மே 19 2005
தராசு
வ..வ..வம்பு
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
டெலிவுட்
நூல் அறிமுகம்
மஜுலா சிங்கப்புரா
ஆன்மீகக் கதைகள்
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
நையாண்டி
உள்ளங்கையில் உலகம்
கவிதை
திரைவிமர்சனம்
தொடர்கள்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
டெலிவுட் : தமிழகத்தின் லாரல் -ஹார்டி
- சில்லுண்டி
| Printable version |


மேக்கப் மட்டுமல்ல, வாய்ஸ் கூட மதனை அப்படியே ஜெராக்ஸ் போட்ட மாதிரி. புதன்ஸ் தூரப்பார்வையாம்! அவங்க புரோகிராமை அவங்களே கிண்டலடிக்கிற தில், விஜய் டிவிக்கு ஜாஸ்திதான். மதன் மாதிரியில்லாமல் இந்த புதன் டாப் டென் லிஸ்ட்டையும் போட்டுவிட்டு நடிகர்களை பேட்டியும் எடுத்தார். நடிகர்கள்னா 'லொள்ளு சபா' நடிகர்கள். சந்தானம் இல்லாத குறை பளிச்சுனு தெரியாத அளவுக்கு சமாளிக்கிறாங்க. நமக்கும் மெட்டி ஒலி, கெட்டி மேளத்திலிருந்து விடுதலை!

இதுவும் ஒரு டாப் டென் சங்கதிதான். ஊரையே கலக்கும் 'முதல் பத்து' பாடல்கள், தமிழன் டிவியில். கவனிக்க 'டாப் டென்'. முதல் பத்து மாதிரி ராப்பத்து உண்டான்னு கேட்குறீங்களா? (அதுவும் உண்டு. ராத்திரி பதினொரு மணிக்கு ரகசியமா வாங்க! )  கம்மிங் பேக் டு த பாயிண்ட். 'முதல் பத்து' நிகழ்ச்சியில் முதலாவதாக வந்து 'வாடி, வாடி'ன்னு குதித்துக்கொண்டிருந்தார் விஜய். உலகெங்கும் இந்த பாடல்தான் டாப் ஓன் என்று வழிமொழிந்தார் காம்பியர். அட, இங்கேயும் அரசியலப்பா!

கங்குலி, சச்சினுக்கெல்லாம் கஷ்ட காலம் வந்துடுச்சுன்னு ஜக்கம்மா சொல்றா...! இன்றைய நிலவரத்தின் படி, விளம்பர படத்தில் ஜாஸ்தியா நடிக்கிறது அமிதாப்தான்! குட்டீஸ், குட்டிஸ் அல்லாத நடிகைகள், மாடல்கள் என கூட்டணி போட்டு மனுஷன் கலக்குறார். சாம்பிளுக்கு ஒன்ணு.  'முத்து பாஸ் ஆயிட்டான்!' என்னென்ன படத்துல நடிச்சிருக்கோம்னு அவருக்கே ஞாபகம் இருக்குதோ என்னமோ? ம்... பச்சனுக்கு நிறைய மச்சம்தான்!

வெற்றி கொடுத்த சந்தோஷத்தில் பிரஸ் மக்களிடம் ஜாலியாக பேசிக்கொண்டிருந்தார் அம்மா. அன்றைக்கு மட்டும் ஜெயா டிவியில் முக்கால் மணி நேரம் 'செய்திகள்'. காஞ்சிபுரத்தில் ஏழு கூட்டணி என்றால் கும்மிடிப்பூண்டியில் எட்டுன்னு சொன்னதில் எட்டாவது யாருங்கிறது நம் சிற்றறிவுக்கு எட்டவில்லை. எல்லோருக்கும் அம்மா கையால ஜாங்கிரியாம்! 'அல்வா' கொடுக்காம இருந்தா சரிதான்னு கமெண்ட் அடிச்சா, இன்னும் எத்தனை நாளைக்குடா இந்த கமெண்டை வெச்சுகிட்டு தொங்கப் போறீங்கன்னு நீங்க கமெண்ட் அடிக்க மாட்டீங்கதானே?!

கே. டி.வியில் ஏதோ ஒரு படம். சாமியார் வேஷத்தில் தமிழகத்தின் லாரல் -ஹார்டி.

'திருடி... திருடி அலுத்துப் போச்சுண்ணே'

'ஏ.. நாயே.. அப்போ என்ன பண்ணப் போறே'

'அரசியல்ல குதிச்சுடலாம்னு முடிவு பண்ணிட்டேண்ணே'

'ரெண்டும் ஒண்ணுதாண்டா....நாயே!'

ஹலோ, கவுண்ட்ஸ் எங்க இருக்கீங்க...?

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com - Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |