Tamiloviam
மே 17 2007
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
அண்ணாச்சி உலகம் என்னாச்சி ? : சிவாஜி ரிலீஸ்
- [feedback@tamiloviam.com]
| | Printable version | URL |

மணியின் செல்போன் சிணுங்கியது, போன் வாங்கிய புதிதில் எடுத்த அண்ணாச்சியின் புகைப்படத்தோடு.

"அண்ணாச்சி. சொல்லுங்க." மணி கேட்டான்.

"மணி எப்டி இருக்க. ஆளே காணலியே."

"அப்டியெல்லாம் இல்லண்ணாச்சி. வீட்ல கொஞ்சம் வேல."

"சரி அப்பம் வேலையப் பாரு."

"இல்ல இப்ப சும்மாத்தான் இருக்கேன் சொல்லுங்க."

"சும்மாத்தான் துக்கம் விசாரிக்கலாம்ணு.."

"என்ன துக்கம் இப்ப?"

sivaji"இல்ல.. படத்த ரிலீஸ் பண்ணமாட்டேங்குறாங்களே."

"குசும்புதானே." மணி சிரித்தான்.

"ஜூன் 15 ஆவது வருமா?"

"இப்ப அப்டிதான் செய்தி. இன்னும் இழுபறிதான். அதுக்குள்ளார தியேட்டர்காரங்ககூட ஒப்பந்தம் ஆச்சுண்ணா வந்துரும். மொத்தத்துல எரியிற வீட்ல புடுங்கறதுக்கு ஆளு நெறைய இருக்குது."

"கோடிக்கணக்குல செலவு செஞ்சு படம் எடுக்கிறது எரியிற வீடா? கொள்ளையில பங்கு கேக்காங்கண்ணு வேண்ணா சொல்லலாம்."

"ஆமா எங்காளு படம்ணா ஒங்களுக்கு இருப்பு கொள்ளாதே. வேற என்ன சேதி சொல்லுங்க."

"வேற என்ன சேதி. நம்ம ராதிகா செல்விக்கு மத்திய மந்திரி பதவி கெடச்சிருக்கு."

"திருச்செந்தூர் ராதிகா செல்விக்கா?"

"ஆமா. நாடார் சங்கம் கலைஞரப் புகழ்ந்தாச்சு."

"ஓகோ இதுவேறயா?"

"ஆமா. கலைஞர் சரத்குமாருக்கு செக் வச்சுட்டார்னு பேச்சு."

"அந்த அளவுக்கு சரத்துக்கு செல்வாக்கா அண்ணாச்சி?"

"விஜயகாந்த சும்மா விட்டுட்டு கொஞ்சம் முழிச்சாங்கல்ல. அந்த அனுபவமா இருக்கலாம். இப்பவே செக் வச்சாrathika selvi நல்லாயிருக்குமே."

"அதுவும் சரிதான்."

"விஜயகாந்த் மண்டபத்த இடிக்க ஆரம்பிச்சாச்சு. பெருசா செய்தியில்லாம கம்முன்னு வேலைய துவங்கியிருக்காங்க."

"சம்பவம் ஒண்ணுமே இல்லையா?"

"ஒண்ணுமே இல்லாமலா? கொஞ்சம் கட்சி ஆட்கள் போயிருக்கானுங்க. கலாட்டா ஆரம்பிக்கிறதுக்கு முன்னாலயே விஜயகாந்த் மச்சான் போயி எல்லாரையும் சமாதானப்படுத்தி அனுப்பிருக்காரு."

"ஓகோ. அவருதான் இப்ப கட்சியில எல்லாமே என்னா?."

"கோடிக் கணக்குல முதலீடு போட்டு பிசினஸ் தொடங்குனா அதுல வந்தவன் போனவனையா சேத்துப்ப?"

"சரிதான்."

"அடுத்தது ஜெயலலிதாவோட இன்னொரு பில்டிங்குக்கும் பிரச்சன கிளம்பியிருக்கு. கொடநாடு எஸ்டேட்ல ஜெ கட்டின பில்டிங்ல அனுமதி வாங்காத கட்டுமானம் இருக்குதாம். சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்னு தமிழ்நாடு அரசு சொல்லியிருக்கு."

"ம் இடிச்சுத் தள்ளிட்டாலும். அப்புறம் அண்ணாச்சி திமுக விவகாரம் எந்த நிலைல இருக்குது"

"கொஞ்சம் சூடு தணிஞ்சிருந்தாலும் இன்னும் அனல் பறக்குதுப்பா. ராஜ் டிவி பங்கு வெலையெல்லாம் கண்ணடபடி எகிறிடுச்சாம். சன் டிவி பங்கு வெல கொறஞ்சு போச்சாம். சீக்கிரமே ராஜ் டிவிய வச்சு கலைஞர் டிவின்னு ஒண்ணு வரப்போகுது. சன்ல இருக்கிற பாதிக்கு மிச்சம் சீரியல் அங்க போயிடுமாம். ஏற்கனவே சன் டிவி ஸ்பான்சர் அங்க வேல பாக்கிற ஆட்கள்ணு பலரையும் இந்த பக்கம் இழுக்கிறது தொடங்கியாச்சு. சன் டிவி ஆபீச காலி செய்ய அதிகாரபூர்வமா சொல்லலியாம். ஆனாலும் அங்க கட்சிக் காரங்க கூடறதால டென்சனாத்தான் இருக்கும். சீக்கிரம் அவங்க காலி செஞ்சிட்டு கலைஞர் டிவி அங்க போயிரும். மாறன் சகோதரர்களுக்கு போறாத காலம். ஆனா கட்சி சார்பத் தவிர்த்துட்டு ஒழுங்கா செயல்பட அவங்களுக்கு ஒரு வாய்ப்புண்ணே சொல்வேன்."

"கலைஞர் டி.வியா. ஜெ டிவி மாதிரியா?"

"ஆமா. கலைஞருக்குப் பிறகு யாருங்கிறதுபோல கலைஞருக்குப் பிறகு இந்த டிவி என்ன பாடுபடப்போகுதோ தெரியல. அடுத்து வரப்போற மாநிலங்களவைத் தேர்தலுக்கு அழகிரியா கனிமொழியாண்ணும் ஒரு கேள்வி கெளம்பியிருக்குது."

"அப்ப கனிமொழி உள்ள வந்துடுவாங்களா."

"அதிக வாய்ப்பு அவங்களுக்குத்தான்."

"அண்ணாச்சி பஞ்சாப்ல எதுக்கு பந்த்?"

"அங்க ஒரு சின்ன மதப் பிரச்சன. சீக்கிய மதகுரு ஒருத்தரப் போல இன்னொரு மதத்துக்காரரு வேஷம் போட்டு வந்ததுல பிரச்சன உருவாகி பெருசாயிடுச்சு. இப்ப அவர மன்னிப்புக் கேக்கச் சொல்லி எதிர்ப்பு வலுத்திருக்குது."

"மதவாதிங்க மனுசன ரெண்டாக்குறதுலேயே குறியாயிருக்கானுங்க."

"என்ன மணி தத்துவமெல்லாம் பேசுற."

"சும்மா அண்ணாச்சி. இதெல்லாம் தத்துவமா?"

"இன்னொரு விஷயம் வட நாட்ல சூடு பிடிச்சது. இப்ப அடங்கிடுச்சு."

"என்னது?"

"மாயாவதி அரசாங்கத்துல பதிவி ஏற்பு விழாவுல தலீத் அமைச்சர்களெல்லாம் அவங்க கால்ல விழுந்து வணங்கியிருக்காங்க. ஆனா பிராமண அமைச்சர்கள் சும்மா ஒப்புக்கு சப்பா வணக்கம் சொல்லிட்டு போயிருக்காங்க."

"யாருன்னா என்ன கால்ல விழுறது தப்புண்ணே."

"நானும் அப்டித்தான் நெனச்சேன் ஆனா வட இந்தியாவுல மரியாதைக்கு கால்ல விழுறது சகஜம்."

"ஆனா அதுவும் சரியில்லண்ணே. வெளிநாட்டுக்காரன் பாருங்க கையக் குடுத்து சமமா மதிக்குறானே."

"வெளிநாட்டப் இதுல இழுக்காத. அவ்வளவுதூரம் நாம போகணுமின்னா என்னவெல்லாமோ மாறணும். மாயாவதியே இந்தப் பிரச்சனைய கண்டுகிட்ட மாதிரி தெரியல. ஆனா வெளியில உள்ள ஆட்கள் ஊதிப் பெருசாக்கிட்டாங்க. நம்ம ஊர்கள விட வடக்க சாதியெல்லாம் பயங்கரமா பாக்குறாங்கப்பா. இன்னும் கொத்தடிம, பெண்ணடிமை, தீண்டாமன்னு ஏகப்பட்ட பிரச்சனைகள் அங்க இருக்குது. ஓடுற ரயில்லேந்து ஒரு தலித் பயணிய இரயில்வே போலிஸ் ஒருத்தன் தூக்கி எறிஞ்சுட்டான் இந்தவாரம். இதுபோல தெனசரி நடக்குற விஷயங்கள்தான். படிப்பறிவு பரவலானா இந்த பிரச்சனைகள் தானாவே தீரும்ணு நெனைக்கிறேன்."

"ஹைதராபாத்ல மசூதில.."

"குண்டு வெடிச்சது இன்னொரு பெரிய செய்திப்பா. 14பேருக்கும் மேல செத்துருக்காங்க. வெளிநாட்டு சதி அம்பலமாயிருக்கு. மும்பை வெடிகுண்டு வழக்குல தீர்ப்பு சொன்ன அதே நாள் மசூதில குண்டு வெடிக்குது. மக்களோட மத உணர்வுகளத் தூண்டத்தான் இந்த சதியெல்லாம் நடக்குது. ஆனா இதுவரைக்கும் மக்கள் நிதானமாத்தான் நடந்திருக்காங்க."

"ஓகோ."

"உள்ளூர் தீவிரவாத அமைப்புக்களுக்கு நல்ல தீனி. அப்பப்ப இதமாத்ரி செஞ்சுகிட்டேயிருந்தா போதும். பொதுமக்களேகூட அட நமக்கெதிரா நம்ம ஆட்கள்தான் சதி செய்யுறாங்களோன்னு நம்பிருவாங்க."

"நம்ம கன்னியாகுமரி மீனவர்கள் வந்து சேர்ந்துட்டாங்களே." மணி கேட்டான்.

"அட மறந்துட்டேன் நல்லவேள நியாபகப் படுத்தின. அதுல பயங்கர டிராமாவா இருக்குதுப்பா. வந்தவங்கள பத்திரிகைய சந்திக்கவே விடலப்பா. ஒருத்தரத் தவிற யாருமே நேரடியா பேட்டி கொடுக்கல. நேரா கலைஞர சந்திச்சு விடுதலப் புலிகள்தான் எங்கள கடத்திட்டங்கன்னு சொல்லிட்டாங்க. ஆனா கூடப் போன ஒரு சின்னப்பையன் இலங்கை ராணுவம்தான் கைது செஞ்சுட்டு போச்சுண்ணு சொல்லிட்டான்."

"ஆகா மாட்டிகிட்டானுவளா?"

"ம். இதுல இரு நாட்டு உறவும் இருக்குதுல்ல? புலிகள ஈசியா குறை சொல்லிரலாம்ல."

"ஆமா ஈசியா சொல்லிட்டு தப்பிச்சுரலாம்."

"ஆனா இலங்க அரசுக்கு இந்தியா பயந்து ஒண்ணும் இதச் செய்யலண்ணுதான் சொல்லணும். பொதுவாகவே புலிகளுக்கு எதிரான போக்கு காங்கிரஸ் அரசாங்கத்துக்கு இருக்குது."

"அத ஏண்ணு கேக்கணுமா. மே 21 மறக்க முடியுமா?"

"ஆமா. ஆனா கூட்டணி அரசியல்ல கலைஞராலக் கூட இதப்பத்தி ஒண்ணுமே செய்ய முடியல பாத்தியா?"

"மொத்தத்துல வைகோவ விட்டா புலிகளுக்கு வேற ஆதரவே இல்லைங்கிறீங்க."

"அரசியல் ஆதரவு குறைவுதான். இலங்கைத் தமிழர்கள் நம்ம பிரச்சனை இல்லைங்கிறதுதான் பொதுவான போக்காயிருக்குது. புலிகள் சார்பில மீனவர்கள கடத்தவே இல்லைன்னு தெளிவா சொல்லிட்டாங்க. இதுல இன்னொரு விஷயம் என்னண்ணா புலிகள் பல அத்தியாவசிய தேவைகள தமிழக மீனவர்கள்டேந்துதான் வாங்குறாங்களாம்."

"அப்டியா அண்ணாச்சி."

"ஆமா மணி. இது முன்னாலேந்தே நடக்குதேப்பா."

"வெளி நாட்டுல என்னண்ணே செய்தி?"

"பெருசா ஒண்ணுமில்லப்பா."

"செல்லுல சார்ஜ் தீந்து போகுதுண்ணே."

"சரி அப்பம் அப்புறமா பேசலாம். ஒரே ஒரு விஷயம் சொல்லட்டா?"

"சொல்லுங்க அண்ணாச்சி."

"பாட்னாவ்ல நின்னுபோன எலக்ட்ரிக் ரயில பயணிகளெல்லாம் எறங்கி தள்ளியிருக்கானுங்க. இந்த வாரம் நான் படிச்சு சிரிச்ச செய்தி இதுதான்பா."
மணி சிரித்துக்கொண்டிருக்கையில் இணைப்பை துண்டித்தார் அண்ணாச்சி.

| |
oooOooo
                         
 
அவர்களின் இதர படைப்புகள்.   அண்ணாச்சி உலகம் என்னாச்சி ? பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2007 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |