ஏப்ரல் 28 2005
தராசு
வ..வ..வம்பு
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
மஜுலா சிங்கப்புரா
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
முத்தொள்ளாயிரம்
கட்டுரை
உள்ளங்கையில் உலகம்
கவிதை
திரைவிமர்சனம்
ஆன்மீகக் கதைகள்
துணுக்கு
அறிவிப்பு
 
  முதல் பக்கம்
தொடர்கள்
இலக்கியவாதி  புதிது
- சத்யராஜ்குமார்
ஹர்ஷத் மேத்தா
- சசிகுமார்
- சத்யராஜ்குமார்
கோடிட்ட இடங்கள்
- சித்ரன்
சுய சாசனம்
- பாஸ்டன் பாலாஜி
என்னை எழுதியவர்கள்
- சத்யராஜ்குமார்
களம்
- நாகூர் ரூமி
கங்கை இல்லாத காசி
- பாஸ்டன் பாலாஜி
வார்த்தையல்ல, வாக்கியம்
- என். சொக்கன்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
 
முத்தொள்ளாயிரம் : பாண்டியன், கொள்ளையடித்தானா ?
- என். சொக்கன்
| Printable version |

பாடல் 105

'வேலியே பயிரை மேய்ந்த கதை', என்ற ஒரு அவல நிலையை நம் பழமொழிகளில் கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த நீதிக் கதைதான், இன்றைய முத்தொள்ளாயிரப் பாடலில், காதல் கதையாய் மிளிர்கிறது.

'சப்தமிடுகின்ற அலையைக் கொண்ட, கறுப்பு நிறக் கடல் சூழந்த கொற்கை நகரத்தின் தலைவன், பாண்டியன். அவனுடைய பிரஜைகளாகிய எங்களைக் காப்பாற்றவேண்டிய அவனே, எங்களிடம் கொள்ளையடித்துச் சென்றால், நாங்கள் யாரிடம் சென்று முறையிடுவோம் ?', என்று குற்றம் சாட்டுகிறாள் ஒரு பெண் !

பாண்டியன், கொள்ளையடித்தானா ?  எப்போது ? எங்கே ? யாரை ? எப்படி ?

அதையும் அவளே விபரமாய்ச் சொல்கிறாள், 'குற்றமில்லாத எங்கள் வீதியில், ஒரு ஓரமாய் நான் ஒதுங்கி நின்றேன். அப்போது, அங்கே உலா வந்தான் அரசன் பாண்டியன். நானும் அவனைப் பணிவாய்க் கை கூப்பித் தொழுதேன். அவன் என்னைப் பார்க்காமலே சென்றுவிட்டான். ஆனால், அப்படிச் செல்லும்போது என் மனதையும், நலனையும் பறித்துச் சென்றுவிட்டான் - அவன் சென்ற கணத்திலிருந்து, என் தோள்கள் மெலிய ஆரம்பித்தன, அழகு கரையத்துவங்கியது, மனம் நிலையில்லாமல் தடுமாறுகிறது.'

'ஐயா, உங்களைப் பார்த்தால் நியாயவானாய்த் தெரிகிறீர்கள், நீங்களே ஒரு நீதி சொல்லுங்கள். மக்களைக் காப்பாற்றவேண்டிய அரசனே, இப்படி எங்களிடம் கொள்ளையடித்தால், நாங்கள் என்னதான் செய்வோம் ?'


வழுஇல்எம் வீதியுள் மாறன் வருங்கால்
தொழுதேனை தோள்நலமும் கொண்டான் இமிழ்திரைக்
கார்க்கடல் கொற்கையார் காவலனும் தானேயால்
யார்க்குஇடுகோ பூசல் இனி ?

(வழு - குற்றம்
தொழுதேனை - தொழுத என்னை
இமிழ் - ஆரவாரம் / சப்தம்
திரை - அலை
கார் - கறுப்பு
பூசல் - வழக்கு)பாடல் 106

'இந்த நாட்டுக்குக் காவலன் பாண்டியன்., அப்படியானால், இங்குள்ள எல்லா உயிர்களின் நலனுக்கும் அவன்தானே பொறுப்பு ?', என்று கேட்கிறாள் ஒரு பெண்.

'ஆமாம், ஏன் அப்படிக் கேட்கிறாய் ?', என்று புரியாமல் விசாரிக்கிறாள் அவளுடைய தோழி.

'குறுக்குக் கேள்விகளெல்லாம் வேண்டாம், முதலில், நான் கேட்பதற்கு நீ பதில் சொல்', என்று கறாராய்ப் பேசுகிறாள் அந்தப் பெண், 'பாண்டியனின் ஆளுகைக்கு உட்பட்ட அந்த உயிர்களின் பட்டியலில், நானும் உண்டுதானே ? என்னுடைய உயிருக்கும் அவன்தானே பொறுப்பு ?'

'ஆமாம்', மெல்லமாய்த் தலையாட்டும் தோழியின் முகத்தில் இன்னும் குழப்பம் குறையவில்லை.

'இந்த நாட்டு மக்களெல்லாம், செங்கோல் வழுவாத அரசன் என்று பாண்டியனைப் பாராட்டுகிறார்கள். அது உண்மைதானே ?'

'ஆமாம், அதற்கு என்ன வந்தது இப்போது ?', என்று சிடுசிடுப்புடன் சொன்ன தோழி, 'இன்றைக்கு என்ன ஆயிற்று உனக்கு ? ஏன் இப்படிக் கேள்விகளாய் அடுக்கிக்கொண்டிருக்கிறாய் ?', என்று எரிச்சலாய் விசாரிக்கிறாள்.

'இன்னும் ஒரே ஒரு கேள்வி, அதற்குமட்டும் பதில் சொல்லிவிடு', என்கிறாள் அந்தப் பெண், 'எல்லோருக்கும் நன்மை செய்து, நல்லாட்சி நடத்தும் மன்னன் என்று புகழைப் பெற்றிருக்கும் இந்தப் பாண்டியன், எனக்குமட்டும் தீமை செய்கிறானே, அது ஏன் ?'

'பாண்டியன் உனக்குத் தீமை செய்கிறானா ? என்னடி உளறுகிறாய் ?', பாதி பதட்டமும், மீதி ஆர்வமுமாய்க் கேட்கிறாள் தோழி, 'நீ அவனைக் காதலிக்கிறாய் என்றல்லவா நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன் ?'

'நான் காதலித்து என்னடி புண்ணியம் ?', சலிப்போடு சொல்கிறாள் அவளது தோழி, 'அவன் என்னைத் திரும்பியும் பார்ப்பதில்லை, என் காதலை ஏற்பதுமில்லை, என்னோடு நாலு வார்த்தை நல்லவிதமாய்ப் பேசுவதுமில்லை', வேதனையுடன் பெருமூச்செறிகிறாள் அவள், 'அந்தப் பாண்டியனை நல்ல அரசன் என்று எல்லோரும் பாராட்டுகிறார்கள். ஆனால் அவன், மற்ற மக்களுக்கு நல்லது செய்வதும், என்னை அலட்சியப்படுத்துவதுமாக இருக்கிறான் - இப்படி, தன்னுடைய ஆட்சிக்கு உட்பட்டவர்கள் எல்லோரையும் சமமாக நடத்தாமல், சிலருக்குப் பால் தருவதும், சிலருக்கு வெறும் தண்ணீர் தருவதுமாக பாரபட்சம் காட்டுகிறவன்தான் நல்ல அரசனா ? நீயே சொல் !'


மன்னுயிர் காவல் தனதுஆன அவ்உயிருள்
என்உயிரும் எண்ணப் படுமாயின் என்உயிர்க்கே
சீர்ஒழுகு செங்கோற் செழியற்கே தக்கதோ
நீர்ஒழுகப் பால்ஒழுகா வாறு.

(மன்னுயிர் - ஆன்மா / ஜீவன் / உயிர்
சீர் - சிறப்பு
தக்கதோ - தகுதியானதா ?
ஒழுகுதல் - வழங்குதல்)

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com - Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |