Tamiloviam
மே 22 2008
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கவிதை : பூமாலையில் ஒரு மல்லிகை
- சத்தி சக்திதாசன் [sathnel.sakthithasan@bt.com]
  Printable version | URL |


 
பூமாலையில் சிரிக்கும்
மல்லிகை மலர்களாய்
மின்னலிடும் கோதையர்
அழகிய சிரிப்பினில்
 
ஓரு மல்லிகை ... ஏன் தானோ
ஓரம்பு என்னிதயத்தை நோக்கி
எய்தது சொல் மனமே ......
 
கீறிய ரணத்தினில் வடிவது
ஊறிய காதல் உதிரமே ... அறிவாய்
ஈரிரு திங்களாய் விழிகள்
பாரினில் உறக்கத்தை மறந்தன
 

மீறிய எண்ணங்கள் கொடுக்கும்
பாரிய சுமைதான் காதலோ ?
மாறிய இதயத்து உணர்ச்சிகள்
கூறிய உணர்வின் மொழிகள்
தூறிய கவிதைத் துளிகள்
 
கனவெனும் கடலில் மூழ்கி நான்
கண்டெடுத்த முத்துக்களை கோர்த்து
மாலையாய் நானிங்கு புனைந்தேன்
மங்கையின் கைகளில் பூமாலையாய்
மலரும் இக்கவிதையும் ஏனெனில்...
 
இதுவும் கூட
இன்றிங்கு இசைக்கும் ராகம்
பூமாலையில் ஓர் மல்லிகையாம்

oooOooo
                         
 
சத்தி சக்திதாசன் அவர்களின் இதர படைப்புகள்.   கவிதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |