ஜூன் 01 06
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
பேட்டி : நடிகர் குண்டு கல்யாணம் பேட்டி
- திருமலை கோளுந்து [golundhu1979@yahoo.com]
Bookmark in Del.icio.us | | Printable version | URL |
"நாட்டில் எத்தனையோ பிரச்சினை இருக்கிறது. சிலையை அதே இடத்தில் வைப்பதால் நாட்டில் எல்லாப் பிரச்சினையும் தீர்ந்துவிடுமா?"

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு, ஓட்டளித்த மக்களுக்கு நன்றி அறிவிக்கும் கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு பேச்சாளராக நடிகர் குண்டு கல்யாணம் கலந்து கொண்டு பேசினார். இக்கூட்டத்தில் கலந்து கொள்ள மதுரை வந்த இவரிடம் தமிழோவியத்திற்கு பேட்டி எடுத்தோம்.

தமிழோவியம் :-  தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி அடையும் என்ற நம்பிக்கையில் இருந்த நீங்கள், சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியை எப்படி எடுத்துக் கொண்டீர்கள்?

பதில் :- இந்தத் தேர்தலில் நாங்கள் வெற்றி அடைவோம் என்ற நம்பிக்கை எனக்கு அதிகமாகவே இருந்தது. அதற்கு மாறாக நடந்துள்ளது. அதனை பற்றி கவலைப்படவில்லை. நாங்கள் தோல்வியடைந்தாலும் வலுவான, பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றுள்ளோம். அ.தி.மு.க. தோல்வி ஒரு தோல்வியே அல்ல. இந்தத் தேர்தலில் தி.மு.க.வினர் இலவசங்களை சொல்லித் தான் ஓட்டுக் கேட்டார்களே தவிர கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் குறைகளை சொல்லி ஓட்டுக் கேட்கவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழோவியம் :- வலுவான சட்டமன்ற உறுப்பினர்களை பெற்று இருந்தாலும், முதல் சட்டமன்ற கூட்டத்திலேயே அடிதடி, ரகளை என்று அ.தி.மு.க.உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார்களே?

பதில் : எங்கே இவர்களை சட்டமன்றத்திற்குள் உட்கார வைத்தால் நம்மை கேள்வி கேட்டு ஒரு வழி பண்ணி விடுவார்கள் என்று பயந்து தான் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள். அதற்கு எல்லாம் சேர்த்து சட்டமன்றத்திற்கு சென்று அம்மா பதிலடி கொடுத்ததை நாம் பாராட்ட வேண்டும். இந்த ஆட்சி விரைவில் கவிழ்ந்து விடும்.

தமிழோவியம் :- தி.மு.க.தலைமையிலான அரசு 5 ஆண்டுகள் இருக்கும் என்று நினைக்கிறீர்களா?

பதில் :- இப்பொழுது அமைந்திருக்கும் தி.மு.க. அரசு பெரும்பான்மை இல்லாத அரசு. தன்னோடு இருக்கும் கூட்டணிக்கட்சிகளின் தயவில் இந்த ஆட்சி ஓடிக் கொண்டு இருக்கிறது. எதனை சொல்லி கருணாநிதி வெற்றி பெற்றாரோ, அதனை எல்லாம் செய்ய முடியாமல் இந்த ஆட்சி திணரத் தான் போகிறது. அப்பொழுது கூட்டணி கட்சியினரே இந்த அரசை கவிழ்த்து விடுவார்கள். இதனால் இந்த ஆட்சி விரைவில் கவிழ்ந்து மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியை பிடிக்கப் போவது உறுதி. இது தான் தமிழகத்தில் இனி நடக்கப் போகிறது.

தமிழோவியம் :- சட்டமன்ற கூட்டத் தொடரில் கலந்து கொண்டு முன்னாள் முதல்வர், எதிர்கட்சித் தலைவர் ஜெயலலிதா பேசியதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில் :- புரட்சித் தலைவி அம்மாவின் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் கொடுக்க முடியாமல் தி.மு.க. தலைவரும், அமைச்சர்களும் கத்தியது தான் மிச்சம். முதல் நாளிலேயே அம்மா, அவர்களை கலகலக்க வைத்து விட்டார். ஒவ்வொரு கேள்வியையும் புள்ளி விபரத்தோடு எடுத்துச் சொன்னவுடன் நாங்கள் அப்படிச் சொல்ல வில்லை, இப்படித் தான் சொன்னோம் என்று ஆளும்கட்சியினர் தினறி விட்டனர். இலவச நிலம் எப்படி கொடுப்பீர்கள், கடனை எல்லோருக்கும் தள்ளுபடி கொடுக்க வேண்டியது தானே என்று அம்மா கேட்டதை பொதுமக்கள் வரவேற்கிறார்கள். இந்த நிலையில் அம்மா எதிர்கட்சித் தலைவராகி விட்டார். இனி சட்டசபை நடக்கும் பொழுது முதல் கூட்டத் தொடரில் இந்த கருணாநிதி அரசு தப்பியது போல் தப்பிக்க முடியாது. அம்மாவின் கேள்விகளுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.

தமிழோவியம் :- முதல்வர் கருணாநிதி தலைமையிலான அரசு அமைந்த உடனே, அ.தி.மு.க.விற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த நடிகர், நடிகைகளுக்கு மிரட்டல்கள் வருவதாக சொல்லப்படுகிறது. உங்களுக்கு மிரட்டல்கள் வந்ததா?

பதில் :- எங்களுக்கு மிரட்டல்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது. அதனை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மிரட்டல்களுக்கு எல்லாம் அ.தி.மு.க.வினர் பயப்பட மாட்டார்கள்.

தமிழோவியம் :- நீங்கள் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டீர்களா?

பதில் :- வாய்ப்புகள் வந்தால் நடிப்பேன்.

தமிழோவியம் :- நடிகர் விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து விருத்தாசலத்தில் அவர் வெற்றியும் பெற்றுள்ளார். அதனை எப்படி பார்க்குறீர்கள்?

பதில் :- நடிகர் விஜயகாந்த் வெற்றி பெற்று இருப்பது வியப்பாகத் தான் இருக்கிறது. ஆனால் அவரது கட்சிக்கு பொதுமக்களின் ஆதரவு தொடர்ந்து இப்படியே இருக்குமா என்பது கேள்விக் குறி தான்.

தமிழோவியம் :- கண்ணகி சிலையை மீண்டும் நிறுத்தப்படுவதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில் :- நாட்டில் எத்தனையோ பிரச்சினை இருக்கிறது. இதில் கண்ணகி சிலையை மீண்டும் அதே இடத்தில் வைப்பதால் அந்த இடத்தில் டிராபிக் இடையூறு அதிகமாக இருக்கும். கண்ணகி சிலையை அதே இடத்தில் வைப்பதால் நாட்டில் எல்லாப் பிரச்சினையும் தீர்ந்துவிடுமா?

| |
oooOooo
திருமலை கோளுந்து அவர்களின் இதர படைப்புகள்.   பேட்டி பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |