மே 04 06
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
நையாண்டி : காணாமல் போனவர்கள்
- திருமலை கோளுந்து [golundhu1979@yahoo.com]
Bookmark in Del.icio.us | | Printable version | URL |

பெயர்:  தனுஷ்.

நிறம் : மாமனாரை விட கொஞ்சம் சிகப்பு.

படிப்பு: பள்ளிக் கூடம் இவருக்கு ஒரு பொழுது போக்கு. இருந்தாலும் 10 வரை படித்திருக்கிறாராம்.  வீட்டில் இருந்து தபால் மூலம் பி.சி.ஏ. படித்ததிலும் ஏகப்பட்ட அரியர்ஸ் வாங்கி சாதனை செய்திருக்கிறாராம்.

Dhanushபிறந்த ஊர்: தேனி பக்கத்தில் ஒரு கிராமம்

நடித்த படங்கள்: 10 படத்தை கூட தொடவில்லை.

புனைப்பெயர்: தமிழக புருஸ்லீ, சூப்பர் ஸ்டாரின் மருமகன்

பட்டப் பெயர்:  ஒள்ளிப்பாச்சா, மன்மத ராசா. செக்ஸ் ஹீரோ.

சாதனை :  தனது தங்கையை காண தனது வீட்டிற்கு வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஜஸ்வர்யாவிற்கு காதல் அம்பு வீசி திருமணம் செய்து கொண்டது. சில படங்கள் 100 நாட்களை தாண்டி ஓடியது. அண்ணணுக்கு முன்பே திருமணம் செய்து கொண்டது.

பிடித்தவைகள்: குளிக்காமல் இருப்பது. மனைவியோடு ஊர் சுற்றுவது, நடிகர் சிம்புவின் படத்தை திருட்டு வி.சி.டி.யில் பார்ப்பது. வீட்டிற்குள்ளேயே பந்தை குழிக்குள் உருட்டி விளையாடுவது (இதற்கு என்ன பெயர் என்று யாரவது சொல்லுங்கப்பா)

பிடிக்காதது : சிம்புவின் படங்கள் நன்றாக ஓடுவது இவருக்கு பிடிக்காத ஒன்றாம். ஏகப்பட்ட புது முகங்கள் வந்து இவருக்கு ஆப்பு வைப்பது, அதே போல இவரது கடைசி படமான அது ஒரு கனாக்காலம் படம் அது ஒரு கனாக்காலமாகவே போய் விட்டதில், சாருக்கு ஏகப்பட்ட டென்ஷனாம்.

அடையாளங்கள்: அப்பா வாங்கிய கடன்களை ஆபாசமாக நடித்தே அடைத்த மகா புண்ணியவான். இவரையும் ஒரு மனிதராக, நடிகராக மதித்து ஒரு ரசிகர் கூட்டம் தமிழகத்தில் உலாவிக் கொண்டிருக்கிறது.

பிடித்தவார்த்தைகள்: ராமா ராமா, காதல், கெட்டிப் பிடிப்பது, முத்தம் கொடுப்பது.

எதிர்பார்ப்பு :  கர்ப்பமாக இருக்கும் தனது மனைவி ஆண் குழந்iதை பெற்றெடுக்க வேண்டும். தன் உடன்பிறப்பு செல்வராகவனின் புதுப்பேட்டையை பயங்கரமாக எதிர்பார்க்கிறாராம். புதுப்பேட்டை வந்தால், தான் இழந்த பழைய பேட்டைகளை எல்லாம் கை பற்றி விடுவேன் என்று தன்னிடம் கேள்வி கேட்டு வரும் பத்திரிக்கையாளர்களிடம் சவால் விடுகிறாராம்.

எதிரிகள்: முன்பு தயாரிப்பாளர்கள் பலர் இருந்தனர். இப்பொழுது யாருமே கிடையாதாம். 

வேண்டுகோள்: மேற்சொன்ன அடையாளங்களோடு இருக்கும் ஆத்மாவை யாரும் பார்த்தாலோ, அல்லது அவரைப்பற்றி கேள்விப்பட்டாலோ தெரிவிக்க வேண்டிய முகவரி.

உடம்பை தேற்றுவோர் பட நிறுவனம்,
000, ஆடைக் குறைப்பு குடியிருப்பு,
மார்க்கெட் இழந்தவர்கள் காலனித் தெரு,
மன்மதராஜாக்கள் புரம்.
சுள்ளான் மாவட்டம் - 111111

|
oooOooo
திருமலை கோளுந்து அவர்களின் இதர படைப்புகள்.   நையாண்டி பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |