Tamiloviam
ஜூன் 07 2007
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
அண்ணாச்சி உலகம் என்னாச்சி ? : சிக்கன் குனியாவா ? சிவாஜியா
- [feedback@tamiloviam.com]
| | Printable version | URL |

தலீவர் "கறுப்பு பணத்தை" ஒழிக்க பாடுபடறாரு அதான் கதை

மழையில் பிரிந்திருந்த நாயர்கடை கூரையை சரிசெய்துகொண்டிருந்தனர்.

"என்ன நாயர்? ஒன் கூரையும் போச்சா?" அண்ணாச்சி வந்து பெஞ்சில் அமர்ந்தார்.

"எந்து செய்யாம் அண்ணாச்சி? சரிக்கும் மழை."

"ஆமாப்பா ஒனக்காவது கூரையோட போச்சு அங்க ரெண்டு புள்ளைங்க சுவர் இடிஞ்சு விழுந்ததுல எறந்தே போச்சுப்பா. ரெம்ப சோகம்."

"கேள்விப்பட்டு அண்ணாச்சி. பாவம்"

"இங்க மழ வெளுக்குது வடக்க வெயில் காய்க்குது. உத்திரப் பிரதேசத்துல தெனம் ரெண்டுபேர் எறந்து போரானுங்க. அவ்வளவு வெயில்."

"ஓமன்ல பயங்கர சூறாவளி. இதுல நம்ம நாட்டுக்கார ஆள் ஒருத்தர் எறந்துட்டார்."

"இந்தியரா?"

"மலையாளி. நாட்டுகார்."

"ஓகோ."

"இன்னும் ஆள்கள் மிஸ்ஸிங் அண்ணாச்சி."

"இயற்கை மாறிகிட்டே வருது. ஜி8 கூட்டத்துல இதுதான் ஹாட் டாப்பிக். ஆனாலும் பணக்கார நாடுங்க இந்தியாவையும் சீனாவையுமே குறை சொல்லி தப்பிக்கிறானுங்க."

"அதெப்டி?"

"இந்தியா சீனாவோட வளர்ச்சியினால நம்மோட எரிசக்தி, மின்சார சக்தி பயன்பாடெல்லாம் அதிகமாகுதில்ல? இதனால வரக்கூடிய சுற்றுச் சூழல் மாசும் அதிகரிச்சிருக்கு."

"ஓமம் அண்ணாச்சி. நம்ம ஊர்ல எந்தா டிராபிக். மும்பெல்லாம் சைக்கிள் ஓட்டியாலே பெரிய விஷயம். இப்பா 50 ஆயிரத்துக்கு பைக் வச்சாதன்னே உண்டு."

"ஆமா. இதுல என்ன காமெடின்னா, மாசு வெளியாகுறத தடுக்க மத்த நாடுகள விட சீனாவும் இந்தியாவும் அதிகமா முயற்சி செஞ்சிருக்குது. இன்னொரு விஷயம், மக்கள் தொகைக்கும் சக்தி பயன்பாட்டுக்கும் விகிதம் பாத்தா நாம ரெம்ப குறைவாத்தான் இருக்கோம். ஆனா நம்ம வளர்ச்சியாலத்தான் பிரச்சன நடக்குதுண்ணு இவனுங்க சொல்றானுங்க."

"ஹா ஹா. அந்தா மணி வந்து."

மணி ஸ்கூட்டரிலிருந்து பைக்குக்கு மாறியிருந்தான். இரண்டு நாள் பழசான மாலையுடனும் பாதி உதிர்ந்த சந்தனத்துடனும் பளபளக்கும் பைக் வந்து நின்றது.

"அண்ணாச்சி! புது வண்டி எப்டி?"

"ஸ்கூட்டர்தான் சேஃப்டே? என்ன திடீர்னு."

"நம்மாளுக்கு ஸ்கூட்டர் பிடிக்கல. அது இருக்கட்டும் டிரெய்லர் பாத்தியளா?"

"ம். பாத்தேன். ஆளு எளமையா இருக்காப்ல. ஆனா கொரலுக்கு மேக் அப் போட முடியாது பாத்தியா?"

"என்ன சொல்லுதிய. ரங்கா பில்லா பாட்சா கணக்குல இருக்காரு."

"அதுசரி. நீ உடுவியா. இவ்வளவு செலவு செஞ்சி படம் எடுக்கணுமா? கோடிக்கணக்குல செலவு செஞ்சு பொழுதப் போக்குற அளவுக்கு தேவை என்ன?"

"அண்ணாச்சி புரியாமப் பேசாதிய. இங்லீஸ் படமெல்லாம் தமிழ்ல வந்து மக்களோட ரசனை மாறிப்போச்சில்ல."

"ரசனை மாறிடுச்சா? பருத்தி வீரன், மொழின்னு சாதாரண பட்ஜெட் படமெல்லாம் நல்லாத்தானே ஓடுது."

"அண்ணாச்சி என்னதான் ஒடம்புக்கு நல்லதுண்ணாலும் நாயர்கடையில பாவக்கா ஜூஸா விப்பாரு?"

rajini-in-sivaji"அடடா? அதுசரி... சங்கர் வழக்கம்போல உள்ள கதையத்தான் சொல்ல வர்றாருன்னு நினைக்கிறேன்."
"அது அவரோட ஸ்டைலு. அதுல நம்ம சூப்பர் ஸ்டைலையும் சேத்தா கள கட்டும்ல. முதல்வன விட தலைவருக்கு இதுதான் சூப்பர் ஸ்டோரி. The Boss - Bachelor of social service."

ஏதோ எல்லாருக்கு கல்வி வேணும்ன்னு இதுதான் கதை ஒன் லைனர் பேசிகறாங்க அப்படியா மணி ?

அதில்ல அண்ணாச்சி, தலீவர் "கறுப்பு பணத்தை" ஒழிக்க பாடுபடறாரு அதான் கதை. அது போக படத்தோட வெள்ளி விழாவில இந்த படத்துல வாங்கின சம்பளம்  பத்தி ஒரு சுவாரஸ்ய அறிக்கையும் விடப்போறாறாம்.

"அது சரி ஒரு வழி பண்ணாம விடமாட்டிய? பாண்டிச் சேரில தியேட்டர்ல கலாட்டா செய்யமாட்டோம்னு ரஜினி ரசிகரெல்லாம் வாக்கு குடுத்திருக்காங்களாம். இதுக்கு அரசு தலையீடு வேற. அநியாயமா தெரியல?"

"அண்ணாச்சி.. வேண்டாம்...இந்த வாரம் என்ன செய்தி சொல்லுங்க."

"இலங்கைல திடீர்னு ஒரு குண்டப் போட்டானுங்க."

"அடடா விமானப் படையா?"

"இல்லப்பா இது நிஜக் குண்டு இல்ல. கொழும்புல தற்காலிகமா தங்கியிருந்த பாவப்பட்ட தமிழர்கள் சிலர ராவோட ராவா பஸ்ல ஏத்தி வடக்குக்கும் கிழக்குமா அனுபிட்டானுங்க. ஒரு 500பேர் கிட்ட. அப்புறம் பலத்த எதிர்ப்பு கெளம்பிட்டதால இத நிறுத்திட்டானுக. இப்ப இது எப்டி நடந்துச்சுன்னு தெரியாதமாதிரி என்னெல்லாமோ பண்ணிப்பாக்குறானுவ."

"ஓகோ."

"சரி நம்ம ஊர் அணுகுண்டப் பத்தி கேக்கவேயில்லையே."

"அதிமுக கலாட்டாவா."

"அதுல திமுக கலாட்டாவும் இருக்கே."

"சொல்லுங்க."

"முதல்ல கலைஞர் அவரோட பிரச்சனைகள்லேந்து விடுபட ஒரு விசயம் கெடச்சிருக்குது. நியாயமா பாத்தா எலக்சன் கமிஷனுக்கு ஜெயலலிதா சொத்த கணக்குல காட்டாத விபரத்த தெரிவிக்கவேண்டியது இவங்களோட கடமை. இதச் செய்யாம 'ஆலோசிக்கிறோம்'னு அறிக்கை விடுறது சும்மா பரபரப்புக்குத்தான்."

"எதிர்பார்த்த பலன் கிடச்சுட்டுதே?"

"ஆமா. இப்ப அதிமுக ஊரெல்லாம் கலாட்டா பண்ணி விழுப்புரத்துல ஒரு இன்ஸ்பெக்டர எரிச்சதா கேஸ் விழுந்துருக்கு."

"அம்மா என்ன சொல்றாங்க."

"வழக்கம்போல என்ன ஒண்ணும் செய்ய முடியாது. கொடநாடு எஸ்டேட்டுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லண்ணு சவால் விட்டிருக்காங்க. அடுத்து புதுத் தலவலி வந்திருக்கு ஜெக்கு."

"புதுத் தலவலியா?"

"ஆமா. 2001 எலக்சன்ல 4 எடத்துல போட்டி போட்டதுக்கு நடவடிக்கை எடுக்கணும்னு உயர்நீதிமன்றம் தீர்ப்பு சொல்லியிருக்குது."

"கஷ்டகாலந்தான்."

"ஆமா. மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தல்ல போட்டி போடுற காங்கிரஸ், அதிமுக வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் குடுத்திருக்குது. வேட்பு மனு குடுக்குறதுக்கு பலத்த ஆள் கூட்டத்தோட வந்தாங்களாம். இது விதி மீறலாம்."

"சுத்த அரசியல் புரியாதவங்களாயிருக்காங்களே அண்ணாச்சி."

"நம்ம ஊர்ல இந்த மாதிரி வெட்டிச் செலவெல்லாம் கொறச்சா எத்தன நல்லது செய்யலாம்? இன்னுமொரு அதிர்ச்சி தீர்ப்பு இந்த வாரம் வந்திருக்கு. தேவாரம் திருவாசகம் பொதுவுல பாடுறதுக்கு தடை விதிச்சிருக்காங்க."

"அடப்பாவமே இன்னும் விடிவு வரலியா அதுங்களுக்கு?"

"ஆகம விதிப்படி தேவாரம் திருவாசகத்த கோவில்கள்ல குறிப்பிட்ட நேரத்துலதான் பாடணுமாம்."

"கடவுள் கோவில்லதான் இருக்கார்னு யாரு சொன்னா?"

"ஆமா மதவாதிங்க செய்யுற அநியாயத்துக்கு கடவுள் கோவிலவிட்டு வெளியேறி ரெம்ப வருசமாயிருக்கும்பா மணி."

"நாயர் ஒங்க ஊர்ல என செய்தி?"

"இங்கேர்ந்து சிக்கின் குனியா கேரளா போயி மணி. ஊரெல்லாம் வேகமாயிட்டு பரவுது."

"ஆமா. டெல்லியிலேயும் இங்க தமிழ்நாட்டிலேயுங்கூட பரவியிருக்குது. இதுக்கெடையில நம்ம ஊர் மருந்துக்கடைகள்ல மக்கள் சிக்குன் குனியா மருந்துன்னு எதையோ விக்கிறாங்களாம். இப்டி தன்னிச்சையா மருந்து குடுக்குறது தப்புன்னு அரசு எச்சரிக்கை குடுத்திருக்குது. இன்னொரு செய்தி தெரியுமா நாயர். குருவாயூர் கோவில் வயலார் ரவியோட மகன்கிட்ட மன்னிப்பு கேட்டிருக்குது. அவர் வந்துபோனப்போ 'சுத்தம் செய்யும்' சடங்கு செஞ்சதுக்காக. இப்ப கோவில் விதிமுறைகள மாத்தலாமான்னு யோசன செய்யுறாங்களாம். குருவாயூரப்பனுக்கு ஏதாச்சும் மனக்கஷ்டம் இருக்கான்னு 'தேவ பிரசன்னம்' நடத்தப் போறாங்களாம். "

"கோவில்ல கும்பிடதுக்கு எல்லாருக்கும் அனுமதி வேணும் அண்ணாச்சி."

"சரிதான்! ஆனா வேடிக்க பாக்குறதுக்கு கோயிலுக்குப் போறவங்கள என்ன செய்யச் சொல்லுற."

"அண்ணாச்சி கொயில்ல வேத்துமதக்காரங்க வேடிக்கபாக்கத்தான் போறாங்கன்னு சொல்ல முடியுமா? அதுபோல நம்ம மதக்காரங்க வேடிக்க பாக்கலைன்னும் சொல்ல முடியுமா? கடவுள் முன்னாடி எல்லாரும் சமம் இல்லியா? கோவில் மட்டுமா கடவுளுக்கு சொந்தம்?"

"ஆழமா தத்துவமெல்லாம் பேச ஆரம்பிச்சிட்ட மணி. என்னாச்சு?"

"படம் வருதுல்லே அப்படிதான் சமத்துவம் பேசுவாங்க அண்ணாச்சி."

| | |
oooOooo
                         
 
அவர்களின் இதர படைப்புகள்.   அண்ணாச்சி உலகம் என்னாச்சி ? பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2007 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |