ஜூன் 02 2005
தராசு
கார்ட்டூன்
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
டெலிவுட்
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
திரைவிமர்சனம்
உள்ளங்கையில் உலகம்
கவிதை
கார் ஓட்டலாம் வாங்க
ஆன்மீகக் கதைகள்
நையாண்டி
தொடர்கள்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
ஆன்மீகக் கதைகள் : படிப்படியாக இறங்கிய இராவணன்!
- [feedback@tamiloviam.com]
| Printable version | URL |

சிவபெருமானை தன் வீணாகானத்தினால் மயக்கியவன் இராவணன். அரக்கர்குலம் என்றாலும் இசைஞானமிருந்தது. ஆனால் தன் குலத்துக்கேற்ற குணத்தினால் எல்லோரையும் அதட்டி, மிரட்டி, பேறிட்டு அடிமைப்படுத்தியவன் அவன்.

நவகிரகங்களையும் பிடித்தான் அந்த தசமுகன். அவர்களைத் தன் சிம்மாசனத்தில் படிகளாகப் போட்டு வைத்தான். பாவம் ஒன்பது தேவர்களும் ஒவ்வொரு படியிலும் குப்புறப்படுத்துக்கிடந்தார்கள்.

ஒவ்வொரு நாளும் இராவணன், இவர்கள் முதுகில் கால் வைத்து எறினான். அதில் ஒரு பெருமிதம்;கர்வம். நவகிரகங்களே தன் காலடியில் என்ற அலட்சியம்.

ஒரு நாள் நாரதன் அவன் அரண்மனைக்கு வந்தார். தேவர்களின் நிலமையை பார்த்து 'என்ன செய்யலாம்' என்று யோசித்தார். இவனோ அரக்கன். ஆகவே இவன் போக்கிலே போய் இவனை வீழ்த்த வேண்டும் என்று நினைத்தார்.

"இராவணா நீ நவகிரகங்களைப் பிடித்து உன் காலடியில் வைத்திருப்பது வீரம்தான் ஆனாலும்..." என்று இழுத்தார். அதற்கு அவன் "ஆம் அதற்கு என்ன இப்போ ?" என்று கர்ஜித்தான்.

"இராவணா ! அது உன் வீரத்தைக் காட்டினாலும், ஒவ்வொரு முறையும் நீ அவர்கள் முதுகில் ஏறிப்போகிறாய் ! அது உனக்கு பெருமையா ?அவர்கள் மார்பின் மீது ஏறி செல்ல வேண்டாமா ? அது தானே உன் போன்ற வீரனுக்கு அழகு " என்றார்


இராவணன் யோசித்தான். ஆமாம் நாரதர் சொல்வது சரிதான் என்று முடிவு செய்தான்.

அதுவே அவன் வாழ்வுக்கு முடிவாக அமைந்தது. எப்படி ?

நாரதர் சொன்னபடி, இராவணன் உடனே நவகிரகங்களைத் திருப்பி மல்லாத்திப் போட்டான். அவர்கள் மார்பின் மீது காலடி வைத்து ஏறினான். அப்படிப் போகும் போதுதான், சனியின்
பார்வை அவன் மீது பட்டது. சனி பார்வை என்றால் சும்மாவா ?

சீதையை சிறை பிடித்தான், இராம - இராவண யுத்தத்தில் மடிந்தான்.

 

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com - Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |