ஜூன் 08 06
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
சிறப்பு ஆசிரியர் : தமிழோவியத்தில் பினாத்தல்
- சுரேஷ் பாபு
Bookmark in Del.icio.us | | Printable version | URL |
"நான் இணையத்தில் தடுக்கி விழுந்ததால்-விபத்து எனக்கல்ல, உங்களுக்கு என்று ஆனது !"

அம்புலிமாமா கதைகளில், ராஜாவுக்கு அழகான மகள் இருப்பாள். அவளுக்குக் கல்யாணம் செய்துவைக்க, ராஜா ஒரு போட்டி வைப்பார் - ஜல்லிக்கட்டு மாட்டை அடக்குவது, தொந்தரவு செய்யும் ராட்சஷனைக்கொல்வது.. இது மாதிரிப்போட்டிகள்.
 
எல்லாக்கதைகளிலுமே, போட்டியில் வெல்வது ஒரு அழகான ராஜகுமாரனாகத்தான் இருப்பான்! நான் யோசித்ததுண்டு, அழகான ராஜகுமாரன் இல்லாமல், நாட்டை வளைக்க திட்டம் போடும் எதிரி நாட்டு தளபதியோ, ஒரு அவலட்சணமான கிழவனோ - ஏன் ஒரு பெண்ணோ அந்தப்போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் அந்த ராஜா மகளைத் திருமணம் செய்துவைத்திருப்பாரா என்று!
 
இந்த நீண்ட நாளைய குழப்பம், இப்போது தேன்கூடு - தமிழோவியம் நடத்திய போட்டி முடிவுகள் மூலம் விலகியது. அந்த ராஜா, தன் விதியை நொந்துகொண்டு, அறிவித்துவிட்டோமே - வேறு வழி இல்லை என்று ஒத்துக்கொண்டிருப்பார் - தமிழோவியம் பொறுப்பாளர்கள் போல!
 
இன்னொரு வகையில் பார்த்தால், தமிழோவியத்தின் புகழுக்கு, ஒரு வாரம் யார் சிறப்பாசிரியராக இருந்தாலும் பங்கம் வந்துவிடாது என்ற தன்னம்பிக்கை என்றும் கொள்ளலாம்.
 
எப்படி இருந்தாலும், இதழியலுக்கோ, ஊடகங்களுக்கோ எந்த சம்பந்தமும் இல்லாத நான் தமிழோவியத்தின் இந்த இதழில் சில பத்திகளை எழுதுவது, என்னைப் பொறுத்த வரை பெருமைக்கும் ஆச்சரியத்துக்கும் உரிய நிகழ்வே.
 
இரண்டு வருடங்களுக்கு முன் இணையத்தில் தடுக்கி விழுந்தபோது, தமிழில் எழுத, படிக்க முடிவதே ஆச்சரியமாக இருந்தது. நானும் எழுத ஆரம்பித்ததை, என்னையும் படிக்கும் வாசகர்கள் - எல்லாம் இன்னும் கூட என்னால் நம்ப முடியவில்லை. அதற்குக் காரணம், எழுத்தாளர்கள் மேல் நான் கற்பனை செய்திருந்த ஒளிவட்டம்.  
 
Suresh Babu Familyஎழுதலாம் என்ற ஆசை முன்பே வந்திருந்தாலும், எழுதியபின் முழுப்பிடித்தம் இல்லாமை, தகவல்களை, கருத்துப்பிழைகளை சரிபார்க்க படிக்க வேண்டிய புத்தகங்கள், பிழைதிருத்தி மீண்டும் எழுத சோம்பேறித்தனம், - எழுதுவது கஷ்டமான வேலை என்ற பிம்பத்தையே கொடுத்தன. 
 
கணினி வந்ததும் திருத்துவது சுலபமானது. முழுப்பிடித்தம் வராவிட்டாலும் பதிப்பிக்க சொந்த வலைப்பூ என்பது இன்னும் கொஞ்சம் சுதந்திரம் கொடுத்தது. இணையத்தால் கனிந்த நண்பர்கள், மின்னஞ்சலில் நான் அனுப்பும் கதைகளைப் படித்துப் பார்த்து, கருத்துப்பிழைகளைத் திருத்திக் கொடுத்தனர். என் கஷ்டங்கள் எல்லாம் காணாமல் போயின.
 
நான் இணையத்தில் தடுக்கி விழுந்ததால் - விபத்து எனக்கல்ல, உங்களுக்கு என்று ஆனது!
 
மற்றபடி, என்னைப்பற்றி, சொல்லிக்கொள்ள அதிகம் இல்லை - இயந்திரப் பொறியாளர், ஆசிரியர் பணி -From EiffelTower கல்லூரி ஆசிரியர் போல அல்ல - இயந்திரங்கள் இயங்கும் விதம், தொழில்நுட்பம் போன்றவற்றை பராமரிக்கும், பழுது பார்க்கும் சக  பொறியாளர்களுக்கும்  உபயோகிப்பாளர்களுக்கும் விளக்கும் ஆசிரியர் பணி. 
 
அமீரகத்தில் வாசம், மனைவி, இரு பெண் குழந்தைகள். (நோபல் பரிசு வாங்கிய பிறகுதான் மனைவி தன்  புகைப்படத்துக்கு அனுமதி அளிப்பாராம் :-)
 
இந்தப்புகைப்படம், நான் எடுத்ததில் எனக்குப் பிடித்தது - எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதை நிழலே காட்டுகிறது பாருங்கள் :-)

தமிழோவியம் எனக்களித்த வாய்ப்பிற்கும், சுதந்திரத்துக்கும் மிக்க நன்றி. (சுதந்திரத்தை அத்துமீறிப் பயன்படுத்தவில்லை என்றே நினைக்கிறேன்.)

| | | | |
oooOooo
சுரேஷ் பாபு அவர்களின் இதர படைப்புகள்.   சிறப்பு ஆசிரியர் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |