறப்புற, அசுவமேதயாகம் நடத்தினார். இந்த யாகத்தின்

முடிவில் தமது குலகுருவான வசிஷ்ட முனிவருக்கும், மற்றும் பலருக்கு பூஜைகள் செய்தார். அதன் பிறகு அசுவமேத குதிரைக்கு அபிஷேகம் செய்வித்தனர். அறுபத்தி நான்கு

மன்னர்கள் தங்கள் தர்மபத்தினி மகராணி சகிதம் குதிரைக்கு அபிஷேகம் செய்தனர். இதேபோல் ஸ்ரீராமபிரானின் தம்பிகள் குதிரைக்கு அபிஷேகம் செய்தனர். கடைசியாய் ஸ்ரீராமன், குதிரைக்கு அபிஷேகம் செய்தார். ஸ்ரீராமபிரானின் கைகள் அக்குதிரைமீது பட்டவுடன், குதிரை மனிதனாக மாறிவிட்டது.

எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம். அந்த மனிதனைப் பார்த்து, "ஐயனே, நீங்கள் யார் ?" என்று வினவினார்கள்.

அம்மனிதன் சொன்ன கதைதான் இது : அவன் முன்ஜென்மத்தில் ஒரு அந்தணனாக இருந்திருக்கின்றான். பல தான தர்மங்களைச் செய்து வாழ்ந்து வந்தான். தருமம் செய்வதின் பலன் உணர்ந்து ஏராளமான தர்மங்கள் செய்தான். பெரும் புகழ் அடைந்தான். மேலும் புகழ் பெற பெரிய யாகம் ஒன்றைச் செய்தான். புகழ் போதை தலைக்கேறியது. கர்வமும் ஏரியது.  விளைவு ?

யாகத்துக்கு வந்த துர்வாசரின் வருகையை அவனுக்குத் தெரிவித்தனர். அகந்தையினால் தலைக்கனம் ஏறியவன், அம்மாமுனியை அலட்சியப்படுத்தினான். துர்வாசருக்கு கோபம் வந்தது.

'ஏ மானுடனே ! யாகம் செய்வதால் தருவம் செய்வதால் அகந்தை தலைக்கேறி, என்னை அலட்சியப்படுத்துகிற அளவில் இருக்கிறாய். என்னை மதிக்காத நீ இன்று முதல் அசுவமாக (அதாவது குதிரையாக) மாறிடுக" என்று சாபமிட்டார்.

அந்த அந்தணன் நடுங்கிப் போனான். தன் ஆணவத்தால் செய்த வினையைப் பொறுத்தருள முனிவரிடம் வீழ்ந்து வணங்கினான்.

மனமிரங்கிய துர்வாசர் : 'அந்தணனே, நீ ராமநாகம் ஜெபிப்பவன். ஆனால் என் சாபத்தை மாற்ற முடியாது. ஸ்ரீராமபிரான் அசுவமேத யாகம் செய்து, முடிவில் உன்னைத் தொட பழைய உருவடைவாய்' என்றார்.

ஸ்ரீராமர் அந்த அந்தணன் சொன்ன கதை கேட்டு புன்னகை புரிந்தார்.

விஸ்வாமித்திரருடன் போனபோது கால் பட்டு, கல் பெண்ணாகியது அன்று ! இன்னு கை பட்டு குதிரை மனிதனாகியது! இது பற்றி நினைத்துப் புன்னகை புரிந்தாரோ ??

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com - Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |