ஜூன் 3 2004
தராசு
காந்தீய விழுமியங்கள்
திரையோவியம்
உங்களுக்குள்ளே சில புதிர்கள்
சுய சாசனம்
கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன்
வானவில்
மேட்ச் பிக்சிங்
பெண்ணோவியம்
முத்தொள்ளாயிரம்
என்னை எழுதியவர்கள்
பருந்துப் பார்வை
கோடிட்ட இடங்கள்
களம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  முத்தொள்ளாயிரம் : சேரன் மேல் காதல்
  - என். சொக்கன்
  | Printable version |

  பாடல் 15

  புன்னை மரங்களும், இளநீர் நிறைந்த தென்னை மரங்களும், நறுமணம் நிறைந்த மற்ற மலர்களும் செழித்து வளர்ந்து, பூத்துக் குலுங்கும் அழகு நகரம் மாந்தை !

  வளம் மிகுந்த அந்த மாந்தை நகரின் தலைவன் சேரன் !

  அந்த நகரத்துப் பெண் ஒருத்தி, சேரன்மேல் காதல் கொண்டாள். யாருக்கும் தெரியாத ரகசியமாய், அவனை நினைத்து உருகினாள் !

  தினந்தோறும், அவளது ராத்திரிக் கனவுகளில் சேரன் வந்தான், அவளைக் கட்டித் தழுவினான், தன் ஒருத்திக்குமட்டும் சொந்தமான அந்தச் சுகத்தில் அவள் மகிழ்ந்திருந்தாள்.

  ஆனால், இதுபோன்ற விஷயங்களையெல்லாம் ரகசியமாய் வைத்திருப்பது சாத்தியமா, என்ன ? அவளுடைய தூக்க உளறல்களிலிருந்தும், முனகல்கள், செல்லச் சிணுங்கல்களிலிருந்தும், தோழிகளுக்கு விஷயம் புரிந்துவிட்டது !

  ஆகவே, அவள் காலையில் விழித்தெழுந்ததும், சிநேகிதிகள் அவளைச் சூழ்ந்துகொண்டார்கள். 'என்னடி ? கனவில் உன் காதலன் வந்தானா ? என்னவெல்லாம் செய்தான் ? எங்களுக்கும் சொல்லமாட்டாயா ?', என்றெல்லாம் அவளை கேலி செய்து விரட்டினார்கள்.

  இதைக் கேட்ட அந்தப் பெண், ஆச்சரியப்படுகிறாள், 'அந்தச் சேரன் என் கனவில்மட்டும்தானே வந்தான் ? அந்தச் சேதியை இவர்கள் எப்படித் தெரிந்துகொண்டார்கள் ?'

  O

  புன்னாகச் சோலை புனல்தெங்கு சூழ்மாந்தை
  நன்னாகம் நின்றுஅலரும் நல்நாடன், என்ஆகம்
  கங்குல் ஒருநாள் கனவினுள் தைவந்தான்
  என்கொல் இவர்அறிந்த வாறு !

  (புன்னாகம் - புன்னை மரம்
  புனல் - நீர் (இங்கே, இளநீரைக் குறிப்பது)
  தெங்கு - தென்னை மரம்
  நன்னாகம் - நறுமண மலர்களைக்கொண்ட
  அலரும் - பூத்துக் குலுங்கும்
  ஆகம் - உடல்
  கங்குல் - இரவு
  தைவந்தான் - தடவினான்)


  பாடல் 16

  வறுமையில் வாடும் ஏழைகள், தங்களைவிட வசதியாய் வாழ்பவர்களிடம் உதவி கேட்டுச் செல்ல நேர்கிறபோது, அவர்களின் மனம் இருதலைக் கொள்ளி எறும்பைப்போல தத்தளிக்கும்.

  ஒருபக்கம், வீட்டின் நிலைமை - அதை நினைக்கிறபோது, 'யாருடைய காலைப் பிடித்தாலும் பரவாயில்லை, கையேந்திப் பிச்சை கேட்டால்கூட தப்பில்லை, எப்படியாவது இந்த வறுமைக் கொடுமையைப் போக்கிவிடமுடிந்தால் போதும் !', என்று மனம் சொல்லும்.

  ஆனால், அதே மனதால், தன்னுடைய தன்மானத்தையும் விட்டுக்கொடுக்கமுடியாது, அந்தக் கோணத்தில் யோசிக்கிறபோது, 'அந்தக் காலத்தில், நான் எப்படியெல்லாம் கௌரவமாய் வாழ்ந்தவன் ! இன்றைக்கு, நான் இன்னொருவரின் தயவை எதிர்பார்த்துக் கையேந்துவதா ? அவமானப்பட்டுத் திரும்புவதா ? சேச்சே, வெட்கம், வெட்கம் !', என்றெல்லாம் வீர வசனங்கள் தோன்றும்.

  இப்போது, மனிதன் எதைக் கேட்டு நடப்பது ? பழைய கௌரவத்தை நினைத்துக்கொண்டு பட்டினி கிடப்பதா, அல்லது எல்லாவற்றையும் மறந்துவிட்டு, வசதியுள்ளவர்களின்முன் கூனிக் குறுகி நின்று, பிச்சை வாங்கிக்கொள்வதா ?

  தர்ம சங்கடமான நிலைமைதான் ! இப்படியும் முடிவெடுக்கமுடியாமல், அந்தப் பக்கமும் துணிந்து செல்லமுடியாமல், முன்னே நடப்பதும், பின்தங்குவதும், மறுபடி பத்துத் தப்படி நடப்பதும், தணிந்து பின்வாங்குவதுமாக, பணக்கார மாளிகைகளை நோக்கிய அந்த ஏழையின் பயணம், தட்டுத்தடுமாறித் தொடரும் !

  நிச்சயமில்லாத இந்தத் தடுமாற்றத்தை, ஒரு காதலியின்மீது ஏற்றிச் சொல்கிறார் முத்தொள்ளாயிரக் கவிஞர் !

  'தேர்ந்தெடுத்த மணிகளையும், தங்க ஆபரணங்களையும் அணிந்தவன் சேரன் ! கம்பீரமான மார்பில் மாலை அசைந்தாட, அவன் தெருவில் வந்தான். அந்த அழகைப் பார்ப்பதற்காக, நான் ஓடோ டி வந்தேன் !', என்கிறாள் ஒருத்தி.

  அப்புறம் ? மன்னனைப் பார்த்தாளா, இல்லையா ?

  'ம்ஹும், இல்லை, பார்க்கவில்லை !', என்கிறாள் அவள்.

  'ஏன் ? என்னாச்சு ?'

  'காதல் என்னை முன்னோக்கித் துரத்தியது, ஆனால், என் நாணம் என்னைப் பின்னோக்கித் தள்ளி, வாசல் கதவையும் அடைத்துவிட்டது !'

  'அச்சச்சோ, அப்புறம் என்ன ஆனது ?'

  'ஒன்றும் ஆகவில்லை !', என்று பெருமூச்சுடன் சொல்கிறாள் அவள், 'பெரும்பணக்காரர்களிடம் உதவி கேட்டுச் செல்லும் ஏழைகள், போவதா, வேண்டாமா என்கிற தயக்கத்தில் முன்னும், பின்னும் நகர்ந்து, திரும்பி அலைவதுபோல, என் மனது, அவனை நோக்கிச் சென்றது, வெட்கப்பட்டு நின்றது, திரும்பியது, மீண்டும் முன்னே சென்றது, பின்னே வந்தது, இப்படியே ஊசலாடிக்கொண்டு நிற்கிறது !'

  O

  ஆய்மணிப் பைம்பூண் அலங்குதார்க் கோதையைக்
  காணிய சென்று கதவுஅடைத்தேன் நாணிப்
  பெருஞ்செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் போல
  வரும்செல்லும் பேரும்என் நெஞ்சு.

  (ஆய்மணி - தேர்ந்தெடுத்த மணிகள்
  பைம்பூண் - தங்க ஆபரணம்
  அலங்கு - அசையும்
  தார் - மாலை
  நல்கூர்ந்தார் - வறியவர்கள்
  பேரும் - பின்வாங்கும்)

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |