மே 12 2005
தராசு
வ..வ..வம்பு
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
உள்ளங்கையில் உலகம்
முத்தொள்ளாயிரம்
டெலிவுட்
கவிதை
மஜுலா சிங்கப்புரா
துணுக்கு
கடி கடி கடி
நையாண்டி
நெட்டன் பக்கம்
தொடர்கள்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
டெலிவுட் : லகலகலகலகலக டிவி..
- சில்லுண்டி
| Printable version |

வெச்சா குடுமி; சிரைச்சா மொட்டைங்கிற மாதிரி போட்டா சீரியல் இல்லாட்டி சினிமாங்கிற மாதிரி ஆயிடுச்சே நம்மூரு டி.விங்கன்னு ஒரு புலம்பலை எடுத்துவுட்டு ஸீன் போடலாம்னுதான் நினைச்சேன். ஓவர் ஸீன் உடம்புக்கு ஆவாதாம். அக்னிநட்சத்திர வெயிலு தாங்காம ஆபிசுக்கு லீவு போட்டுட்டு ரிமோட்டை குடைஞ்சப்பதான், அட நம்மூர் டி.விங்க அப்படியொன்னும் மோசமில்லைப்பான்னு தோணுச்சு. ஹி...ஹி! அதான் டி.விதான் கதின்னு முடிவு பண்ணியாச்சே.. அப்புறம் என்னாதுக்கு ஒரு சப்பைக்கட்டுன்னு நீங்க நினைக்கிறதுக்குள்ள கபால்னு மேட்டருக்குள்ள போய்டலாம்!

சுடிதார் மகாலட்சுமின்னு யாரோ பாராட்டின பிகரு நம்ம கெளசல்யா. அந்த சிரிச்ச முகம் சிணுங்க ஆரம்பிச்சது புடிக்காமதான் சேனலை மாத்தி வுட்டேன்.

ராஜ் டிவியில சிக்கியது முன்னாள் காமேஸ்வரி; இந்நாள் இம்சேஸ்வரி. ஒரு காலத்துல காமெடியில களை கட்டின ஆளு. இப்போ என்ன பண்ணிட்டு இருக்கான்னு கேட்டுறாதீங்கோ... பேசிட்ட்ட்ட்ட்ட்ட்டே இருக்குறா... என்ன பேசறான்னுதான் புரியலை. ம்...மைக்கேல் மதன மாயா பஜார் காலமெல்லாம் போயே போயிந்தி. ஊர்வசி கேட்டது அதே ஊசிப்போன கேள்விதான். 'துணுக்கு தோரணம்னா இன்னா?' 'காமெடி, துணுக்கு தோரணம்னா, அழுகை சோக பந்தலா'ன்னு பதிலுக்கு வளவளன்னு ஒரு டெஸ்ட் மேட்சை ஆரம்பிச்சது கிரேசி மோகன். ஒரு உறையில ரெண்டு வாலு இருக்கப்பிடாது; ராத்திரி பத்து மணிக்கு மேல இப்படியெல்லாம் படுத்தக்கூடாது!

காமிராவை இடுப்புல கட்டிக்கிட்டு நடந்து போயிட்டே இருக்காங்க. காடு, மலை, பச்சைப் பசேல்னு எல்லாத்தையும் பார்த்துக்கிட்டே நாமளும் கூடவே நடக்கிறது மாதிரி ஒரு ·பீலிங். வாழ்க்கையில நாம போகமுடியாத இடத்துக்கெல்லாம் நம்மளை அழைச்சுட்டு போறது Travel Living. சீரியல், சினிமாவெல்லாம் பார்த்து அலுத்துப்போய் வூட்ல எல்லோரும் அசந்து கிடக்கிற நேரத்துல ரிமோட்டை கடத்திட்டா நல்ல டைம் பாஸ்! இதெல்லாம் நம்மூர் டிவியில எப்ப வரும்னுதானே கேட்குறீங்க? இப்பத்தானே நம்ம மெட்டி ஒலி டீம் சிங்கப்பூர் போயிருக்குது. எல்லோரும் அழுது முடிஞ்சப்புறம் ஆறாவது எபிசோட்டுல சிங்கப்பூரை சுத்திச் சுத்தி காட்டப்போறாங்களாம்!

இடைத்தேர்தல் வந்தாலும் வந்துச்சு.. சவுண்டு பார்ட்டிங்க தொல்லை தாங்க முடியலை. அதிமுக சார்பா எஸ்.எஸ்.சந்திரன், ராதாரவின்னு ஒரு பக்கமும் திமுக சார்பா சரத்குமார், நெப்போலியனும் மேடையில முழங்குறாங்களாம். இந்த முறை, அதிமுக மேடையில் இன்னொரு புதுமுகம். ஜெய....சே விஜய டி. ராஜேந்தர்! ஜெயா டிவியின் விவாத அரங்கு கிளிப்பிங்ஸில் பார்த்திபன் ஸ்டைலில் 'போட்டு வாங்கும்' சுதாங்கனும், பிரச்சார பீரங்கி டி.ராஜேந்தரும். 'அவங்க ஏழு ஸார்.. அம்மா ஒரு ஆளு ஸார்'னு அடுக்கு மொழியில போட்டுத்தாக்க, 'அய்யோ பாவம்'னு நம்மளை சொல்ல வைச்சது சுதாங்கன். நம்பவே முடியாத விஷயம்தான். ஆனால் நம்பித்தான் ஆகணும். இந்த முறை விவாதத்திற்கு இந்திய குடியரசுக் கட்சியின் தமிழரசனும் ·பார்வர்ட் பிளாக்கின் சந்தானமும் வரவில்லை! லெட்டர் பேட் கட்சியை வைச்சுகிட்டு காலத்தை ஓட்டிக்கொண்டிருந்தாதான் 'விவாத' மேடைக்கு எண்ட்ரி பாஸ் கிடைக்குமோ என்னவோ?!

'ஹலோ.. டி.வி சவுண்டை கொஞ்சம் கம்மி பண்ணி வெச்சிட்டீங்களா', 'யாருக்கு டெடிகேட் பண்றீங்க'ன்னு வரும் விசாரிப்புகளுக்கு இடையே கொஞ்சமே கொஞ்சமாய் சொந்தக்கதைகள். லைன் கிடைத்தவுடன் பேச, நிறையவே யோசிக்கிறார்கள். பெப்சி உமாவை பார்த்தால் மட்டும்தான் எட்டு வருஷமாய் டிரை பண்ணுவதாய் ஏகத்துக்கும் வழிகிறார்கள். ரொம்ப அபூர்வமாய் எப்போதாவது புன்னகைக்கவும் காரணமாகிவிடுகிறார்கள். சாம்பிளுக்கு ஒன்ணு.

'கல்யாணம் ஆயிடுச்சா உங்களுக்கு?'

'ஒரு நிமிஷம்'

'அட, அதுக்குள்ளே கல்யாணம் பண்ணிட்டு வந்துடுறேன்கிறீங்களா?'

நம்மாளுங்க சொல்ற பதிலுக்கு காம்பியர் பார்ட்டிங்க குடுக்குற ரியாக்ஷன்.... ஹைய்யோடா! சன் மியூஸிக்கிற்கு டயல் பண்ணுகிறவர்கள் ரெண்டே ரெண்டு ரகம்தான்.

1. வேலை வெட்டி இல்லாதவர்கள்.

2. வெட்டி வேலை உள்ளவர்கள்.

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com - Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |