ஏப்ரல் 27 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
நையாண்டி : காணாமல் போனவர்கள்
- திருமலை கோளுந்து [golundhu1979@yahoo.com]
Bookmark in Del.icio.us | | Printable version | URL |

Goundamaniகாணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு :

சினிமாவையும், தமிழனையும் பிரித்துப்பார்க்க முடியாது. சினிமா தான் வாழ்க்கை என்று இருக்கும் தமிழன் அவ்வப்போது சில திரையுலக ஆத்மாக்களை மறந்து விடுகிறான்.  மறந்ததினால் காணாமல் போன சில ஆத்மாக்களை கண்டுபிடிக்க சில அடையாளங்களை சொல்லுகிறோம். அவர்களை கண்டுபிடித்து தருபவர்களுக்கு மாதம் தோறும் மானிய விலையில் பிரியாணி அரிசி கொடுக்கப்படும் என அறிவித்துக் கொள்கிறோம்..

பெயர்: கவுண்டமணி

நிறம்: காக்காவை விட கொஞ்சம் சிகப்பு.

பிறந்த ஊர்: கோயம்புத்தூர் பகுதி.

படிப்பு: பிளஸ் டூ பெயில் என்று கோடம்பாக்கம் சொல்கிறது.

புனைப்பெயர்: நகைச்சுவை தென்றல், நகைச்சுவை மன்னன்

பட்டப்பெயர்கள்: சவுண்ட்காரர், பெல் நடிகர்,

நடித்த படங்கள்: 150க்கும் மேல்

பிடித்தவைகள்: கோழி கால் சு10ப், திட்டியே அக்கப்போர் செய்வது, கோவைசரளா, பாபிலோனா.

வாங்கிய விருதுகள்: தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை நடிகர் விருது, திரைபட இதழ்கள் வழங்கும் சிறந்த நகைச்சுவை நடிகர் விருது. தமிழக மக்கள் வழங்கிய பண விருது.

அடையாளங்கள்: அடுத்தவரை குறிப்பாக எருமை மாடு நிறத்தில் இருக்கும் நடிகரை மிதித்தும், வார்த்தைகளால் அர்ச்சனை செய்தும் புகழ் பெற்றவர். சிறியவர் முதல் பெரியவர் வரை இவரின் நக்கலுக்கும், கேலிக்கும் தப்பியதாக வரலாறு இல்லை.

சாதனை: 16 வயதினிலேயே திரைப்படத்தில் சப்பானி, மற்றும் பரட்டைகளோடு சேர்ந்து  திரையுலகிற்கு அறிமுகம் ஆனவர். சாதாரண வாழைப்பழத்தை வைத்தே இன்றும் தமிழகத்தைக்   கலக்கியவர். ஆரம்பகாலத்தில் இருந்து இறுதி காலம் வரை அடுத்தவருக்கு எடுபிடியாக நடித்தே சாதனை செய்தவர். அதே சமயத்தில் அவர்களைக் கலாய்பதிலும் வல்லவர். இவர் நடிக்காத கேரக்டரே கிடையாது. பிச்சைக்காரன் முதல் பணக்காரன் என வேஷம் கட்டியவர். இரண்டு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து காணாமல் போனவர். அந்த படங்களும் 4 நாள்களுக்கு மேல் எந்தத் தியேட்டரிலும் ஓடவில்லை என்பது ஊர் அறிந்த விஷயம்.

பிடித்தவார்த்தைகள்: பன்றித் தலையா, வெந்தவன், வேகாதவன், அரைவேக்காடு, நாய், கல் நாய், சாவுகிராக்கி, பரட்டை தலையன், செம்பட்டத்தலையா, இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

வேதனை: மஞ்சள் காமலை நோயால் பாதிக்கப்பட்டு தக்காளி மாதிரி இருந்த முகம் ஒண்டிப்போய் சினிமா புண்ணியவான்களால் நிராகரிக்கப்பட்டவர். அதன் விளைவு வீட்டு மொட்டை மாடியில் வாக்கீங் செல்வதும், அவ்வப்பொழுது திரையில் தலையை காட்டுவது. தலையைக் காட்டினாலும் மக்களால் ஏற்றுக்கொள்ளாமல் நிராகரிக்கப்பட்டது.

எதிரிகள்: கேப்டன் விஜயகாந்தின் கோவில் காளை படத்தில் இவரிடம் இளநீர் திருடி அடிவாங்கும் வடிவேலு தான் முதல் எதிரி. வத்தலும் தொத்தலுமாக இருந்த வடிவேலு தனக்கு எதிரியாக மாறுவார் என்று இவர் ஒரு போதும் கனவு கண்டதில்லையாம். அதே போல் இவரிடம் உதை வாங்கியே பெயர் பெற்ற  நடிகர் செந்தில் இன்னும் சினிமாத்துறையில் இருப்பதையும், அரசியல் மேடையில் கலக்கி வருவது இவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அதே போல் ஊருக்கு உபதேசம் செய்யும் ஒரு விவேகமான நடிகர் தான் இவருக்கு எதிரி. தற்பொழுது அந்த நடிகர் ஹீரோ வேசம் போட்டு ஓட்டத் தெரியாத பைக்கை ஓட்டி காலை ஒடித்துக்கொண்டதில் இவருக்கு செமத்தியான மகிழ்ச்சி என்று கோடம்பாக்கமே ரோடியோ கட்டாமல் செய்தி பரப்பப் படுகிறது.

வேண்டுகோள்: மேற்சொன்ன அடையாளங்களோடு இருக்கும் ஆத்மாவை யாரும் பார்த்தாலோ, அல்லது அவரைப்பற்றி கேள்விப்பட்டாலோ தெரிவிக்க வேண்டிய முகவரி.

உதைப்பவன் பட நிறுவனம்,
5, வம்பு பேசுவோர் குடியிருப்பு,
போக்கத்தவன் காலனித் தெரு,
காணாமல்போனவன்பட்டி.
விளக்கெண்ணெய் மாவட்டம்.--000000
என்ற முகவரிக்கு தெரியப்படுத்தவும்.

| | |
oooOooo
திருமலை கோளுந்து அவர்களின் இதர படைப்புகள்.   நையாண்டி பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |