மே 12 2005
தராசு
வ..வ..வம்பு
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
உள்ளங்கையில் உலகம்
முத்தொள்ளாயிரம்
டெலிவுட்
கவிதை
மஜுலா சிங்கப்புரா
துணுக்கு
கடி கடி கடி
நையாண்டி
நெட்டன் பக்கம்
தொடர்கள்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா? : குழந்தைகள் முன்னிலையில் புகைபிடிப்பதை குறைப்பது எப்படி
- பத்மா அர்விந்த்
| Printable version |

ஒருவர் புகை பிடிக்கும் போது அதிலிருந்தும், புகைப்பவரின் சுவாச காற்றிலும் இருந்த்து வெளிப்படும் புகை second hand smoke என்று அழைக்க படுகிறது. இதன் விளைவால் வருடத்திற்கு 150,000 குழந்தைகள் முற்றிய நுரையீரல் நோயால் பாதிக்கப் படுவதோடு ஆண்டொன்றுக்கு 3000 குழந்தைகள்  இறக்கிறார்கள். உலகளைவில் இது இன்னமும் அதிர்ச்சியூட்டும் எண்களைத்தரலாம்.

புகைபிடிப்பவரின் அருகில் இருப்பொருக்கு கண் எரிச்சலும், இருமலும் ஏற்படுகிறது. இவர்களியும் மருத்துவ உலகு  passive smokers என்றே அழைக்கிறது.

சிகரெட் புகையில் 4000 விதமான புற்று நோய், மற்றும் வெகு துன்பம் தரக் கூடிய உடல் நலனுக்கு பாதகம்  விளைவிக்கை கூடிய வேதி பொருட்கள் கலந்திருக்கின்றன.

அடிக்கடி காது வலி, ஆஸ்த்மா எனப்படும் மூச்சிழுப்பு, பொதுவான அலர்ஜி, இருமல், நுரையீரல் சம்பந்தமான நோய்கள் ஏற்படுகிறது.

கருவுற்ற பெண்மணியின் அருகில் புகை பிடிப்பதால், வருடத்திற்கு அமெரிக்காவில் 18,600 குழந்தைகள் குறைபாட்டுடன் பிறக்கின்றன. 300000 குழந்தைகளுக்கு இருமலும்,  bronchitis உம் வருகின்றது. 1.6 மில்லியன் குழந்தைகள் காதில் கிருமிகள் வளர்வதால், காது வலியும் சீழும் ஏற்படிகிறது. வெளியே பால்கனியில் புகை பிடித்தாலும், கார் கராஜில் பிடித்தாலும் உள்ளே வந்த 5 மணித்துளிகளில் புகைப்பவரின் சுவாசத்திலிருந்து இந்த வேதி பொருட்கள் வெளிப்படுகிண்றன. என்னுடைய மகன் சென்று வந்த காப்பகத்தில் ஒரு பெண் வெளியே சென்று புகைத்து விட்டு வரும் பழக்கம் உடையவர். அவர் வந்து முத்தமிடுகின்ற நாட்களில் என் மகனின் கன்னங்களில் சிவந்திருக்கும். இதை கவனித்து வந்து காப்பகத்தில் புகார் கொடுத்து பிறகு புகைத்த பின் அவர் குழந்தைகளுடன் இருப்பதை நிறுத்தினார்கள். இப்போதெல்லாம் இங்கு குழந்தைகள் காப்பகத்தில் புகைப்பது குற்றம். சட்டப்படி அது தடை செய்யப்பட்டு விட்டது. இதை விட காரில் நெடுந்தூரம் பயணிப்பவர்கள் புகைக்கும் போது பின் இருக்கையில் உள்ள குழந்தை அந்த காற்றை சுவாசிக்க நேருகிறது.

இதை எப்படி குறைப்பது என்பதை சென்ற வாரம் காட்டிய 6 நிலைகளில் கவனிப்போம்.

1. மனதில் தோன்றும் எண்ணம் :  புகை பிடிப்பது தவிர எத்தனையோ பழக்கங்கள் இருந்தாலும் இது ஒரு stigma ஆகிவிட்டது. எந்த நோய் வந்தாலும் இதுவே கரணம் என்று சொல்வது ஊடகங்களுக்கும் பழகிப்போய்விட்டது. நான் வீட்டிற்கு வெளியேதான் புகை படிக்கிறேன். குழந்தைக்கு உடம்பிற்கு வந்ததற்கு வேறுகாரணம் இருக்ககூடும்.

2. நோயின் தீவிரம் குறித்து எண்ணங்கள் :  ஒருவேளை குழந்தையை காரில் அழைத்து செல்லும் போது புகைபிடிப்பது காரணமாக இருக்கலாம். நம்மால் குழந்தைக்கு காதுவலி வந்து ஏன் அவஸ்தைபடவேண்டும்? ஒரு வேளை அவர்கள் சொல்வது உண்மையாக இருக்கலாம். மருத்துவரிடம் பேச வேண்டும்

3. நன்மைகள் :  புகைப்பதை நிறுத்திவிட்டால் நமக்குமே உடலுக்கு நல்லது அதிகமாக களைப்பாகாமல் இருக்கும். இதனால் தினம் செலவாகும் $5ம் மிச்சம். குழந்தைக்காகவாவது புகைப்பதை நிறுத்திவிடவேண்டும்.

4. செயல்படுத்த தோன்றும் தடங்கல்கள் :  ஒரு சிகரெட்ட்டுக்காக வீடிற்கு வெளியே செல்ல வேண்டும். குளிர்காலத்தில் அத்தனை உடைகளையும் பொட்டுகொண்டு வெளியே போய் ஒரு சிகரெட் பிடிப்பது நடக்காத காரியம். வெளியூருக்கு போகும் போது போக்குவரத்து நெரிசலில் மாட்டிகொண்டு தவிக்கும் போது ஒரு சிகரெட் இருந்தால் பரவாயில்லை. இந்த குழந்தைக்காக எப்படி வெளியே புகை பிடிக்க முடியும். நாம் நிறுத்தினாலும் வெளியிடத்தில் மற்றவர்கள் புகைக்காமலா போய்விடுவார்கள். இந்த ஒரு சிகரெட்டால் என்ன வந்துவிடப்போகிறது போன்ற நினைப்புகளும் சமாதானங்களும் தோன்றும்.

5. செயல்படுத்த தூண்டுபவை :  புகைபடிப்பதை முழுதுமாக நிறுத்தாவிட்டால் என்ன. குறைந்தபட்சம் குழந்தைக்காக காரில், வீட்டினுள் நிறுத்தினால் குழந்தை நலமாவது மிஞ்சும். பாவம் ஒவ்வொருமுறை காது வலியும், இருமலும் வரும் போது என்னமாய் கஷ்டப்படுகிறது. இனிமேல் அடைந்த இடத்துள் புகைபிடிக்க மாட்டேன். இதுபோல செய்வது பிறகு நாளாவட்டத்தில் புகைப்பதையே முழுதுமாக நிறுத்த வழிவகுக்கும்.

6. இதை தடுக்க காரில், வீட்டில் புகைக்காதீர்கள். புகைப்பதை நிறுத்துவது மிகவும் நல்லது. முடியாதவர்கள் குறைந்த அளவில் குழந்தைகளின் நலனை கருத்தில் கொள்ளுவது சிறந்தது. புகைப்பவர் அருகில் குழந்தைகளை இருக்க விடாதீர்கள்.


குழந்தைகளின் உடல் நலன் அவர்களின் வளர்ச்சிக்கு அடிப்படை. ஏனெனில்

உடம்பார் அழியின் உயிரார் அழிவார்.
திறம்பட மெய்ப்பொருள் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்ப்போம் உயிர் வளர்ப்போமே

புகைப்படம்: Environmental protection agency Brochureரிலிருந்து எடுக்கப்பட்டது.

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com - Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |