ஜூன் 3 2004
தராசு
காந்தீய விழுமியங்கள்
திரையோவியம்
உங்களுக்குள்ளே சில புதிர்கள்
சுய சாசனம்
கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன்
வானவில்
மேட்ச் பிக்சிங்
பெண்ணோவியம்
முத்தொள்ளாயிரம்
என்னை எழுதியவர்கள்
பருந்துப் பார்வை
கோடிட்ட இடங்கள்
களம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  காந்தீய விழுமியங்கள் : கீதை காட்டும் கிருஷ்ணர்
  - ஜெ. ரஜினி ராம்கி
  | Printable version |

  கீதை உபதேசம் மகாபாரதத்தில் கிருஷ்ணனின் பாத்திரப் படைப்பு எப்போதுமே விவாதப்பொருளாக இருந்து வந்திருக்கிறது.  வியாசரின் மகாபாரதத்திலிருந்து எஸ். ராமகிருஷ்ணனின் உபபாண்டவம் வரை கிருஷ்ணர் என்கிற பாத்திரத்தின் தன்னை வெவ்வேறாக இருப்பதை பார்க்க முடிகிறது. இன்னும் சிலர் மகாபாரதத்தில் கீதா உபதேசமே நடக்கவில்லை என்றும் அது பிற்காலத்தில் நிகழ்ந்த இடைச்செருகல் என்றும் குறிப்பிடுகிறார்கள். கோபியர்களின்

  நாயகனாக இருந்த கிருஷ்ணருக்கு கீதா உபதேசம் செய்யும் தகுதி கிடையாது என்றெல்லாம் விவாதம் களைகட்டுகிறது.  ஆனாலும், கிருஷ்ணர்

  கடவுளின் அவதாரம்தான் என்பதில் சந்தேகமில்லை. கிருஷ்ணர் பற்றிய காந்திஜியின் எண்ணங்கள் என்னவாக இருக்கும் என்பதை இவ்வாரம்

  பார்க்கலாம்.

  'வரலாறு காட்டும் கிருஷ்ணரும், கீதை உபதேசம் செய்யும் கிருஷ்ணரையும் நாம் ஒன்றுக்கொன்று குழப்பிக் கொள்கிறோம். கீதையின் கிருஷ்ணர்

  வன்முறை, அகிம்சை என்கிற பிரச்சினைகளை பற்றி விவாதிக்கவில்லை. மற்றவர்களை கொல்வதை அர்ஜூனன் பொதுவான முறையில்

  வெறுக்கவில்லை. தனது சொந்த உறவினகர்களை கொல்வதையே பெறுத்தான்.  ஆதலால் ஒருவன் தனது கடமையை செய்யும் போது உறவினர்களை

  மற்ற மக்களிலிருந்து வித்தியாசமாக நடத்தக்கூடாது என்று கிருஷ்ணர் அறிவுரை கூறினார். போர் தொடுக்கலாமா தொடுக்கக்கூடாதா என்கிற

  பிரச்சினையை கீதையின் காலத்தில் முக்கியமானவர்கள் யாரும் எழுப்பவில்லை. சமீபகாலத்தில்தான் இந்தப் பிரச்சினை எழுந்துள்ளதாக

  தோன்றுகிறது. அந்த நாட்களில் எல்லா இந்துக்களும் அகிம்சையில் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். ஆனால் எது வன்முறை, எது வன்முறையல்ல

  என்கிற பிரச்சினை இப்போது விவாதிக்கப்படுகிறது போலவே அப்போது விவாதிக்கப்பட்டது. நாம் அகிம்சையானது என்று கருதும் பல விஷயங்களை

  வருங்கால தலைமுறையினர் வன்முறையாக கருதக்கூடுமூ.  ஏனென்றால் நாம் பால் அல்லது தானியங்களை உணவாக பயன்படுத்தும்போது உயிரை அழிக்கிறோம். எனவே, அவை அகிம்சையல்லாத விஷயமென்று கருதும் காலமும் வரக்கூடும். கீதையின் காலத்தில் போரிடுவது சாதாரண விஷயமாக இருந்ததால் யாரும் அது அகிம்சைக்கு முரணானது என்று நினைக்கவில்லை. எனவே, கீதையில் போரை ஒரு உதாரணமாக காட்டியிருப்பதில்

  எதுவும் தவறு இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆனால் கீதையை முழுவதுமாக ஊன்றி படித்தால் கீதையில் வரும் கிருஷ்ணன் அகிம்சையின்

  அவதாரமே என்ற முடிவுக்குதான் வருவோம். அர்ஜூனனை போர் செய்யும்படி உபதேசித்தது அவருடைய பெருமைக்கு குறைவு அல்ல. மாறாக,

  அவர் அர்ஜுனனுக்கு வேறேதும் அறிவுரை கூறியிருந்தால் அவருடைய அறிவு போதாது என்று நிரூபணமாகியிருக்கும். அவரை பூர்ண அவதாரம்

  என்று கூறுவதற்கு தகுதி இருந்திருக்காது'  (காந்திஜி சொன்னதாக மகாதேவ தேசாயின் டைரியிலிருந்து, 28.4.1932)

  கீதையில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள் தெய்வீகம் சார்ந்தது மட்டுமல்ல, சாமானிய மனிதர்களின் எண்ணங்கள், ஏக்கங்கள், உணர்ச்சி மீறல்கள் போன்றவற்றையை எடுத்துக் காட்டுகிறது என்பதே காந்திஜியின் எண்ணம். கீதையின் மட்டுமல்லாமல் மகாபாரத கதையில் வரும் பாத்திரப்

  படைப்புகளும் ஒவ்வொரு செய்தியை சுமந்து வருகின்றன. அவற்றிலிருக்கும் தெய்வத்தின் குரலை நாம்தான் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார். 

  'கீதையின் முதல் அத்தியாயத்தில் கொடுக்கப்பட்டுள்ள பெயர்களெல்லாம் மனிதர்களின் பெயர்களல்ல;  குணங்களின் பெயர்களே என்பது என் கருத்து.

  தெய்வீக இயல்புக்கும் அரக்கத்தனத்திற்கும் உள்ள நிரந்த போராட்டத்தை வர்ணிக்க அவை மகாபாரத பாத்திரங்களாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது.

  அஸ்தினாபுரத்தில் பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் இடையே உண்மையாகவே ஒரு யுத்தம் நடந்தது என்பதை நாம் மறுப்பதாகாது. இது

  போன்ற நிகழ்ச்சி ஒன்று எடுத்துக் கொள்ளப்பட்டு அதில் சில உரைகள் இணைக்கப்பட்டுள்ள என்றே நான் கருதுகிறேன். என்னுடைய கருத்து

  தவறாக இருக்கலாம்.'

  பெரும்பாலான மகாபாரதக் கதைகள், அதற்கு பின்னர் பாண்டவர்கள் அஸ்தினாபுரத்தில் சந்தோஷமாக நீண்டகாலம் வாழ்ந்தார்கள் என்கிற சிலைடு போட்டு முடிந்து விடும்.  உண்மையில் கிருஷ்ணரின் கடைசிக்காலம் அவ்வளவு நிம்மதியாக இருந்ததில்லை என்பதை சில புத்தகங்கள் சுட்டிக்

  காட்டுகின்றன. காந்திஜியும் இதை மேற்கொள் காட்டி 'நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என்கிறார்.

  'மகாபாரதம் கவிதையேயன்றி வரலாறு அல்ல. ஒரு மனிதன் வன்முறையைப் பின்பற்றினால் அசத்தியமும் நிச்சயமாக எழும் என்பதையும் கிருஷ்ணர் போன்றோர் அதிலிருந்து தப்பிக்க முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தவறு என்றால் தவறுதான். தவறிழைப்பவர் யாராக இருப்பினும்

  சரி.'

  (Selected Letters)

  நல்ல விஷயங்களை மட்டுமல்லாமல் பொறாமை, துரோகம் போன்ற சாமானியர்களின் குணங்களையும் வெளிச்சம் போட்டு காட்டியதுதான் மகாபாரதத்தை ராமாயணத்திலிருந்து வித்தியாசப்படுத்துகிறது. அதனால்தான் ராமாயணத்தை முதலில் படித்துவிட்டு பின்னர் மகாபாரதத்தையும்  அதனைத் தொடர்ந்து கீதா உபதேசத்தையும் கவனமாக படிக்க வேண்டும் என்கிறார் காந்திஜி.

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |