மே 26 2005
தராசு
வ..வ..வம்பு
மஜுலா சிங்கப்புரா
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
புதிய தொடர்
துணுக்கு
உள்ளங்கையில் உலகம்
டெலிவுட்
சிறுகதை
திரையோவியம்
அமெரிக்க மேட்டர்ஸ்
திரைவிமர்சனம்
கார் ஓட்டலாம் வாங்க
அடடே !!
கவிதை
தொடர்கள்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
தராசு : சுயமரியாதை உணர்வு குறைகிறது - யாரிடம்?
- மீனா
| Printable version |

கோவை தி.மு.க மாநாட்டில் பேசியுள்ள தி.மு.க பொதுச்செயலர் பேராசிரியர் அன்பழகன் இன்றைய இளைஞர்களிடம் சுயமரியாதை உணர்வு குறைந்து வருவதாக வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் அரசியல் நிலையில் தொடர் வெற்றிகளைப் பெற நமது அடிப்படை கருத்துகளை விட்டு வெளியேறாமல் இருக்க வேண்டும் என்றும், கடவுளை வழிபடுவதில் தவறில்லை.. ஆனால் அப்பழுக்கில்லாத தவறு இல்லாத கடவுளை வழிபடவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

தி.மு.க வின் ஆரம்ப கால கோட்பாடுகள் - மற்றும் தற்போதைய நடைமுறைகளினால் பேராசிரியர் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளார் என்பதையே அவர் கூறியுள்ள கருத்துகள் பிரதிபலிக்கின்றன. தி.க விலிருந்து ஆரம்பித்த தி.மு.க முதலில் சில நாட்களுக்கு சுயமரியாதைக் கழகமாகத்தான் திகழ்ந்தது. அதாவது ஆத்தீகவாதக் கொள்கைகளுக்கு எதிராக இயங்கும் கழகமாக. ஆனாலும் கருணாநிதி எப்போதிலிருந்து தலைவரானாரோ அப்பொழுதே அவர்களின் சுயமரியாதைக் கொள்கை காணாமல் போகத் துவங்கியது. வெளியில் நாத்தீகவாதியாகவும் உள்ளுக்குள் ஆத்தீகவாதியாகவும் இரட்டை வேடம் புனைய எப்போது கருணாநிதி ஆரம்பித்தாரோ அப்போதே பேராசிரியர் குறிப்பிடும் சுயமரியாதை உணர்வுகள் குறைய ஆரம்பித்து விட்டன.

இந்துக்களுக்கும், இந்துக் கடவுளுக்கும் எதிரான விஷமமான வார்த்தைகளைப் பேசுவது மட்டுமே சுயமரியாதைக் கொள்கை என்ற தத்துவதைக் கடைபிடித்து வருகிறார் தி.மு.க தலைவர். தி.மு.கவின் மற்ற தலைவர்கள் கோவிலுக்குப் போனாலோ, வேண்டுதல்களை நிறைவேற்றினாலோ அவர்களை கட்சியிலிருந்து விலக்கும் அளவிற்கு கடுமையான நடவடிக்கைகளை எடுத்த தி.மு.க தலைவர் தன் மகனும் பேரனும் கோவிலுக்குப் போய நெற்றி நிறைய குங்குமமும் விபூதியுமாக காணப்பட்டாலும் அவர்களை ஒன்றும் செய்யாமல் இருப்பார்.

நிலைமை இப்படி இருக்க இன்னொரு முக்கிய விவாதத்திற்கான அடியெடுத்துக் கொடுத்திருக்கிறார் பேராசிரியர். எந்தக் கடவுள் அப்பழுக்கில்லாத - தவறில்லாத கடவுள்? இந்தக் கேள்விக்கு யாரிடமாவது பதில் இருக்குமா? இல்லை இதற்கு பதில் சொல்ல ஆரம்பித்தால் ஏற்படப்போகும் விளைவுகளைப் பற்றி யாராவது சிந்தித்திருப்பார்களா? பேராசிரியர் அவர்களே!! சுயமரியாதை உணர்வு குறைந்துள்ளது இளைஞர்களிடம் மட்டுமல்ல தி.மு.க வின் மூத்த தலைவர்களிடமும் தான். முதலில் சுயமரியாதை என்றால் என்ன என்பதற்கான சரியான விளக்கத்தை தங்கள் தலைவரிடம் கேளுங்கள். முடிந்தால் அதை மக்களுக்கும் உங்கள் கட்சித் தொண்டர்களுக்கும் சொல்லுங்கள். பிறகு இதைப் பற்றி கூட்டங்களில் விரிவாகப் பேசலாம். அப்போதுதான் உங்கள் கழகத்தின் அடிப்படைக் கொள்கைகளை வைத்து அரசியல் நிலையில் நீங்களும் உங்கள் கழகமும் தொடர் வெற்றிகளைப் பெறமுடியும்.

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com - Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |