Tamiloviam
ஏப்ரல் 26 2007
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
அண்ணாச்சி உலகம் என்னாச்சி ? : 27% ஒதுக்கீடு
- [feedback@tamiloviam.com]
| | Printable version | URL |

மணி உடம்பெல்லாம் வழிந்தோடும் வியர்வையைத் துடைத்துக் கொண்டு வந்தான்.

"அண்ணாச்சி இப்பவே இந்தப் போடு போடுதே இந்த வருசம் வெயில் பொசுக்கிடும்போல இருக்கே?"

"வடக்க இதுவரைக்கும் 8 பேர் செத்துருக்கானுவ. வெயில் அந்தப் போடு போடுது மணி. ராஜஸ்தான்ல தெருவுல ஆள் நடமாட்டமே இல்லியாம்டே."

"அதெல்லாங்கெடக்கட்டும் ரெண்டு வாரமா ஆளக் காணோம் எங்க போனீரு?"

"ஒரு வேல வெசயமா சென்னை போயிருந்தேண்டே. வெயில் கொழுத்துது சென்னையில. இங்கையாவது ஆத்துல கொளத்துல குளிக்கலாம் அங்க கூவத்துலையா முங்க முடியும்?"

"சென்னை போயிருந்தியேளே அங்க அரசியல் நெலவரமெல்லாம் எப்டி?"

"வழக்கம்போலத்தாண்டே. உ.பி தேர்தல்ல அம்மா இந்தியில பிரச்சாரம் செஞ்சிருக்காங்க. சந்த்ரபாபு நாயுடு adbul kalamமுலயாம்சிங்கெல்லாம் கார்வரைக்கும் வந்து வழியனுப்பினத பெருசா சொல்லிக்கிறாங்க."

"அப்ப மத்தியில மூணாவது கூட்டணி உருவாயிடுச்சுன்னு சொல்லுதிய?"

"இதெல்லாம் ஒரு கூட்டணியா? மத்தியில தேர்தல் வர்றவரைக்கும் நீடிச்சாலே பெரிய விசயம். தேர்தல்னதும் நியாபகத்துக்கு வருத்து. அப்துல் கலாம் பதவியில தொடரதுக்கு பலத்த ஆதரவும் அதேமாதிரி எதிர்ப்பும் கெளம்பியிருக்கு. பி.ஜே.பி. திட்டவட்டமாயில்லைன்னாலும் அங்கங்கே கலாம் தொடரணும்னு சொல்லியிருக்கு ஆனா காங்கிரஸ் கூட்டணில கம்யூனிஸ்ட்காரங்க கலாம் வரக்கூடாதுன்னு நச்சுபண்ணுதாங்க. அதனால சோனியாஜீக்கு கொஞ்சம் நெருக்கடிதான்."

"இதனால மட்டுமா?"

Rahul Gandhi"நீ சொல்றது புரியுது. ராகுல் காந்தி பேசுனதப் பத்திதான சொல்ற. அது பெரிய விசயமேயில்லப்பா. சின்னப்புள்ள, கருத்தையெல்லாம் வெளிப்படையா சொல்லுது. இப்ப நம்ம ஊர்ல தேர்தல் நேரத்துல பேசுறதக் காது குடுத்து கேக்க முடியுமா? ஒரு தொகுதியில ஒரு மாறியும் அடுத்த தொகுதியில வேற மாறியும் ஒரு சாதிக்கு ஒண்ணாவும் மறு சாதிக்கு ஒண்ணாவும் பேசறானுவ."

"அப்ப ராகுல் சொன்னதெல்லாம் சரியா?"

"சரி தப்புன்னு பாக்காம எனக்கு என்ன தோணுதுன்னா இவரு இஷ்ட்டப்படி பேசுறதக் கேட்டுட்டு ஆமாஞ்சாமி போடுற அளவுக்கு மக்கள் இருக்கானுவளே."

"சரி இந்த என்கவுண்டர் விசயம் என்னாச்சி?"

"அது சூடு ஏறிட்டே போவுதப்பா மணி. குஜராத்துலேந்து மாறி இப்ப இதுல ஆந்திராப் போலீசையும் சேக்கப் பாக்கானுவ. ஆனா ஆந்திர முதல்வர் இத மறுத்திருக்காரு."

நாயர் கேட்டார் "அண்ணாச்சி எந்தா அது வெவகாரம்."

"குஜராத்துல ஒருத்தன என்கவுண்டர்ல போலீஸ் கொன்னுடுச்சு நாயர். ஆனா இப்ப அந்த என்கவுண்டர் ஜோடிக்கப்பட்டதுன்னு சொல்லி 3 ஐ.பி.எஸ் அதிகாரிய கைது செஞ்சுருக்காங்க. அதுல ஒருத்தரு நரேந்த்ர மோடிக்கு ரெம்ப நெருக்கமாம். இதனால விஷயம் இன்னும் சூடு புடிச்சிருக்கு."

"இந்த 27% என்னாச்சு?" மணி கேட்டான்

"இதப்பத்தி இப்ப சத்தமா பேசமுடியாதப்பா. நீதிமன்றத்துல இட ஒதுக்கீட பெறத் தகுதியானவங்க யாருன்னு பார்த்து அதுக்கேத்தாப்புல செய்யலாம்னு சொல்லிட்டாங்க இதுக்கு இன்னும் 6மாசம் ஆகுதுன்னா, 50 வருசத்துக்கு மேல காத்திருந்தவங்க இன்னும் 6 மாசம் காத்திருக்கக்கூடாதான்னு கேக்குறாங்க.

ஆனா இட ஒதுக்கீட்ட ஆதரிக்கிறவங்க இதெல்லாம் தாமதமாக்குற யுக்தின்னு சொல்றாங்க. இப்ப உயர்கல்வி நிறுவனங்கள்ல எல்லாம் அட்மிஷன் ஆரம்பிக்கச் சொல்லியாச்சு. இதுல அடுத்த கட்டம்னு எதுவுமில்லாம ஒரு இடைவெளியில நிக்குதுன்னுதான் சொல்லணும்."


மணி கேட்டான்,"ஆனா அண்ணாச்சி நுளைவுத் தேர்து ரத்து செல்லும்னு தீர்ப்பாயிடுச்சே."

"ஆமா. இதுல என்னென்ன விளைவுகள் வரும்னு பொறுத்திருந்துதான் பாக்கணும். நாலு கிராமத்து பசங்க முன்னுக்கு வந்தா நல்லதுதான். ஆனா இதுக்கு வேற வழி ஏதாவது பாத்துருக்கலாமோன்னு தோணுது. இப்ப எஸ்.எஸ்.எல்.சி பரிட்சைய போர்ட் எக்சாமில்லாம செய்யலாம்னு ஒரு ஐடியாவும் இருக்குது."

"வேற ஒலகத்துல என்ன நடக்குது.?"

"பழைய ரஷ்ய அதிபர் போரிஸ் எல்ட்சின் எறந்து போனாரு. அதவிட்டா வேற என்ன செய்தி....? ஆங்.. பூமியப் போலேயே இன்னொரு கோள் இருக்குறதக் கண்டுபிடிச்சிருக்காங்க. அங்கேயும் பூமியப்போல உயிரினங்கள் வாழ வாய்ப்பிருக்குதாம்."

"அங்க ஒரு க்ரவுண்ட் வாங்கிப் போடவேண்டியதுதான் இங்கெல்லாம் கொஞ்ச நாள்ல நிக்கக் கூட எடம் கெடைக்காது."

"ஆமாப்பா. இன்னைக்கு கொஞ்ச அவசர வேல இருக்குது. அதனால அடுத்த வாரம் கொஞ்சம் நிதானமாப் பேசலாம் சரியா?"


சொல்லிவிட்டு அண்ணாச்சி நடையை கட்டினார்.

| |
oooOooo
                         
 
அவர்களின் இதர படைப்புகள்.   அண்ணாச்சி உலகம் என்னாச்சி ? பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2007 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |