ஏப்ரல் 27 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
உடல் நலம் பேணுவோம் : இரும்பு ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது ?
- பத்மா அர்விந்த்
Bookmark in Del.icio.us | | Printable version | URL |

இயற்கையில் அபரிமிதமாக கிடைக்கும் இரும்பு உடலின் நலத்திற்கு மிக அவசியமாகும். பெரும்பான்மையான புரதங்கள், என்சைம்கள் போன்றவற்றிற்கு இரும்பு ஒரு இன்றியமையாத மூலப்பொருள். ஆக்ஸிஜன் ஒரு இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு உடலில் எடுத்து செல்ல இரும்பு அவசியம். செல்கள் மேலும் பெருக, வளார்ச்சி அடைய இரும்பு முக்கியமான மூலப்பொருள். இரும்பு குறைவால் போதிய ஆக்ஸிஜன் இல்லாமல் தளர்ச்சியும், வேலை செய்ய திறமை இல்லாமை போன்றவையும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவும் ஏற்படும். அதே சமயத்தில் இரும்பு அதிகமானால் விஷமாகி இறக்கவும் நேரிடலாம்.

உடலில் 3ல் 2 பகுதி இரும்பு ஹீமோக்லோபின் ஆக இரத்த சிவப்பணுக்களில் இருக்கிறது.இவை ஆக்சிஜனை திசுக்களுக்கு எடுத்து செல்லும். அதேபோல தசைகளில் உள்ள மையோ க்ளொபின் என்பது ஆக்சிஜனை தசைகளுக்கு மாற்ரும். இவற்ரிலும் இரும்பு சத்து உண்டு.

இரும்பை உறிஞ்ச தேவையான புரதத்திலும் இரும்பு உள்ளது. அதேபோல அதிக இரும்பை சேகரித்து வைக்க உதவும் என்சைம்களில் இரும்பு இருக்கிறது. ஹீம், ஹீம் அல்லாத வகை என இரண்டு வகைகளில் இரும்பு உடலில் இருக்கிறது. ஹீமோ குளோபின் எனப்படும் புரதத்திலிருந்து ஹீம் இரும்பு பெறப்படுகிறது. இது பெரும்பாலும் புலால் உணவில் கிடைக்கும்.பருப்பு வகைகளில் இருக்கும் இரும்பு ஹீம் அல்லாத வகையில் இருக்கிறது. குழந்தைகளுக்காக கிடைக்கும் பாலில் சேர்க்க படும் இரும்பு இந்த வகையை சேர்ந்ததே.

இரும்பு சத்து உறிஞ்சுவதை கட்டுப்படுத்தும் சில காரணிகள்: இரும்பு உறிஞ்சுவது என்பது நாம் தினம் உட்கொள்ளும் உணவில் உள்ள இரும்பு எவ்வாறு உடலுக்குள் கிரகித்து கொள்ளப்பட்டு உபயோகிக்க படுகிறது என்பதைப் பொறுத்து அமையும்.ஒரு நல்ல உடல் நலம் உள்ள மனிதன் உட்கொள்ளும் உணவில் 30% மட்டுமே உறிஞ்சப்படுகிறது. உடலில் சேர்த்து வைத்துள்ள இரும்பின் அளவு உறிஞ்சுவதை கட்டுப்படுத்தும். இது இரும்பு விஷப்பொருளாக மாறுவதை தடுக்க வல்லது. எந்த வகை இரும்பு உணவில் உள்ளது என்பதை பொறுத்தும் மாறும். புலால் உணவிலிருந்து ஹீம் இரும்பு அதிவிரைவில் உறிஞ்சப்படும்.ஹீம் இரும்பு 35% வரை உறிஞ்சப்பட முடியும். ஆனால் ஹீம் அல்லாத இரும்பு 2- 20% வரை மட்டுமே உறிஞ்சப்படுகிறது. இதற்கும் வைட்டமின் C போன்ற பிற உணவுப்பொருட்களின் துணை அவசியம்.தேநீரில் உள்ள டானின், ககல்சியம் என்னும் சுண்ணம்பு சத்து, பாலிபீனால், சில தானியங்களில் உள்ள வேதிப்பொருட்கள் ஹீம் அல்லாத இரும்பு உறிஞ்ச உபயோகமாகின்றன.பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் அதிக இரத்தப்போக்கு இருந்தால், ஹீம் இரும்பு உறிஞ்ச இது போன்ற உணவுப்பொருட்கள் அவசியம்.

ஒரு நாளைக்கு எவ்வளவு இரும்பு அவசியம்? மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்பட்டு மூன்றுவகையான அளவு உண்டு. ஒன்று போதுமான அளவு, இரண்டாவது அதிகமான அளவு மூன்றாவது இதற்கும் மேலே இருந்தால் நச்சுப்பொருளாக மாறிவிடக்கூடிய அபாயத்தைக்குறிக்கும் அளவு.

ஒரு நாளைக்கு தேவையான அளவை குறிக்கும் பட்டியல்

வயது ஆண்(mg/day) பெண்(mg/day) கரு உற்ற பெண்(mg/day) பாலூட்டும் அன்னை
(mg/day)
7 - 12 Months 11 11 - -
1 - 3 yrs 7 7 - -
4 - 8 yrs 10 10 - -
9 - 13 yrs 8 8 - -
14 - 18 yrs 11 15 27 10
19 - 50 yrs 8 18 27 9
51 + 8 8 - -

பொதுவாக நல்ல ஆ ரோக்கியத்துடன் பிறக்கும் குழந்தைகள் முதல் 6 மாதம் வரை தேவையான இரும்பு உடலில் இருக்கும். தாய்ப்பாலில் உள்ள இரும்பை 50% வரை குழந்தைகல் உறிஞ்சிக்கொள்ள  கூடிய தன்மை உடையவர்கள். பசும் பாலில் உள்ள இரும்பின் அளவு குறைவாக இருக்கும். அதனால்தான் ஒரு வயதாகும் வரை பசுவின் பாலை குழந்தைகளுக்கு கொடுப்பது கூடாது. 6 மாதம் வரை தாய்ப்பாலும் அதன் பின் இரும்பு சேர்த்த திட உனவையும் சேர்த்து தரலாம். சிறிய பருவத்தில் அதாவது ஒரு வருடத்திற்கும் முன்பாகவே தாய்ப்பால் நிறுத்தப்பட்ட குழந்தைகளுக்கு இரும்பு சேர்த்த பால் தர வேண்டியது அவசியமாகும்.

குறைந்த  சக்தி உள்ள  உணவு அதிக கலோரிகள் கொண்டிருக்கும் ஆனால் இவை வைட்டமின், மற்றும் தனிமங்கள் குறைவாக கொண்டிருக்கும். இவற்றை உண்ணுவது இரும்பு அளவை கணிசமாக குறைக்கிறது. கேக்குகள், உருளைக்கிழங்கு வறுவல் போன்றவை இதற்கு உதாரணங்களாகும். அதேபோல தாகம் தீர்க்கும் சில மென்பானங்களில் உள்ள செயற்கை சர்க்கரை கூட இரும்பின் உறிஞ்சும் அளவை குறைக்கும்.

உலக சுகாதார மையம் இரும்பின் குறைவால் வரும் நோய்கள்தான்  உலகில் உண்ணும் பழக்கத்தால் வரும் நோய்களில் முதன்மையானவை என்று கூறுகிறார்கள்.  உலகின் 80% மக்கள் இரும்பு குறைவாக கொண்டவர்கள் அதில் 30% மக்கள் இரும்பு குறைவதால் வரும் இரத்த சோகை கொண்டவர்கள் என க் கூறுகிறார்கள்.

எப்போது இரும்பு குறைவு ஏற்படும், இதனால் உண்டாகும் நோய்கள் என்ன அதை எவ்வாறு தடுப்பது என்பது பற்றிய விவரங்களை இனி பார்க்கலாம்.

|
oooOooo
பத்மா அர்விந்த் அவர்களின் இதர படைப்புகள்.   உடல் நலம் பேணுவோம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |