ஏப்ரல் 28 2005
தராசு
வ..வ..வம்பு
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
மஜுலா சிங்கப்புரா
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
முத்தொள்ளாயிரம்
கட்டுரை
உள்ளங்கையில் உலகம்
கவிதை
திரைவிமர்சனம்
ஆன்மீகக் கதைகள்
துணுக்கு
அறிவிப்பு
 
  முதல் பக்கம்
தொடர்கள்
இலக்கியவாதி  புதிது
- சத்யராஜ்குமார்
ஹர்ஷத் மேத்தா
- சசிகுமார்
- சத்யராஜ்குமார்
கோடிட்ட இடங்கள்
- சித்ரன்
சுய சாசனம்
- பாஸ்டன் பாலாஜி
என்னை எழுதியவர்கள்
- சத்யராஜ்குமார்
களம்
- நாகூர் ரூமி
கங்கை இல்லாத காசி
- பாஸ்டன் பாலாஜி
வார்த்தையல்ல, வாக்கியம்
- என். சொக்கன்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
 
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா? : குழந்தைகளின் பழக்கங்களை மாற்றும் முறைகள்
- பத்மா அர்விந்த்
| Printable version |

 

குழந்தைகள் இரண்டு வயது முதற்கொண்டு நாம் சொல்வதை புரிந்து கொள்ளவும் சிந்திக்கவும் ஆரம்பிக்கிறது. அழுகின்ற போதெல்லாம் அம்மாவின் கவனிப்பு கிடைக்கும் என  தெரிந்தால் கீழே விட்டவுடனே அழும். அழட்டும் என்று சில நிமிடங்கள் விட்டு விட்டால், அழுகையை நிறுத்திவிட்டு தான்பாட்டுக்கு விளையாட ஆரம்பித்துவிடும். அதேபோல குழந்தைக் காப்பகங்களில் விடும் போது அழும் குழந்தை நீங்கள் நகர்ந்ததும் விளையாடி மகிழ்ச்சி அடையும்.

குழந்தைகளுக்கு புரியும் வண்ணம் நேரடியாக பலன்களை சொல்ல வேண்டும். உதாரணமாய் வேலை செய்ய விடாமல் தொணதொணக்கும் குழந்தையிடம், அம்மா வேலை முடிக்கும்வரை அமைதியாய் இருந்தால் நாம் இருவரும் 1 மணி விளையாடலாம். இப்படி பண்ணினால் வேலையும் முடியாது, விளையாடவும் முடியாது என்று சொல்லி பாருங்கள். இரண்டு குழந்தைகள் இருக்கும் போது, எல்லா அன்பும் தனது தம்பி/தங்கைக்கே கிடைக்கிறது என்று உணரும் குழந்தை, தனது தம்பியை தொல்லை படுத்த ஆரம்பிக்கிறான்/ள். அப்போது தொடாதே என்று நீங்கள் கூறினால் அது நேர்மறையான வினையை துவக்குகிறது. கடிந்து கொண்டாலும் கவனிப்பு கிடைப்பதால் அதை மேலும் மேலும் செய்ய, உங்கள் கோபம் அதிகமாகி அடித்து வருத்தத்தை விளைவிக்கிறீர்கள். இதற்கு மாறாக, தங்கை/தம்பி பிறக்கும் முன்னேயே மூத்த குழந்தையையும் ஈடுபடுத்தினால், அதன் பின்னும் துணைக்கு அழைத்து பேசினால் அன்பும் வளரும், மனமும் அமைதியுறும்.

பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் தானாகவே வீட்டு பாடம் செய்ய, நேரத்தில் கிளம்ப, முந்தைய இரவே எல்லாவற்றையும் எடுத்துவைத்துக் கொள்ளும் போது மனநிலையை பாதிக்காது என்பதை சொல்லி பழக்கப்படுத்த வேண்டும். சின்ன சின்ன கைவேலைகளும் செய்து பழக்க வேண்டும். தனது துணிமணிகளை மடித்து வைத்தல், தனது அறையை சுத்தம் செய்தல், சமையலறையை தூசி துடைத்தல் போன்று வயதுக்கு ஏற்ற வேலைகள்பெண், ஆண் என்று இருபாலாருக்கும் நாம் வேலை செய்யும் போது கூடவே செய்யச் சொன்னால் பின்னாளில் எந்த வேலையையும் செய்ய முடியும். தன்னைவிட சிறிய குழந்தைகளுக்கு உதவி செய்தல், பணிவாக இருத்தல், பெரியோரிடம் அன்புடன் இருத்தல் போன்றவை எந்த வயதுக்கும் ஏற்ற கல்வியே ஆகும்.

சமீபத்தில் என் சகோதரி வீட்டிற்கு சென்றிருந்தோம். அப்போது அவளுடைய 3 வயது மகன் திடீரென வந்து, mommy, I am upset, என்றவுடன் என்ன விஷயம் என்று விசாரித்து பார்த்ததில் இன்னொரு குழந்தை தன்னுடைய விளையாட்டு பொம்மையை மற்ற குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்ள மறுக்கிறான் என்றான். வயதென்னவோ 3தான். ஆனாலும் நினைத்தை கோர்வையாக, வருந்துகிறேன் என்பதையும் எதனால் வருந்துகிறேன் என்பதையும் சொல்ல அறிந்திருக்கிறது. இந்த பழக்கம் இல்லாமல் போனால், பின்னாளில் அலுவலகக் கோபத்தை அடுத்தவரிடம் காண்பிக்கும் பழக்கம் வரும். கோபம் கொள்வதில் தவறே இல்லை, அதை சரியாக சொல்லவும் செய்யவும் கற்றுத்தர வேண்டும். மனநிலை பயிற்சியாளர்கள் குழந்தைகள் வருந்தும் போது அதை ஒரு காகிதத்தில் எழுதவோ, படம் வரையவோ அல்லது க்ரேயானால் கிறுக்கவோ சொல்கிறார்கள். இது அவர்களுடைய மனநிலையை அறிய உதவும்.

இரண்டு வருடம் முன்பு என் மகனின் பள்ளியில் ஒரு சிறுவன் கையில் மீனுடன் இவனை துரத்த, மீன் வாசம் பிடிக்காத என் மகன் கத்திக்கொண்டே ஒடியிருக்கிறான். அவனின் பயம் ஒரு விளையாட்டாக மாற, அந்த சிறுவன் இன்னும் துரத்தியிருக்கிறான். பள்ளி கவுன்சிலர் இருவரையும் அழைத்து இதை எவ்வாறு தடுத்திருக்கலாம் என்பதை இருவரையும் யோசிக்க சொல்லியிருக்கிறார். என் மகன் அவனிடம் தெளிவாக மீன் எனக்கு பிடிக்காது, ஆகையால் எனக்கு வேண்டாம் என்று சொல்லியிருக்கலாம் என்று எழுதித்தர, அந்த மாணவன் தான் செய்தது தவறு, ஏன் தவறு என்பதையும், அடுத்தவரின் உணர்ச்சிகளை, விருப்பு வெறுப்புகளை புரிந்து கொள்ளல் வேண்டும் என்றும் உணர்ந்து எழுதித்தந்து மன்னிப்பு கேட்டுக்கொள்ள இருவரும் கைகுலுக்கி நண்பர்களாக பிரிந்தனர். இன்னமும் என் மகன் அதை சொல்வது உண்டு. சரி தவறு என்பதை நாமே சொல்வதைவிட, அவர்களை சிந்திக்க சொல்லி ஒரு காகிதத்தில் எழுதவும் சொல்லிப்பாருங்கள். பிறகு உங்கள் கருத்தை  சொன்னால் மனதில் நன்கு படியும்.

திடீரென்று பேசாமல் அமைதியாகும் பதின்ம வயதினரை அவர்கள் உணர்வை மதிக்கவும் பழக வேண்டும். பள்ளியில் உள்ள சக வயதினருடன் ஏதேனும் மனத்தாங்கல்கள் வந்திருக்கலாம், இல்லையெனில் தன் தோற்றம் பற்றிய கருத்தும் கவலையும் வந்திருக்கலாம். பெற்றோரிடம் சொன்னால் தவறாக நினைப்பார்களோ என்ற ஏக்கத்தால் பேசாமல் இருக்கலாம். குழந்தைகள் சொல்வதை கவனமாககேட்பதே முதல் படியாகும். எங்கள் காலத்தில் என்று ஆரம்பித்து கதை சொல்லாமல் அவனுடைய உணர்வுகளை அறிந்து அதற்கேற்றார்போல அரவணைத்து நடக்க வேண்டும்.

சின்ன வயதில் மனதில் வரும் குழப்பமும், காயமும் பின்னாளில் பலத்த விளைவுகளை ஏற்படுத்தும். சக மாணவனுக்கு உடல் நிலை குறைவு என்றாலும் அளவுக்கு மீறி வருந்துகிற குழந்தைகள் உண்டு. பதின்ம வயதினருடன் வாழ்க்கையை மகிழ்ச்சியாய் கழிப்பதுபற்றி நிறைய கையேடுகள் உண்டு. (How to Enjoy Life with a Preadolescent HELP) என்ற கையேடில் பல  அற்புதமான நடைமுறைக்கு உட்பட்ட கருத்துக்கள் உண்டு. இவை peer pressure போன்றவையை சமாளிக்கும் வழிகள் பற்றியும் சொல்கின்றன. குழந்தைகளை குழந்தைகளாகவே இருக்க விடுங்கள். வாழ்க்கை வாழ்வதற்கே!!

இந்த கையேடுகள் வேண்டும் என்பவர்கள் என்னை தொடர்பு கொண்டால் இலவசமாக அனுப்பிவைக்கிறேன்.

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com - Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |