ஜூன் 01 06
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
அமெரிக்க மேட்டர்ஸ் : நடிப்பின் சிகரம் ஆகிய நாட்டிய பேரொளி
- கணேஷ் சந்திரா [ganesh@tamiloviam.com]
Bookmark in Del.icio.us | | Printable version | URL |

கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக அமெரிக்க மண்ணில் வாசம்செய்து, அடுத்த மாதம் (ஜூலையில்) நாட்டிய பேரொளி தாயகம் திருப்புகிறார்.

Bargavi - Padminiஅவருடைய இந்திய பயணம் சிறப்பாய் அமையவும், அவருடைய கலை மற்றும் நாட்டிய சேவையை கௌரவிக்கும் வகையில் கடந்த சனிக்கிழமையன்று நியுஜெர்சி ப்ரிட்ஜ் வாட்டர் கோயில் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மதிய உணவு வழங்கப்பட்ட பிறகு நிகழ்ச்சி மதியம் 1 மணி அளவில் தொடங்கியது. 'நாட்டியப்பேரொளி'யை பார்க்க வருண பகவான் தீவிரமாய் வந்ததால் முந்நூறு பேர் அமரக்கூடிய அரங்கம் பாதியே நிறைந்திருந்தது.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் IACRFன் தலைவி, திருமதி.பார்கவி சுந்தரராஜன் அவர்கள். சுமுக் பாட்டியா வாழ்த்து பாடலை பாட நிகழ்ச்சி இனிதே தொடங்கியது.

முதல் நிகழ்ச்சியாக நாட்டிய பேரொளி முத்திரை பதித்த சில சினிமா பாடல்களுக்கு, நியுஜெர்சி - டாம்பா (ப்ளோரிடா) வை சேர்ந்த சிறுமியர் / பெண்கள் நன்றாக நடனமாடினர். குறிப்பாக 'மன்னவன் வந்தானடி', 'நலம்தானா' பாடலுக்கு ஆடியவர்கள் வெகு சிறப்பாக ஆடினர்.

அடுத்ததாக நியுஜெர்சி 'சிப்பொனி' இசைக்குழு தலைவர் திரு.ரமணி அவர்கள் 'உன் கண்ணில் நீர் வழிந்தால்' பாடலை பாடினார்.

இதை தொடர்ந்து திருமதி. ராதிகா சந்திரமோகன் அவர்கள், நாட்டிய பேரொளி பற்றிய வீடியோ தொகுப்பை திரையிட்டார்.

வட அமெரிக்க தமிழர்கள் சார்பாக, நியுஜெர்சி தமிழ்ச்சங்க தலைவி திருமதி. மீனா இராவணன் அவர்களும், IACRF நிறுவனத்தின் தலைவி திருமதி. பார்கவி சுந்தரராஜன் அவர்களும் திருமதி. பத்மினி அவர்களுக்கு சால்வை அணிவித்து 'நடிப்பின் சிகரம்' என்ற பட்டத்தை வழங்கினார்கள்.

நிகழ்ச்சிக்கு மூத்த பத்திரிகையாளர் திரு. பிரகாஷ் M சுவாமி, ஃபெட்னா தலைவர் திரு.கிருஷ்ணன், நாடக ஆசிரியர் திருமதி. சுமித்ரா ராம்ஜி ஆகியோர் வந்திருந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

இறுதியாக பேசிய நாட்டிய பேரொளி, அமெரிக்கா வாழ்க்கை நிறைய கற்றுதந்ததாகவும், அன்பையும் ஆதரவையும் அளித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்தார்.

நிறைவான நிகழ்ச்சியை அளித்த IACRF க்கு நன்றிகள் பல.


 

| |
oooOooo
கணேஷ் சந்திரா அவர்களின் இதர படைப்புகள்.   அமெரிக்க மேட்டர்ஸ் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |