Tamiloviam
மே 17 2007
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
துணுக்கு : பெயர் மாரிய டூயட் மூவீஸ்
- [feedback@tamiloviam.com]
| | Printable version | URL |

ஊர் பேரில் படம்

Perarasuலண்டன் கருணா தயாரிக்கும் படமொன்றில் விஜய் நடிக்க பேரரசு இயக்குவதாக இருந்தது. இப்போது அது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.  விஜய்யை வைத்து திருபாச்சி, சிவகாசி என இரண்டு ஹிட் கொடுத்திருந்தாலும், பேரரசுவின் சமீபத்திய (திருப்பதி,தர்மபுரி)  இரண்டு தோல்வி படங்களே காரணம் என்கின்றர்.

பேரரசு சார் இப்படியே போனா உங்க சொந்த ஊருக்கே உங்களை அனுப்பிடுவாங்க.


பெயர் மாரிய டூயட் மூவீஸ்

நல்ல படங்களை தயாரிப்பதில் ஆர்வம் உள்ளவர் பிரகாஷ்ராஜ். சமீபத்திய உதாரணம் தமிழகத்தில் சக்கை போடு போடும் 'மொழி'. டூயட் மூவீஸ் என்ற பேனரில் படம் தயாரிக்கும் பிரகாஷ்ராஜ், தற்போது டூயட் மூவீஸ் பி லிட் என பெயரை மாற்றியுள்ளார். ஜி.வி பிலிம்ஸ் போல ஷேர் மார்கெட்டில் ஈடுபடவுள்ளார். அதற்கான முதல் வேலைதான் இந்த பெயர் மாற்றம்.

பேர மாத்துங்க, ஆனா நல்ல படம் எடுக்குற கொள்கைய மாத்தாதீங்க.



மல்டி பிளக்ஸாக மாறும் தங்கம்

ஆசியாவில் இரண்டாவது பெரிய தியேட்டர் மதுரை தங்கம் தியேட்டர். பல வருடங்களாக மூடப்பட்டிருந்த இந்த தியேட்டரை ஜி.வி. பிலிம்ஸ் வாங்கியுள்ளது. அதை நவீன வசதிகளுடன் மல்டி பிளக்ச் தியேட்டராக மாற்ற திட்டமிட்டுள்ளனர்.

வாலு போய் கத்தி வந்த கதையா ஆவப்போது ஜாக்கிரதை



மாயமாய் போன மாயக்கண்ணாடி

cheran, navya nair
தன் படங்களை தமிழக மக்கள் எப்படியும் ரசிப்பார்கள் என்று படமெடுத்து வந்த இயக்குநர் சேரன் நடித்து இயக்கிய 'மாயக்கண்ணாடி' பல திரையரங்குகளில் மூன்றே நாட்களில் மாயாமாய் தூக்கப்பட்டது. இப்படத்தின் சென்னை விநியோக உரிமையை சேரனே 1 கோடிக்கு வாங்கியிருந்தார். இதுவரை ஆன வசூலோ 10 லட்சம்தான்.

இயக்குநர் சேரன் ! நடிகர் சேரனின் மாயத்தோற்றத்தில் மாயமாய் போகாதீர்கள்.

 

 


 

| |
oooOooo
                         
 
அவர்களின் இதர படைப்புகள்.   துணுக்கு பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2007 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |