மே 26 2005
தராசு
வ..வ..வம்பு
மஜுலா சிங்கப்புரா
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
புதிய தொடர்
துணுக்கு
உள்ளங்கையில் உலகம்
டெலிவுட்
சிறுகதை
திரையோவியம்
அமெரிக்க மேட்டர்ஸ்
திரைவிமர்சனம்
கார் ஓட்டலாம் வாங்க
அடடே !!
கவிதை
தொடர்கள்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
மஜுலா சிங்கப்புரா : ஞானம் வந்தால் பின் நமக்கெது வேண்டும்?
- எம்.கே.குமார்
| Printable version |

உலகப்பந்தின் மொத்த நிலப்பரப்பான 148.94 மில்லியன் சதுர கிலோமீட்டரில் (29.2%), 'உலக மனித வரைபடத்தின் இடுப்பு மச்சமாக' வெறும் 647.50 சதுர கிலோமீட்டரை (3.5 மடங்கு வாஷிங்டன்) மட்டுமே தனது உடல் அளவாகக்கொண்ட சிங்கப்பூர் என்ற நாடு, இன்று தெற்காசியாவின் 'பொருளாதார தொழிலகமாகவும்' 'வான் மற்றும் கடல் பயணத்தின் நடு நாயகமாகவும்' அடைந்திருக்கும் மிகப்பெரிய வளர்ச்சி ஒருபக்கம் இருக்கட்டும். சிங்கப்பூர் அல்லது 'சிங்கபுரம்' முதன்முதலாக உலக வரலாற்றுக்குள் வந்தது எப்படி; எப்போது?

இன்றைய உலகில் அமெரிக்காவின் அதிகாரத்துவத்துக்கு இணையாக, ஒரு காலத்தில் தெற்காசியாவில் அதிகாரத்தோடு இருந்த நாடு இந்தோனேஷியா. பெரியதும் சிறியதுமாக பல்லாயிரக்காணக்கான தீவுகளைக் கொண்டு, உலக கடல் வாணிபத்தின் மையமாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சிறந்து விளங்கியது அது. ஜாவா, சுமத்ரா, நியு கினியா, போர்னியா போன்றவை பெரிய நிலப்பரப்புகளைக் கொண்ட தீவுகள். இவற்றின் 'ஜாவா' தீவில்தான் மிகப்பெரும் இந்து சாம்ராஜ்ஜியமாக விளங்கிய 'ஸ்ரீவிஜயப்பேரரசு' சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இவ்வட்டாரத்தில் கோலோச்சி வந்திருக்கிறது.

இந்து சமயக் கோட்பாடுகளும் இந்துத்தொடர்புடைய கலாசாரமும் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்திய வணிகர்களால் இந்தோனேசியாவுக்குக் கொண்டு வரப்பட்டன. மேற்கு ஜாவாவிலும் கிழக்கு போர்னியோவிலும் இந்து அரசுகள் ஆங்காங்கு வேரூன்றி பிறகு மெல்ல மெல்ல சாம்ராஜ்ஜியமாக வளரத்தொடங்கின. அப்படி வளர்ந்த அரசுகளில் ஒன்றுதான் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மிகப்பெரும் வலிமை உடைய அரசாக ஜாவாவில் விளங்கிய ஸ்ரீவிஜயப்பேரரசு.

கடல் வாணிபத்தில் மன்னர்களாக விளங்கிய சைலேந்திரர்கள் உருவாக்கிய விஜயப்பேரரசு, ஜாவா, மதுரா, பாலி போன்ற பகுதிகளில் இந்துப் பேரரசாக செழித்து வளர்ந்தோங்க, சுமத்ரா தீவின் சில பகுதிகள் இலங்கை, திபெத், நேப்பாளத்திலிருந்து வந்திருந்த புத்த பிட்குகளின் ஆசியால் மெதுவாக புத்த-இந்து அரசாங்கமாக மாறியிருக்கிறது.

தொடக்கத்தில் கடல் வாணிபத்தில் மட்டுமே ஆர்வம் காட்டிய அப்பேரரசு, பிறகு நாடு பிடிக்கும் ஆசையில் மற்ற எல்லாப்பகுதிகளின் மேலும் கை வைத்தது. விளைவு, சுமத்ராவின் கிழக்குப்பகுதி முழுமையும் ஸ்ரீவிஜயாவின் ஆட்சியின் கீழ் வந்தது. பின்னர், தாம்பரலிங்கம், இலங்ககோகம் உட்பட மலாயாவின் கிழக்கு மற்றும் மேற்குக்கடற்கரை பகுதிகள் யாவும் அதன் கட்டுப்பாட்டினுள் வந்திருக்கின்றன. சிங்கப்பூர் தீவும் அவற்றுள் அடக்கம்.

ஏழாம் நூற்றாண்டில் சிறு 'இந்து' அரசாகத் தோன்றி, மெதுவாக 'இந்து-புத்த' அரசாங்கமாகி, பிறகு 'புத்த அரசாக' பதினோறாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை இந்தோனேசியா மற்றும் மலாயாவின் அனைத்துப்பகுதிகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு, வலிமை பெற்றிருந்த ஸ்ரீ விஜயப்பேரரசு, யாரால் என்ன உரசலுக்கு, எப்படி ஆட்பட்டது எனத்தெரியவில்லை. ஒட்டுமொத்தமாய் தேசமெங்கும் பரவிக்கிடந்த ஒரு மிகப்பெரும் சாம்ராஜ்ஜியம் ஒரே ஒரு படையெடுப்பில் முழுவதும் நொறுங்கிப்போனது. படையெடுத்தவன் யார் தெரியுமா?

தஞ்சாவூர் பெரிய கோயிலான 'பிரகதீஸ்வரர் ஆலயம்' புத்தம் புதியதாக வானைப்பார்த்து சிரித்துக்கொண்டிருந்த நேரமாக இருக்கவேண்டும் அது! 'முதலாம் இராஜேந்திர சோழன்', 'பெரிய கோயிலைக்கட்டிய சந்தோசத்தில் இருந்திருப்பான். மிகப்பெரிய சோழ சாம்ராஜ்ஜிய தலைவனாகிய அவனுக்கு, ஸ்ரீவிஜயாவின் நடவடிக்கை என்ன காரணத்தாலோ திடீரென்று பிடிக்கவில்லை. கடற்வாணிபத்தில் போட்டியா, வல்லரசாக மாறியபின் கப்பம் ஏதும் கட்டாமல் புறக்கணித்ததா வேறு ஏதும் காரணங்களா தெரியவில்லை. தமிழகத்தின் சோழப்பேரரசுக்கும் ஸ்ரீவிஜயப்பேரரசுக்கும் நெடுங்காலமாக இருந்த அந்த நட்புறவு முறிந்தது. கீழ்த்திசை சூரியன் கிடுகிடுக்க கிளம்பின சோழப்படைகள்.

கி.பி 1012 முதல் கி.பி 1044 வரை 'சோழப்பேரரசுக்கு மாமன்னனாய்' இருந்த முதலாம் இராஜேந்திர சோழன் (இராஜ இராஜ சோழனின் மகனாவார் இவர்!) கி.பி 1025ல், சோழ நாட்டில் இருந்து பெரும் கப்பற்படையுடன் புறப்பட்டான். ஜாவா தீவில் மையம் கொண்டிருந்த ஸ்ரீவிஜய அரசின் மேல் திடீத்தாக்குதலைத் தொடுத்தான். விஜயப்பேரரசு இத்தாக்குதலை எதிர்பார்த்திருக்கவில்லை. ஈடுகொடுக்க முடியாமல் திணறியது. 'மூசி' ஆற்றின் வழி முழுவதும் செழித்துக்கிடந்த விஜயப்பேரரசின் எல்லாப்பகுதிகளையும் அதன் வழியே சென்று தாக்கினான்.

ஸ்ரீவிஜயப்பேரரசின் மாமன்னர் சிறை பிடிக்கப்பட்டார். அரண்மனைச்சொத்துகள் கைப்பற்றப்பட்டன; சூறையாடப்பட்டன. ராஜேந்திர சோழனின் படை பிறகு வடக்கு நோக்கித் திரும்பி, 'மலாயூ' என்ற இடத்தைக் கைப்பற்றிய பின்னர், சுமத்ராவைக் குறிவைத்தன.

சுமத்ராவிலும் பரவிக்கிடந்த விஜயப்பேரரசுவை தாக்கியபோது அதற்கு அடிமைப்பட்டுக்கிடந்த சிற்றரசுகள் ராஜேந்திரச்சோழனுக்கு எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் அடிபணிந்தன. இவ்வாறாக இந்தோனேசியாவின் தென்முனையிலிருந்து வடக்கு முனை வரை எல்லாப்பகுதிகளையும் கைப்பற்றிய ராஜேந்திர சோழன், இறுதியாக சுமத்ரா தீவின் 'அச்சே' நகரைத் தாக்கினான். விஜய அரசின் வடபகுதியில் முக்கிய நகராக விளங்கிய அதைத் தாக்கும் பொருட்டே, அவன், தென் முனையிலிருந்து வட முனை வந்திருக்கவேண்டும்.

'அச்சே' நகரைக் கைப்பற்றிய பின் ஸ்ரீவிஜயப்பேரரசில் சொல்லிக்கொள்ளும்படி எந்தவித நகரோ ஆட்சியாளர்களோ எங்கும் அப்பகுதிகளில் இல்லாத நிலையில் கீழ்த்திசை மீதான தனது படையெடுப்புக்கு அத்துடன் முற்றுப்புள்ளி வைத்தான் ராஜேந்திர சோழன். (இந்த 'அச்சே' நகர்தான் கடந்த வருடம் சுமத்ரா தீவின் மேற்குக்கரையில் தோன்றிய பூமியதிர்ச்சி மற்றும் சுனாமியலைகளால் முற்றிலுமாய் அழிந்து போன இடம்! இந்தோனேசியாவின் வடக்கு முனை. இம்முனை அப்போது இல்லாதிருந்தால் மலேசியாவிற்கும் சிங்கப்பூருக்கும் சேதம் அதிகமாயிருந்திருக்கலாம்)

'அச்சே' நகரை அடித்து, அழித்து, ஸ்ரீவிஜயப்பேரரசை நிலைகுலைத்து, வெற்றி வாகை சூடியவனாய் நாடு திரும்பினான் முதலாம் ராஜேந்திர சோழன். இந்தியாவின் தென்கோடியிலிருந்து ஆசியாவின் தென்கோடிக்கு படையெடுத்து வந்து வெற்றியும் பெற்ற அவனது நோக்கம் தான் அப்படி என்ன? வேறென்ன, உலகப்பேரரசுகளுக்கு அல்லது ஸ்ரீவிஜயப்பேரரசுக்கு தனது கப்பற்படையின் பலத்தைக் காட்டுவதாய்த்தான் இருக்கும். அப்படி இல்லையென்றால் கடல் கடந்து வந்து, மாபெரும் வெற்றி பெற்று, வெறுங்கையோடு மீண்டும் அவன் ஊருக்குத் திரும்பிப்போயிருப்பானா என்ன?

அன்று அவன் திரும்பிப்போகாமலோ அல்லது தனது ஆட்சியாளர்களில் ஒருவனை இங்கு பதவியில் அமர்த்திவிட்டோ நாடு திரும்பியிருந்தானாகில், யாருக்குத் தெரியும், சிங்கப்பூரின் "·போர்ட் கேனிங்"கில் அல்லது "·பேரர் பார்க்கில்" தஞ்சையைப்போன்று ஒரு பெரிய கோயில் கம்பீரமாக இன்று நிமிர்ந்து நின்றுகொண்டிருக்கலாம்.

ஸ்ரீவிஜயப்பேரரசை அழித்த ராஜேந்திர சோழனுக்கும் சிங்கப்பூருக்கும் என்ன தொடர்பு? எவ்வகையில் இரண்டும் ஒன்றிணைகின்றன? அடுத்த வாரம் பார்ப்போம்.

தொடரும்.சிங்கப்பூர் டைம்ஸ் 2015 இதழில் இருந்து.

உடல் மெலிவு மாத்திரைகளைச் சாப்பிட்ட பெண் மயக்கம்.

சிங்கப்பூர் ஜூன் 05. பெருகிவரும் உலக சுகாதார உணவு மற்றும் பழக்க வழக்கங்களின் அடிப்படையில், மக்களிடையே தற்போது உணவு மாத்திரைகள் குறித்தான விழிப்புணர்வு கூடி வருவது குறித்து உணவு மற்றும் சுகாதார அமைச்சு நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது.

"காலைக்கு இரண்டு, மதியம் இரண்டு, இரவுக்கு இரண்டு" என உடல் நலத்திற்கு நோயாளிகள் மாத்திரை எடுத்துக்கொள்வதை ஒரு காலத்தில் நாம் அறிந்திருந்தோம். இப்போது உணவு உண்ணும் வழக்கத்திற்குப் பதிலாக அண்மைக்காலங்களில் வெறும் வைட்டமின் மாத்திரைகளை மட்டுமே எடுத்து வருவது குறித்து அமைச்சு ஒரு ஆய்வு செய்தது.

அதன்படி சிங்கப்பூரர்கள் தனது உடல் நலத்தில் எடுத்து வரும் அக்கறை குறித்து பெருமைப்பட்டுள்ள அமைச்சு, மக்களுக்கு தொடர்ந்து சுகாதார கட்டுப்பாடுகளை உணர்த்தி வர முடிவு செய்துள்ளதாகச் சொன்னது.

இதற்கிடையில் நேற்று, இரண்டு மாத்திரைகளுக்குப்பதிலாக நான்கு 'பிரேக் ·பாஸ்ட்' மாத்திரைகளை உட்கொண்ட பெண் வேலையின் போது மயக்கமடைந்து விழுந்தார். மருத்துவர்களின் விசாரணையில், 'நான்கு பிரேக்·பாஸ்ட்' மாத்திரைகளுக்கு முன், தனது உடல் மெலிவுக்காக 'ஐந்து ஸ்லிம்மிங் மாத்திரைகளை' அம்'மூதாட்டி' எடுத்துக்கொண்டுள்ளார் என்பது தெரியவந்தது. '70 வயதான' அம்மூதாட்டியை போலிசார் விசாரித்து வருகிறார்கள்.

 

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com - Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |