Tamiloviam
மே 10 2007
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
அண்ணாச்சி உலகம் என்னாச்சி ? : மாறன் பதவியப் பறிச்சது நியாயமா அண்ணாச்சி ?
- [feedback@tamiloviam.com]
| | Printable version | URL |

அண்ணாச்சி வீட்டுத் திண்ணையில் அம்ர்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருந்தார். மணி சைக்கிளில் வந்து வீட்டு முன்னால் நின்றான்.

"அண்ணாச்சி. என்ன நாயர் கட பக்கம் ஆளையேக் காணோம்?"

"மணி வா... வா. கொஞ்சம் ஒடம்பு சரியில்லடே. இப்ப பரவாயில்ல. போவோமா?"

அண்ணாச்சி சட்டை போட்டுக்கொண்டு மணியோடு நாயர் கடை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

"என்ன அமைதியா வர்றீங்க?"

"எதச் சொல்ல."

"சூடா ஏதாச்சும்.."

"இந்த வாரம் சூட்டுக்கா பஞ்சம். வெயில் இந்தப் போடு போடுதே."

"அதையா கேட்டேன்."

"புரியுதுப்பா. குடும்பச் சண்டையப் பத்திதானே."

"ஆமா. என்ன நடக்குது?"

"பிரச்சன பழசாயிருக்குமோண்ணு தோணுது."

"அப்டீன்னா?"

"இப்ப திடீர்னு வந்ததில்ல இது."

"ம்."

"சன் டி.வி பங்கெல்லாம் கலைஞர் குடும்பம் வித்ததுலேந்தே இப்ப சந்தேகமாப் பாக்க ஆரம்பிக்கிறாங்க."

"ஓ ஆமால்ல."

"ஆமா. கருத்துக் கணிப்புல நம்பிக்கையில்லண்ணு கலைஞர் சொல்லியிருக்காரு. ஆனாலும் இத தொடர்ந்திருக்காங்க. பிரச்சன அங்கதான் முத்தியிருக்கும்."

"அப்ப உண்மையிலேயே இதெல்லாம் போடவேண்டான்னு கலைஞர் சொல்லியிருக்காரா?"

"அப்படித்தான் அவர் சொல்லியிருக்காரு. குறிப்பா தமிழகத்தை சார்ந்த சிறந்த மத்திய அமைச்சர் யாருண்னு ஒரு சர்வே வந்துச்சுல்ல. அதுல அன்புமணி குறைவா மதிப்பு வாங்குனது பா.ம.கவுக்கு பாதகமாயிருந்திச்சி. அப்பவே கலைஞருக்கு சந்தேகம் வந்துடுச்சு."

"அப்ப எல்லாத்துக்கும் மூல காரணம் கருத்துக் கணிப்புத்தாண்றீங்க."

"இப்ப நடக்கிறதுக்கெல்லாம் அதுதான் காரணம்."

"நான் என்னவோ ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் பிரச்சனைண்ணு..."

"அதெல்லாம் இல்ல. சொல்லப்போனா இப்ப நடந்திருக்கிற விஷயமெல்லாம் ரெண்டுபேரையும் இன்னும் நெருக்கமாக்கிருக்கும்ணுதான் சொல்லணும்."

"மாறன் பதவியப் பறிச்சது நியாயமா அண்ணாச்சி ?"

"இதுதான் சம்பவங்களிலேயே பெரிய மோசமான விளைவுன்னு சொல்வேன்."

"எப்படி? மாறன் திறமசாலிண்றதாலையா?"

DayanidhiMaran Press meet"அதுவும் இருக்குது. அவர்காலத்துல சிறப்பான முறையில அவருடைய துறை வளந்துச்சு. இத யாராலேயும் மறுக்க முடியாது. டாட்டாவ மிரட்டுன சர்ச்சைய தவிர வேற எதுவும் பெருசா இல்ல. தமிழக சர்வே இல்லாம இந்திய லெவல் சர்வேக்கள்லயும் மாறன சிறப்பா தேர்ந்தெடுத்திருக்கிறாங்க. ஆனா தயாநிதி மாறனுக்கும் சன் டி.விக்கும் தொடர்பிருக்குன்னா கலைஞருக்கும் சன் டிவிக்கும் தொடர்பிருந்துச்சுன்னு அர்த்தமில்லையா?"

"ஆமா."

"ஆனா துவக்கத்திலேந்தே இத மறுத்தவங்க தி.மு.கவும் சன் நிர்வாகமும்."

"புரியுது."

"இப்ப சன் டி.வி/தினகரன் கட்சித் தலைவர் பேச்சக் கேட்கலைன்னதும் தயாநிதி மாறன கட்சிலேர்ந்து விலக்குறது என்ன லாஜிக்."

"அப்ப சுத்த அரசியலுங்குறீங்க."

"இது கூடவா புரியல. இத ஏன் சொன்னேண்ணா கலைஞர் தி.மு.க ஒரு ஜனநாயகக் கட்சின்னு சொல்லியிருக்காரு ஆனா தயாநிதி மாறன பதவி விலகப் போட்ட கூட்டத்துக்கு ஏற்கனவே அச்சடிக்கப்பட்ட உரைய எடுத்துச்சு போயிருக்காரு."

"அப்ப கட்சிக் கூட்டமெல்லாம் கண்துடைப்பா?"

"இதெல்லாம் அரசியல்ல சகஜம்."

"சி.பி.ஐ விசாரணையெல்லாம் போட்டுருக்காங்களே அண்ணாச்சி?"

"அழகிரி, தினகரன் தாக்குதல்ல நேரடியா கலந்துக்கலண்றது செய்தியிலேந்தே உறுதியாயிடுச்சு. தமிழகப் போலிஸ் தமிழக அரசின் கீழ் இயங்குறதால அதால சரியா விசாரிக்க இயலாது போகலாம் என கலைஞர் சொல்றது அவர்மீதே அவருக்கு நம்பிக்கையில்லை இல்லைன்னா மக்களுக்கு அவர் மேல நம்பிக்கையில்லை என்கிறமாதிரி ஆயுடுது."

"ஆமா நல்ல பாயிண்ட்."

"இப்ப சி.பி.ஐ யார் கையில இருக்குது? மத்திய அரசில் சிறப்பா பணிபுரிஞ்ச ஒரு அமைச்சர தோழ்துண்டு மாதிரி மாற்றமுடிகிற கட்சியால..."

"புரியுது. அப்ப எப்டி அழகிரி இதுல ஈடுபட்டிருக்காராண்ணு தெரிஞ்சுக்கிறது?"

"உனக்கே சந்தேகமா? இப்ப மதுரை திமுக அழகிரியோட கண்ற்றோல்லதான் இயங்குது. இது தெரிஞ்சா போதுமே."

"ஆமா. கருத்துக் கணிப்பு பத்தி என்ன நினைக்கீங்க?"

"கருத்துக்கணிப்புண்றது நல்ல விஷயந்தான் ஆனா அத பரவலாச் செய்யும்போதுதான் அதனுடைய நம்பகத் தன்மை கூடுது."

"ஆறு கோடித் தமிழருக்கும் 5000பேர்கிட்ட கேட்டா போதுமான்னு கேக்குறீங்க?"

"எத்தனபேர்கிட்ட கருத்து கணிக்கப்பட்டிருக்குன்னு விபரமெல்லாம் தெரியணும். இந்த கருத்துக் கணிப்புடைய நம்பகத் தன்மை இவ்வளவுண்ணு சொல்லமுடியும் அதையெல்லாம் சொல்லணும். அப்ப இத நம்பலாம்."

"அதெப்டிண்ணே சொல்ல முடியும்?"

"ஏ.சி நீல்சன் மாதிரி கம்பனியெல்லாம் இந்த விவகாரத்துல பழந்தின்னு கொட்ட போட்டிருக்காங்க. அவங்களால துல்லியமா இந்தக் கணக்க சொல்லிட முடியும். ஆங்கிலத்துல Margin of Errorனு சொல்லுவாங்க. அதாவது இந்தக் கணக்கெடுப்பு அல்லது கருத்துக்கணிப்பின் முடிவுகள் தவறாயிருக்க இத்தனை சதவிகித வாய்ப்பிருக்குன்னு சொல்லிடலாம்."

"ஓ."

"ஆமா. அமெரிக்காவுல கருத்துக் கணிப்ப வச்சு தொடர்ந்து அரசியல் நடக்குது."

"அங்கேயுமா?"

"ஆமா. ஆனா அங்க இத ரெம்ப சீரியசா செய்யுறாங்க. தொடர்ந்து அமெரிக்க அதிபருக்கு எத்தன சதவீதம் மக்கள் ஆதரவு தர்றாங்கன்னு துல்லியமா சொல்றாங்க."

"ஓகோ."

"ஆனா அண்ணன் புஷ் அதையும் நம்பமாட்டேன்னுட்டார்."

"அப்ப கருத்துக் கணிப்பு நமக்கு சாதகமா வந்தா நம்பலாம். இல்லேண்ணா நம்பக்கூடாதா."

"ஆமாப்பா. புரிஞ்சுகிட்டியே."

"இப்ப சன் டி.வியோட எதிர்காலம் எப்டி அண்ணாச்சி."

"இப்போதைக்கு இத கணிக்க முடியல. ஆனா கட்சி சார்பு போயிடுச்சுன்னா சன் டி.வி தரம் அதிகரிக்கலாம்னு நினைக்கிறேன். இன்னொண்ணு சன் டி.வி ஆபிச சீக்கிரமே அறிவாலயத்துலேந்து தூக்கினாலும் தூக்கிடுவாங்க."

"கலவரம் பண்ணுனவங்கள விட்டுட்டு மத்தவங்களப் போயி..."

"இதுக்கு இன்னொரு காரணம் மாறன் குடும்பத்துக்கு கட்சியோட சப்போர்ட் இருந்ததில்ல. கலைஞரோட சப்போர்ட்தான் இருந்துச்சு. கட்சியில ஆதரவில்லாதவங்க கவனமா இருக்கணும்ப்பா. அதே சமயம் அழகிரிய ஒரு முன்மாதிரி அரசியல்வாதியா கட்சிக்காரங்க பாப்பாங்க. இன்னைக்கு அடிதடின்னு எறங்குறவந்தான் ஹீரோ."

"சரியா சொன்னீங்க அண்ணாச்சி."

"மொத்தத்துல தமிழகத்துக்கு நல்ல பேரும், பிசினசும், இந்தியாவுக்கே நல்லதுமா செஞ்சுட்டிருந்த ஒரு மந்திரிய இழந்துட்டோம்."

"ஆமா. இன்னொரு பெரிய விஷயத்த ..."

"சொல்றேன். மாயாவதிதானே. எதிர்பார்ப்பையெல்லாம் தகர்த்துட்டு அந்தம்மா தனிப் பெரும்பான்மையா பதவிக்கு வந்திடுச்சு. அவங்களுக்கு உயர்சாதி ஓட்டுக்கள் அதிகமாயிருந்துச்சுன்னு சொல்லிக்கிறாங்க."

"ஓகோ."

"ஆமா. அவங்களோட மந்திரி சபையில உயர்சாதி மந்திரிங்கள் முன்ன இல்லாத அளவுக்கு இருக்காங்க. இப்படி இரண்டு தரப்புக்கும் பாலமா மாயாவதி வந்திருக்கிறது இன்னும் சந்தோஷமான விஷயம்."

"இப்ப மூணாவது அணி அமைக்கிறவங்க பார்வையெல்லாம் மாயவதி மேல விழுந்திருக்கும்."

"இல்லையே. எலக்சனுக்கு முன்னால முலயாமுக்கில்ல வெளி ஆள் சப்போர்ட் இருந்துச்சு."

"ஆமா."

Mayavathi"ஆனா மாயாவதிக்கு டெல்லி கனவுகள் ஆரம்பிச்சிருக்கும். இந்தியாவுலேயே பெரிய ஸ்டேட். பல வருசத்துக்கப்புறம் தனிப் பெரும்பான்மை ஆட்சி. இதெல்லாம் கணக்கு போட்டா..."

"ஆமா ஆமா. அப்புறம் பிஜெபி பிரச்சாரத்துல ஏதோ சி.டி வெவகாரம்."

ஆமா உ.பி தேர்தல் பிரச்சாரத்துல பஜக ஒரு வெவகாரமான சிடி ஒண்ண வெளியிட்டுடுச்சு. அதுல கோத்ரா சம்பவத்த முன்வச்சு முஸ்லிம்கள மோசமா காட்டியிருந்திருக்காங்க. அத தேர்தல் கமிஷன் பார்த்துட்டு கட்சியின் அங்கீகாரத்த ஏன் நீக்கக்கூடாதுன்னு கேட்டாங்க. இப்ப பஜக சிடி கட்சியின் அடிமட்டத் தலைவர்கள் செஞ்ச தப்பு அதுக்கும் கட்சிக்கும் சம்பந்தமில்ல. அதை கண்டிக்கிறோம்னு ஸ்டேட்மண்ட் விட்டு தப்பிச்சுட்டாங்க."

"ம். என்னவெல்லாமோ நடக்குது. கடைசியா ஒரு கேள்வி நீங்க சொல்லுங்கண்ணே கலைஞருக்கு யாருண்ணே அரசியல் வாரிசு."

"அடப் பாவி என்னை ஏன் மணி வம்புல மாட்டப் பாக்குற." சமாளித்தார் அண்ணாச்சி.

| |
oooOooo
                         
 
அவர்களின் இதர படைப்புகள்.   அண்ணாச்சி உலகம் என்னாச்சி ? பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2007 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |