ஏப்ரல் 13 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
உடல் நலம் பேணுவோம் : கால்சியம்
- பத்மா அர்விந்த்
Bookmark in Del.icio.us | | Printable version | URL |


Calciumஉணவு செரிமான முறையிலும், சத்துள்ள உணவை உண்ணாததாலும் வரும் சில கோளாறுகளை பார்த்து வருகிறோம். அவ்வகையில் இந்த வாரம் சுண்ணாம்புச்சத்தின் அருமைகளை தெரிந்து கொள்ளலாம். மேலும் இந்த வாரம் பெண்களின் உடல் நலனுக்கான வாரமாகவும் அறிவிக்கப்பட்டிருப்பதால், சுண்ணாம்பு பற்றி தெரிந்து கொள்வது பொறுத்தமாகவும்  இருக்கும்.

எலும்புகள், பற்கள் இவற்றில் மட்டும் இன்றி தசை செல்களிலும் இரத்ததிலும் கால்ஸியம் உண்டு. சில வகை வினைஊக்கி என்சைம்கள் மற்றும் தசைகள் சுருங்கி விரிய (பெரும்பாலான உடல் இயக்கம் நிகழ) கால்சியம் மிக அவசியம். இரத்தம் உறையவும் இதயம் சரியாக இயங்கவும் கால்சியம் மிக அவசியம்.

உடல் இரத்தம், திசுக்களில் உள்ள கால்சியத்தின் அளவை சீராக வைத்திருக்க முயல்கிறது. இதற்கு ஒரு நாளைக்கு 1000 முதல் 1500 மில்லிகிராம் உட்கொள்ள வேண்டும். எலும்புகளில் இருந்து கால்சியத்தை  கரைத்து இரத்ததிற்கு அனுப்புகிறது. ஆனால் அதிக கால்சியத்தை கரைத்துவிட்டால், எலும்புகள் சக்தி இழந்து உடைகின்றன. ஆஸ்டியோபோரோசிஸ் என்ற எலும்புருக்கி நோய் வரவும் காரணம் ஆகிறது.

கால்சியத்தின் சமச்சீர் நிலையை தக்க வைக்க பரதைராய்டு என்னும் சுரப்பி சுரக்கும் ஹார்மோனும், கால்சிடோனும் பெருமளாவில் உதவுகின்றன.

இரத்ததில் கால்சியம் அளவு குறையும் போது பரதைராய்டு சுரப்பி அதிக அளாவில் சுரப்பதும், கல்சியம் அளவு அதிகரிக்கும் போது குறைவாக சுரப்பதும் என்று அளாவுக்கேற்றமாதிரி சுரக்கிறது. இந்த ஹார்மோன் வைட்டமின் D உறிஞ்சும் சக்தியை அதிகரிக்கிறது. வைட்டமின் டி பிறகு கால்ஸியம் உறிஞ்சுதலை அதிகரிக்கிறது. எலும்புகளில் உள்ள கால்சியத்தை கரைப்பதும், சிறுநீரகங்கள் மூலமாக வெளியேறும் கால்சியத்தின் அளவை குறைப்பதும் இதன் செயல்பாடுகளில் அடங்கும். கால்சிட்டோனின் அதற்கு மாறாக இரத்தத்திலிருந்து கால்சியத்தை எலும்புகளுக்கு அனுப்புகிறது.

கால்சியம் குறைவாக  இருந்தால் அதற்கு ஹைப்போ கால்சியம் என்று பெயர். பொதுவாக கால்சியம் அல்புமின் என்ற புரதத்துடன் சேர்ந்தே இரத்தத்தில் இருக்கும். அல்புமினுடன் சேர்ந்திருக்கும் போது செயல் இழந்து இருக்கும் கால்சியம், திசுக்கள் சென்றவுடன் அல்புமினை துறந்து செயல்திறன் மிக்கதாக மாறுகிறது. இரத்ததில் அல்புமினுடன் சேராத கால்சியம் இல்லாதவரை எந்த பிரச்சினையும் இல்லை. மொத்த கால்சியம் எனக்குறிப்பிடப்படுவது அல்புமினுடன் சேராத வீரியம் மிக்க கால்சியத்தையே ஆகும்.

அதிக கால்சியம் சிறுநீரில் வெளியேறுவதால் அல்லது எலும்புகளில் இருந்து கால்சியம் இரத்ததில் கரையாமல் இருந்தால் குறைந்த கால்சியம் உண்டாகும். பாராதைராய்டு சுரப்பிகள் மிக குறைவாக சுரப்பதாலும், பரத்தைராய்டு சுரப்பிகல் இல்லாமல் பிறட்ந்திருந்தாலும் இந்நிலை உண்டாகும்.

மக்னீசியம் என்ற தாது குறைவாக இருந்தாலோ அல்லது வைட்டமின் டி அளவு குறைவாக இருந்தாலோ குறைவான கால்சிய அ ள வு ஏற்பட சாத்தியம் அதிகரிக்கிறது.

குறைவான கால்சியம் ஆரம்பத்தில் எந்த விளைவுகள் கொடுக்காவிட்டாலும், நாளடைவில் மூளையில் சில விளைவுகளை தரக்கூடும். இது மன  நலத்தை பாதிக்கவும் செய்யலாம். குழப்பம், நினைவு தவறுதல், மன அழுத்தம், கற்பனை (hallucination) ஆகியவை ஏற்படக்கூடும்.

இந்நிலை கால்சியம் அளவு சரியான உடனே நீங்கிவிடும். சில சமயம் குறைந்த கால்சியம் இதய துடிப்பை பாதிக்கவும், தொண்டையில் உள்ள தசைகளில் விரைப்புத்தனமையை தரக்கூடும்.

| | |
oooOooo
பத்மா அர்விந்த் அவர்களின் இதர படைப்புகள்.   உடல் நலம் பேணுவோம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |