ஏப்ரல் 20 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கவிதை : சங்கே முழங்கு !
- தியாகு [seewtypie2000@gmail.com]
Bookmark in Del.icio.us | | Printable version | URL |

இல்லாதவன் இருப்பவனிடம்
இருப்பவற்றை எல்லாருக்கும் கொடு என
கத்தி கத்தி கேட்டாலும் தரமாட்டான் - எச்சில்
கையால் காக்காய் விரட்டமாட்டான்.

பொல்லாதவன் பிழைக்க தெரியாதவன்
பொடாவில் போடுங்கள் என்பான்-பொதுவாக
சொல்லால் திருத்தமுடியாத போது-பல
சோம்பேறி சாமியார்களை துணைக்கழைத்து

சாமியென்பான் பூதமென்பான்
சதுர்வன வேதமென்பான்
சாதியென்பான் பேதமென்பான் -ஐயகோ
சண்டையை மூட்டிடுவானே!.

சாப்பிட சோறில்லாதவனுக்கு
சாதி எதற்கு-அட சாமிதான் எதற்கு
சமுதாய பிரிவினைகளும் சண்டைகளும்-தெரியாமல்
சந்துக்கு சந்து சாமிவைத்து கும்பிடும் நண்பா?.

எல்லாரும் சமமென்று -எங்கள்
ஜனநாயகம் முழங்குது என்பான
ஏழை எவனாவது ஆட்சி ஏறியதுண்டா - அட ஏழை பெயரை
சொல்லி ஆட்ச ஏறியவனும் ஏதாவது செய்ததுண்டா?

காசு பார்க்கும் தொழிலாக கட்சிகள்மாறி பல
காலமாட்சி பழங்கதையாட்சி.
சாவு ஒரு முறைதான் வாழ்வும் ஒரு முறைதான்
சாதித்தவனின் வாழ்வே இத்தனைகால
சமுதாய வரலாறு!

சிந்தனையை கூராக்கி சிதைத்திடுவீர்
சமுதாய பேதங்களை-செதுக்கிடுவீர்
புதிய சமுதாய வாழ்வுதனை!
சங்கே முழங்கு !

|
oooOooo
தியாகு அவர்களின் இதர படைப்புகள்.   கவிதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |