ஜூன் 3 2004
தராசு
காந்தீய விழுமியங்கள்
திரையோவியம்
உங்களுக்குள்ளே சில புதிர்கள்
சுய சாசனம்
கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன்
வானவில்
மேட்ச் பிக்சிங்
பெண்ணோவியம்
முத்தொள்ளாயிரம்
என்னை எழுதியவர்கள்
பருந்துப் பார்வை
கோடிட்ட இடங்கள்
களம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  தராசு : மந்திரியாக என்ன தகுதி வேண்டும் ?
  - மீனா
  | Printable version |

  தற்போது காங்கிரஸ் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர்களாக உள்ள 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால் அவர்களை நீக்கக்கோரி அத்வானி மற்றும் பெர்னாண்டஸ் தலைமையில் தே.ஜனநாயக கூட்டணியினர் ஜனாதிபதியிடம் மனு கொடுத்து இருக்கிறார்கள். லல்லு மற்றும் பிற அமைச்சர்கள் மீது இவர்கள் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையே! இவர்கள் மீது நடந்துவரும் வழக்குகளின் முடிவுகள் இனி என்னவாக இருக்கப்போகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

  குற்றவாளிகளும், அதிகார துஷ்பிரயோகம் செய்தவர்களும் உயர் பதவி வகிக்கக்கூடாது - ஆள்பவர்கள் அனைவரும் உத்தமர்களாக இருக்கவேண்டும் என்று அனைவரும் எதிர்பார்ப்பது சகஜம். என்றாலும், கடந்த 5 வருடங்களாக இத்தகைய குற்றச்சாட்டுகளையே காங்கிரஸ் அப்போது ஆட்சி செய்த பா.ஜனதா தலைவர்கள் மீது கூறியபோது அதை பா.ஜனதா பெரிதாக எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை. அத்வானி மற்றும் பெர்னாண்டஸ் மீது வழக்குகள் இருந்தபோதிலும் அவர்கள் இருவரும் தொடர்ந்து அமைச்சர்களாகவே பதவியில் இருந்துவந்தனர் (பெர்னாண்டஸாவது ஒரு முறை ராஜினாமா செய்து, மீண்டும் அமைச்சரானார். ஆனால் அத்வானியோ பிடித்த பிடியை விடவே இல்லை). இந்தக் கதையைத் தான் தற்போதுள்ள காங்கிரஸ் அமைச்சர்களும் பா.ஜனதாவிற்கு எதிராகக் கூறப்போகிறார்கள்.

  அரசியல்வாதிகளுக்கும் கிரிமினல்களுக்கும் உள்ளத் தொடர்புகளை மக்களும் அரசியல்வாதிகளும் நன்கு அறிவார்கள். பூலான் தேவி என்னவோ காந்திக்குப் போட்டியாக சத்தியாகிரகம் செய்த தியாகியைப் போல பிரச்சாரம் செய்து அவரை பாராளுமன்றத்திற்கு அனுப்பியது ஒரு பெரிய அரசியல் கட்சி. பூலான் தேவி வழிகாட்டியாக - இவரைப் போன்றே பல கிரிமினல்கள் அரசியலில் புகுந்து தங்கள் இமேஜையே மாற்றிக்கொண்டார்கள். ஆனால் அரசியலைத் தூய்மைப் படுத்தவேண்டும் - கிரிமினல்களுக்கு அரசியலில் இடம் கிடையாது என்கிற நினைப்பு எல்லாக் கட்சிகளுக்கும் தாங்கள் எதிர்கட்சியாக இருக்கும்போது மட்டும் வருவது ஏனோ புரியவில்லை.

  ஒருவர் மக்கள் ஆதரவு பெற்று பாராளுமன்ற உறுப்பினர் ஆகலாம் என்றால் அவர் அமைச்சராவதைத் தற்போதுள்ள சட்டதிட்டங்களைக் கொண்டு தடுக்க முடியாது. கேட்டால் " மக்கள் ஆதரவு பெற்றவன் நான்!!" என்று முழங்குவார்கள். உண்மையாகவே கிரிமினல்கள் மற்றும் ஊழல் பேர்வழிகள் அற்ற அரசு அமையவேண்டுமென்றால் - இப்படிப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிடுவதையே தடை செய்தாக வேண்டும். ஒவ்வொரு கட்சியும் தங்கள் கட்சி சார்பில் தேர்தலில் நிற்கப் போகும் வேட்பாளர்கள் அனைவரும் உண்மையிலேயே ஒரு குற்றமும் செய்யாதவர்கள் என்பதை மக்களுக்கு பட்டவர்தனமாக நிரூபிக்கவேண்டும். தேர்தல் கமிஷன் ஒப்புக்கு வேட்பாளர் பின்னணியைப் பற்றி ஆராய்வதை விட்டுவிட்டு கடுமையாக அவர்கள் மீதுள்ள வழக்குகளைப் பற்றி விசாரிக்கவேண்டும். ஒருவர் மீது ஏதாவது ஒரு கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அவர் தேர்தலில் போட்டியிடத் தகுதியில்லாதவர் என்பதைச் சட்டமாக்க வேண்டும். இதைப் போன்றே நாடாளுமன்றத்தின் எந்த சபையிலும் உறுப்பினர் ஆகாமலேயே நேராக அமைச்சராகிவிடும் சிலரது செயலைத் தடுக்க - அமைச்சராக என்னென்ன தகுதிகள் வேண்டும் என்ற குறைந்தபட்ச நிபந்தனைகளை பட்டியல் போட்டு அதையும் சட்டமாக்க வேண்டும்.

  இதெல்லாம் தாங்கள் ஆட்சி செய்யும் போது சட்டதிட்டங்களைக் காற்றில் பறக்க விட்டுவிட்டு, ஆட்சி மாறும்போது மட்டும் அடுத்தவர்களை குற்றம் சொல்லிக் கொண்டு இருக்கும் அரசியல் கட்சிகளுக்கு எங்கே புரியப்போகிறது ?

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |