Tamiloviam
ஏப்ரல் 26 2007
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கடி கடி கடி : தாங்கலை சாமி
- [feedback@tamiloviam.com]
| | Printable version | URL |

நீதிபதி : பார்த்தா படிச்சவனா இருக்கே, இப்படி கள்ள நோட்டு அடிக்கலாமா ?

அவன் : எங்கப்பாதான், வெட்டியா இருக்காதே சொந்தமா காசு பண்ணற வழிய பாருன்னு சொன்னாரு.

நீதிபதி : ???



ஆசிரியர் : தேள் திரவப் பொருளா ? திடப் பொருளா ?

மாணவன் : திரவப் பொருள் சார் ?

ஆசிரியர் : எப்படி ?

மாணவன் : அது கொட்டுமே !!



புது பால்காரனை எப்படி ஆங்கிலத்தில் சொல்லுவே ?

தெரியலையே !!

Paul NewMan


மேட்டூர் அணை பத்தி பத்திரிகையில தப்பா எழுதியிருக்காங்க ?

என்ன எழுதி இருக்காங்க ?

மேட்டூர் அணை நீர் மட்டம் ன்னு.


தயாரிப்பாளர் 1 : மெகா சீரியல் டைரக்டரை வெச்சு சினிமா எடுத்தது தப்பா போச்சு ?

தயாரிப்பாளர் 2 : ஏன் ?

தயாரிப்பாளர் 1 : கிளைமாக்ஸ்ல, ஸ்டில் வெச்சு தொடரும் போட்டுட்டாரு !!


நிருபர் : இருபது வருஷத்துக்கு முன்னால நீங்க எழுதின கதையோட பாதிப்பு இப்பவும் எனக்கு இருக்கு.

எழுத்தாளர் : அப்படியா ! ரொம்ப சந்தோஷங்க

நிருபர் : அப்ப கதை படிக்கறதை நிறுத்தினதுதான் அப்புறம் படிக்கறதே இல்ல.


சார்... ஆறு வருஷத்துல டெபாசிட் பணம் டபுள் ஆகும்னு சொன்னீங்களே... என்ன ஆச்சு?

டபுள் ஆகும்தான் சொன்னேன் .. திருப்பித் தர்றதா சொல்லலையே !

oooOooo
                         
 
அவர்களின் இதர படைப்புகள்.   கடி கடி கடி பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2007 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |