ஜூன் 08 06
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
சிறப்பு ஆசிரியர் : தமிழ் வலைப்பதிவுகளில் நல்ல நகைச்சுவை எங்கே கிடைக்கும்?
- சுரேஷ் பாபு
Bookmark in Del.icio.us | | Printable version | URL |
"இதைப் படிக்கறதுக்கும், புரிஞ்சுக்கறதுக்கும் எல்லாத்துக்கும் மேலே சிரிக்கறதுக்கும், கொஞ்சம் மண்டைலே மேட்டர் வேணும்."
 
சரியான கேள்வி, நல்ல கேள்வி. (இது என் ஆசிரியர் அனுபவத்துல வர்ற முதல் பதில். மாணவர்கள் ரொம்பக்கஷ்டமா ஏதாவது கேள்வி கேட்டுட்டாங்கன்னா, கொஞ்ச நேரம் வாய்தா வாங்கறதுக்காக இப்படி ஒரு பதிலை முதல்லே போட்டுட்டு அப்புறமா யோசிக்க ஆரம்பிச்சுக்கலாம்)
 
இதை நம்மாலே எதிர்பார்க்கவே முடியாதுன்றதுதான் சரியான பதிலா இருக்கும். இந்தக்கேள்விக்குப் பதில் சொல்லணும்னா, முதல்லே நகைச்சுவைன்னா என்ன, நல்ல நகைச்சுவைன்னா என்னன்னு வரையறுக்கணும், இல்லையா?
 
humour.com உக்குபோனா, ஆயிரத்தெட்டு வகையில நகைச்சுவையப் பிரிச்சி பீராய்ஞ்சிருக்காங்க. ஒரு நல்ல ஜோக் படிக்கலாம்னு உள்ள போனா, jokes-> animal jokes-> elepahant jokes -> elephant and the ants joke-> elepahants and tha ants jokes in african jungle னு தேர்ந்தெடுத்து தேர்ந்தெடுத்தே சீரியஸ் ஆயிடுவோம். அரை மணி நேர செலெக் ஷன் பண்ண பிறகு ஒரு ஏற்கனவே கேள்விப்பட்ட ரெண்டு வரி ஜோக் வரும். இதுக்கா இவ்வளோ நேரம் கஷ்டப்பட்டோம்னு தோணிடும்..
 
அதனால, எனக்குத் தெரிஞ்ச அளவிலே, எல்லா நகைச்சுவையையும் ஒரு மூணு பிரிவிலே பிரிக்கிறேன்.
 
Vadiveluபெரும்பாலும் நாம சிரிப்பது அடுத்தவர் செலவிலேதான். வாழைப்பழத் தோலில் வழுக்கி விழுந்தவன் வலியும், லாரல் தப்பு பண்ண ஹார்டி அடி வாங்கறது, உயிருக்குப் பயந்து ஓடற ஜெர்ரி,  மேண்டிலை நசுக்கிட்டு அப்பாவித்தனமாக அடிவாங்கும் செந்தில், பேதி மாத்திரை சாப்பிட்டவன் படையெடுக்கறது.. சொல்லிக்கொண்டே போகலாம். அடுத்தவன் வலியிலே சிரிக்கறது ரைட்டா தப்பா? தெரியலையேப்பா!
 
இன்னோரு வகை புத்திசாலிகளின் நகைச்சுவை. Satire, parodyன்னு பல வகை சொல்றாங்க. இதைப் படிக்கறதுக்கும், புரிஞ்சுக்கறதுக்கும் எல்லாத்துக்கும் மேலே சிரிக்கறதுக்கும், கொஞ்சம் மண்டைலே மேட்டர் வேணும். அது மட்டுமில்ல, இந்தச் சிரிப்பும் அடுத்தவன் செலவிலேதான்! இதுலே ஒரு சிக்கல், பாதி நேரம், யாரைப்பத்திக் கிண்டல் அடிக்கறாங்கன்னு புரிஞ்சுக்கறதுக்கே செலவாயிடும்!
 
மூணாவது வகை, Branded நகைச்சுவை; கவுஜர் எளுதறது கவுஜ என்று சொல்லப்படுவதுபோல, நகைச்சுவை எழுத்தாளன் எழுதுவது நகைச்சுவை. எஸ் வி சேகர் மேடைக்கு வந்து twinkle twinkle little starனு சொன்னாலும் விடாம சிரிச்சுகிட்டிருப்பாங்க. (Dennis the Menace-இல் எனக்கு ரொம்பப் பிடிச்ச ஒரு ஸ்ட்ரிப் - டிவில ஒரு நிகழ்ச்சி ஓடிக்கிட்டிருக்கு, காமெடியாம், அவங்களே பின்னடி சிரிச்சுகிட்டிருக்காங்க, அதைப் பாத்துட்டு டென்னிஸ், இந்த சிரிக்கிறவங்க எந்தப் புரோக்ராமப் பாத்துச் சிரிக்கறாங்க? அந்தப் புரோகிராம நாமளும்பாக்கலாமே?ன்றான்..) நாகேஷ் ஸ்க்ரீன்லே வந்தாலே போதும், சிரிக்கலாம். மனோரமாவைப் புக் பண்ணிட்டா, நகைச்சுவை சீரியல் தயார்!
 
இந்த மூணு விதமான நகைச்சுவையுமே, வலைப்பதிவுகள்லேயும் இருக்குன்னாலும்,  இங்கே வேற மாதிரி வகை பிரிக்கணும்.
 
Good Humourகார்ட்டூன் போடறவங்க, அனிமேசன் பிலிம் காட்டறவங்க, கொசுவத்திச்சுருள் ஓட்டறவங்க, அரசியலக் கிண்டல் அடிக்கறவங்க, வலைப்பதிவர்க்குள்ளே உள்குத்து வெளிக்குத்து உடறவங்க, சினிமாவை அலசிக் காயப்போடறவங்க, இலக்கியவாதிகளை உடையல் உடறவங்க, டிவி, பத்திரிக்கைங்களப் போட்டு தாளிக்கறவங்க.. 
 
இந்தக்கார்ட்டூன் போடறவங்க கிட்டே என்ன பிரச்சினைன்னா,  சில கார்ட்டூன்கள் என் போல மண்டைக்கு புரியாம போகுது! அவங்க லெவல் அதிகம்ன்றதாலும், கார்ட்டூன் போடறவங்க பெரும்பாலும் இலங்கை அரசியலை வச்சுப்போடறதாலும் இருக்கலாம்.
 
அனிமேசன் பிலிம் எடுக்கறதுக்கும் காட்டறதுக்கும் நேரம் ரொம்ப ஆகும். நான் ஒரு நாலஞ்சு தயார் பண்ணி இருக்கேன். செல்லக்கிளி, சிவாஜி போல எல்லாம் சினிமாவையும் அரசியலையும் வச்சுத்தான்.
 
கொசுவத்திச் சுருள் ஓட்டறவங்க கிட்டே இருந்து எப்போ நகைச்சுவை கிடைக்கும்ணே சொல்ல முடியாது. டிபிஆர் ஜோசப், துளசி அக்கா, மாதிரி ஆளுங்க சீரியஸாவும் எழுதுவாங்க, சமயத்துல அவங்க கொசுவத்தி கச்சா முச்சான்னு சிரிக்க வைக்கும். டிபிஆர் ஜோசப்பின் கவுண்டமணி செந்தில் காமடி, தொடராவே வந்தது. துளசி அக்கா மதுரை ஆதீனம் சொல்லிட்டாரேன்னு அவங்க புருஷன் கிட்டே ஒரு கிரீடத்துக்கும் 200 பவுன் நகைக்கும் இன்டெண்ட் வச்சாங்களே, மறக்க முடியுமா?
 
இளவஞ்சி கொசுவத்திச் சுருள் ஓட்டினாருன்னா சிரிச்சுகிட்டே படிக்க ஆரம்பிச்சு, அழுதுகிட்டே முடிக்கலாம். அப்படி ஒரு தனி வழி அவருது. ஒரு தனிப்பதிவுன்னு சொல்ல முடியாது, எல்லாமே இதே ரகம்தான்.
 
கைப்புள்ள போட்ட தடிப்பசங்க கொசுவத்தியும் அவங்க வீட்டுக்குள்ளேயே இருந்து பாக்கறா மாதிரி இருக்கும். சிரிப்புக்கு நான் காரண்டி!
 
அரசியலை கிண்டல் அடிக்கறவங்கள்லே முக்கியமான ஆளு இட்லிவடை. அதிமுக ஆட்சியிலே சட்டசபைய ப்பத்தி அவர் அடிச்ச கிண்டல் - அதென்ன சொல்வாங்க - ஆங் - பசுமரத்தாணி போல கெடக்குது! 

பாண்டேஜ் பாண்டியன் சொல்ற மேட்டரையெல்லாம் நேர்ல அரசியல்வாதிங்க கிட்ட போய் சொன்னா, அவங்க ஆசீர்வாதத்தோட ஆம்புலன்ஸ் செலவு மிச்சமாகும்!
 
அரசியலைக்கிண்டல் அடிக்கறதுக்குன்னே கட்சி தொடங்கி, உண்மையான கட்சிப்பகைய தொடர்ந்து மெயிண்டயின் செய்யறாங்க -  முகமூடிராமநாதன்தேவ், பொன்ஸ்ஜொள்ளுப்பாண்டி, நாமக்கல் சிபி போன்ற பதிவர்கள்..
 
இது தவிர எப்பவாச்சும் கிண்டல் பதிவு போடறவங்கள்லே, மாயவரத்தான், முத்து (தமிழினி), எனர்ஜியைத் தேக்கிவச்சுப்போடறதாலே சிரிப்பு வரும்.
 
வலைப்பதிவர்க்குள்ளே உள்குத்து, வெளிக்குத்து, நடுக்குத்து போடற ஆளுங்க ஒண்ணு ரெண்டு இல்ல! ஏறத்தாழ எல்லாரும் ஆரம்பிக்கும்போதே இதையும் கத்துக்கிடறாங்க! இது ஒரு கத்தி மேலே நடக்கிற சமாச்சாரம்ன்றதாலே, யாரைக்கிண்டல் அடிச்சாங்களோ, அவங்களுக்கும் பிடிச்சா மட்டுமே நல்ல நகைச்சுவை வகையிலே சேரும். இதுக்கு ஒரே சூப்பர் உதாரணம் தான் - ஐகாரஸ் பிரகாஷின் கசடதபற கவிதையும் அதற்கான பின்னூட்டங்களும்.
 
சினிமாவை அலசி ஆராய்ந்து பிழிந்து காயப்போட்டு, இஸ்திரி செய்யும் பதிவுகள்லே சில நேரம் நகைச்சுவை இருக்கலாம். ஆட்டோகிராபை பெண்டு கழட்டிய டைனோவின்  திண்ணைக்கட்டுரை, பாஸ்டன் பாலாவின் தவமாய்த் தவமிருந்து ஆகியவை நல்ல உதாரணங்கள்.
 
இலக்கியவாதிகளை உடையல் உடறவங்க வரிசையிலே ஆசீப் மீரானின் "ஒரு வட்டாட்சியாளரின் நாட்குறிப்பு" முதல் இடம். அவருடைய பல பதிவுகளும் கவுஜர்களையும் கவுஜகளையும் பின்னிப் பெடலெடுக்கும்.
 
முகமூடியின் ஆழமாய் எழுதுவது எப்படியும் நல்ல உதாரணம்தான். இதுலே பெரிய காமெடி என்னன்னா, இந்தப் பதிவை ஒரு பயிற்சிப் பட்டறையா தினமலர் சித்தரித்திருந்ததுதான்!
 
இன்னொரு வகை, ஊடகத்திலே பிரபலமா இருக்கற விஷயங்கள கிண்டல் அடிக்கறது- மெகா சீரியல்களைக் கிண்டலடிச்சு உஷா எழுதியிருந்தது, மாயா என்பவர் என் பதிவில் இட்ட பின்னூட்டம், சினிமாவையும் அரசியலையும் சேத்துவச்சு க்ச்சேரி போட்ட  தேவ் ,  ஏன், நான் எழுதிய அவன் விகடன் - னு இதுக்கு நெறய உதாரணம் சொல்லலாம்!
 
மொத்தத்தில, வலைப்பதிவுகள்லே நகைச்சுவைக்குப் பஞ்சமே இல்லைங்க.. என்ன, எல்லாத்தையும் படிச்சாத்தான் முத்து கிடைக்கும்.. கோழிங்களுக்கு குப்பையக் கிளர்றத விட்டா மாணிக்கம் கிடைக்க வாய்ப்பிருக்கா சொல்லுங்க?
 
பி கு: இது என்னோட தனிப்பட்ட ரசனைன்னாலும், இப்போ நினைவில் நிக்கறதை மட்டும்தான் போட்டிருக்கேன். எதாச்சும் நல்ல நகைச்சுவைப்பதிவு விட்டுப்போயிருந்தா, பின்னூட்டத்திலே சுட்டியோட சொல்லுங்களேன். நானும் படிப்பேன், நாலு பேரு பாத்துட்டு சிரிப்பாங்க!
| | |
oooOooo
சுரேஷ் பாபு அவர்களின் இதர படைப்புகள்.   சிறப்பு ஆசிரியர் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |