Tamiloviam
ஏப்ரல் 12 2007
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
பேட்டி : திரு. பழ. நெடுமாறனுடன் ஒர் நேர்முகம்
- திருமலை கோளுந்து [golundhu1979@yahoo.com]
| | Printable version | URL |

பழ. நெடுமாறன் தமிழுக்காக, தமிழர்களுக்காக போராடக்கூடிய தலைவர்களில் முக்கியமானவர். தீவிர தமிழ் பற்று குழுக்களில் இவரது குழு முக்கியமான ஒன்று. தென் ஆசியச் செய்தி என்ற பத்திரிக்கையின் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர். சந்தன கடத்தல் வீரப்பனை இவர் சந்தித்து, கன்னட நடிகர் ராஜ்குமாரை விடுவிக்க முக்கிய பங்காற்றியவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. முல்லை பெரியார் அனை பாசான விவசாயிகளின் வாழ்வுரிமை மாநாட்டை மதுரையில் நடத்த பெரும் முயற்சி எடுத்துக் கொண்டிருந்தார். அந்த முயற்சிக்கிடையே அப்பொழுது அவரிடம் எடுக்கப்பட்ட நேர்காணல்.


தமிழோவியம் :  பொதுவாக இன்றைய தமிழக அரசியல் சூழல் பற்றி சொல்லுங்களேன்?

pazha nedumaranபதில் :- இன்றைய அரசியல் சூழல் குறிப்பாக தமிழக அரசியல் சூழல் போராட்ட குணம் குறைந்தே காணப்படுகிறது. பலவிதத்திலும் தமிழகத்தின் அண்டை மாநிலங்களால் சோதனைகள் வந்து கொண்டு இருக்கிறது. ஒரு பக்கம் கர்நாடகா கவிரி நடுவர் மன்ற தீர்ப்பை மதிக்க மறுக்கிறது. ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்க மாட்டோம் என சத்தமாக குரல் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். மற்றொரு பக்கம் கேரள முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை உயர்த்த அனுமதிக்க மறுத்து வருகிறது. பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவோம் என்கிறார்கள். இவைகள் எல்லாம் தமிழகத்திற்கு இழைக்கப்படும் கொடுமைகள். இதனை தட்டிக் கேட்டு போராட வேண்டிய அரசியல் கட்சிகளும், தலைவர்களும் வெறும் அறிக்கைகளை விட்டு விட்டு அமைதியாகி விடுகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும் என நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.

தமிழோவியம் :- இது போன்ற தண்ணீர் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு நதிகளை இணைப்பது தான் என்று சொல்வதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில் :- அது அடுத்த கட்டம். முதலில் கொடுக்க வேண்டியதை, கிடைக்க வேண்டியதை கொடுக்க வேண்டும். காவிரி ஆற்றை நம்பி 5 மாவட்டங்கள் இருக்கின்றன. பாலாற்றை நம்பி பத்து மாவட்டங்கள் இருக்கின்றன. இப்படி கிடைக்க வேண்டியதை கொடுக்க மறுக்கும் இவர்கள் நதிகளை இணைக்க எப்படி சம்மதம் தருவார்கள் என எனக்கு தெரியவில்லை. இந்த நிலை இப்படியே சென்றால் தமிழகத்தில் உணவு உற்பத்தி பற்றாக்குறை ஏற்படும். இன்றைக்கு தண்ணீருக்கு கையேந்தும் தமிழக மக்கள் நாளை உணவுக்கு கையேந்தும் நிலை வந்து விடும். இதனை எல்லாம் இன்றைய மத்திய, மாநில அரசுகள் உணர்ந்ததாக எனக்கு தெரியவில்லை.


தமிழோவியம் :- இன்றைய தி.மு.க. அரசு பற்றிய உங்களின் மதிப்பீடு என்ன?

பதில் :- இந்த அரசு அமைந்தவுடன் மகிழ்ச்சி அடைந்தவர்களில் நானும் ஒருவன். ஆனால் இந்த அரசின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. எதிர்கட்சிகளை சேர்ந்தவர்களை கைது செய்வதில் தான் தீவிரமாக இருக்கிறார்கள். இந்த அரசு நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். ஆனால் அதனை செய்வதில்லை. தி.மு.க. அரசு பல்வேறு பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டு தவிப்பதாக எனக்கு தெரிகிறது.

தமிழோவியம் :- இன்றைய தமிழர்கள் மனநிலை தமிழகத்தின் அடிப்படை பிரச்சினைகள் பற்றி, எதையுமே கண்டு கொள்ளாமல் இருக்கும் போக்கை கொண்டதாக இருக்கிறது. இதற்கு எல்லாம் காரணமாக இருப்பது எது?

பதில் :- உண்மை தான். தமிழர்கள் தங்களின் உரிமைகள், சலுகைகளை பறிக்கும் வகையில் மத்திய அரசும், அன்டை மாநிலங்களும் நடந்து கொண்டாலும் அதனை தட்டிக் கேட்க, போராட்டம் நடத்த கூவி, கூவி அழைக்க வேண்டி இருக்கிறது. காவிரி நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பு வந்தவுடன் கர்நாடகாவில் எப்படி எல்லாம் போராட்டம் நடத்தி, நமது எல்லையான ஓசுருக்குள் நுழைந்து வந்து தங்களின் மொழி உணர்வை பறை சாற்றினார்கள். இங்கு என்ன நடக்கிறது. தொலைக்காட்சிகளில், திரைப்படங்களில் தமிழன் தன்னை அடிமையாக்கிக் கொண்டு விட்டான். இங்கு பொது மக்களை விட ஆட்சியாளர்கள் பகல் வே~ம் போடுகிறார்கள். அதனை விட இரண்டு மடங்கு மீடியாக்கள் செய்கின்றன. சன் தொலைக்காட்சி இங்கு ஒரு பார்வையில் செய்தி வெளியிடுகிறது. அவர்களின் மற்றொரு தொலைக்காட்சி கர்நாடகாவில் தமிழகத்திற்கு எதிராக செய்தி வெளியிடுகிறது. இதனை எல்லாம் தட்டிக் கேட்க இங்கு யாருக்கும் தைரியமில்லை. அதே போல் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையிலும் இங்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் இல்லை. இதற்கு உதாரணமாக அன்மையில் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சுடப்பட்டதையும் சொல்லலாம்.

தமிழோவியம் :- இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து சுடப்படுவதும், அதனை தொடர்ந்து சில நாட்கள் இங்கு பேசப்படுவதும், விவாதிக்கப்படுவதும், பின் அதனை மறந்து விடுகின்ற போக்கும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிதே?

பதில் :- உண்மை தான். 1983ம் ஆண்டு முதல் இந்த அட்டுழியம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இது வரை சுமார் 300க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுட்டு;க் கொன்றுள்ளனர். இந்த நிலையை மாற்ற தமிழகத்தை ஆண்ட அரசுகளோ, மத்திய அரசுகளோ எதையும் உருப்படியாக செய்யவில்லை. சமீபத்தில் தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்றதை கண்டிப்பதை விட்டு விட்டு நமது கடற்படை தளபதி சுரே~; மேத்தா அவர்களை விடுதலைப் புலிகள் சுட்டு இருக்கலாம் என்று சொல்லி இருக்கிறார். இவரின் இந்த கருத்து ஒரு வெடிக்கை, கேலிக் கூத்தான கருத்து.

தமிழோவியம் :- இந்த பிரச்சினைக்கு தீர்வாக நீங்கள் எந்த கருத்தை முன் வைக்கிறீர்கள்?

பதில் :-  தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுட்டுக் கொல்வதை தடுக்க வேண்டுமானால் நாம் நமது மீனவர்களுக்கு ஆயுத பயிற்சி அளித்து அவர்களிடம் ஆயுதத்தை கொடுப்பது தான் ஒரே தீர்வு. இந்த முறை ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கிறது. எல்லையோர மாநிலங்களில் ஊர்க்காவல் படை அமைத்து அவர்களின் மூலம் பொது மக்களுக்கு அயூதப் பயிற்சி அளிக்கப்படுகிறது. தீவிரவாதிகள் ஊடுருவி பொது மக்களை தாக்கினால் பதிலுக்கு தாக்கும் படி அறிவுறுத்தப்படுகிறது. இது போல் நமது மீனவர்களையும் தயார் படுத்தினால் உயிர் இழப்பை தடுக்கலாம்.

| | | |
oooOooo
                         
 
திருமலை கோளுந்து அவர்களின் இதர படைப்புகள்.   பேட்டி பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2007 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |