ஜூன் 08 06
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
நையாண்டி : காணாமல் போனவர்கள் - கார்த்திக்
- திருமலை கோளுந்து [golundhu1979@yahoo.com]
Bookmark in Del.icio.us | | Printable version | URL |

பெயர்: கார்த்திக்

உண்மையான பெயர் : முரளி

நிறம் : சிகப்போ சிகப்பு

படிப்பு : பத்தாம் வகுப்பு.

பிறந்த இடம் : வந்தோரை வாழ வைக்கும் தமிழகத்தின் தலைநகரமான சென்னை மாநகர் 

நடித்த படங்கள் : 100க்கும் மேல்

புனைப்பெயர் : நவரச நாயகன், அமரன்

அடையாளம் : வாரிசு நடிகர். என் இனிய தமிழ் மக்களே என்று சொல்லும் பாரதிராஜாவால் அடையாளம் காணப்பட்டவர். 

Karthik Actorசிறப்பு : சினிமாவிலும், அரசியலிலும் கால்ஷீட் கொடுத்து விட்டு டிமிக்கி கொடுப்பதில் ஸ்பெஷலிஸ்ட். படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடிக்கும் பொழுதே மூட் அவுட் ஆகி யாருக்கும் தெரியாமல் எஸ்கேப் ஆவதில் இவரை மிஞ்ச ஆள் கிடையாது. திருமணமாகி மாமனார் வீட்டிற்கு விருந்திற்கு சென்றவர், மனைவியின் தங்கையை தன் பின்னால் சுற்ற வைத்தவர். சினிமாவில் அறிமுகமான காலக்கட்டத்தில் சாருக்கு பெண் ரசிகர்கள் அதிகமாம். சினிமாவில் எந்தக் கேரக்டர் என்றாலும் கில்லி அடிப்பதில் வல்லவர்.

எதிரி : முன்பு பைனான்சியர்கள். இன்று அ.தி.மு.க. மதுரை ஆதினம் என்று பெருகிக் கொண்டே போகிறது.

நம்புவது : என்ன தான் படித்து பண்பாளராக, அறிவாளியாக பேசி நடந்து வந்தாலும் தன்னை ஆதரிக்கும் ஜாதியை அதிகமாக நம்புகிறார்.

நம்பாதது : தனக்கு கூடும் கூட்டத்தை.

சாதனை : தமிழ் சினிமாவில் இன்னும் மறக்கப்படாமல் இருப்பது. தமிழகத்தின் வட மாவட்டங்களில் செல்லாக் காசாக இருக்கும் இவருக்கு, தென் மாவட்டத்தில் பெரிய கூட்டமே  இருக்கிறது. தானே ஒரு படத்தை இயக்க நினைத்து அதற்கு கதை, திரைக்கதை எல்லாம் எழுதி விட்டார். ஆனால் பைனான்சியர்கள் ஆளை விட்டால் போதும் என்று இவரை பார்த்து ஓடி ஓளிகிறார்களாம்.

வேதனை : இவருக்கு திடீரென்று ஞானதோயம் ஏற்பட்டு சரணாலயம் என்ற அமைப்பை ஆரம்பித்தார். ஆரம்ப கூட்டத்திலேயே இவரால் பேச முடியவில்லை. மாறாக ரசிகர்களால் கிள்ளப்பட்டார். இந்த நிலை மதுரை, நெல்லை மாவட்ட மாநாடுகள் வரை தொடர்ந்தது. பின் பார்வர்டு பிளாக் கட்சிக்கு தலைவரானார். தனது கட்சியை திராவிடக் கட்சிகளோடு கூட்டணியில் இணைக்க பாடுபட்டு தோல்வி கண்டார். பின் 75 தொகுதிகளில் தனித்துப் தன் கட்சிக்காரர்களை போட்டியிட வைத்தார். கடைசியில் இவரை நம்பி போட்டியிட்டவர்கள் டிபாசிட் இழந்தது தான் மிச்சம்.

பிடித்தது : தனது செல்போனை அடிக்கடி தொலைப்பதில் அப்படி ஒரு ஆனந்தம். அரசியல்வாதியானதில் சாருக்கு அதிக மகிழ்ச்சியாம். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை போதை ஊசி, மது, மருந்து, ஊர் சுற்றுவது தான் பிடித்தமான ஒன்று. ஆனால் இன்று மது மட்டுமாம். அதுவும் இவர் 10,000 ரூபாய்க்கு குறைவான சரக்கை தொடுவதே கிடையாதாம். இவரது கட்சிக்காரர்கள் இதனை ஒரு பெருமையாகவே சொல்லிக் கொள்கிறார்கள்.

பிடிக்காதது : கடன் கொடுத்தவர்கள். காணாமல் போன கார்த்திக் கட்சி என்று பல பத்திரிக்கைகளில் வந்த செய்தி பிடிக்காத ஒன்றாகிவிட்டதாம்.

வெளிவராத ரகசியம் : முன்பு என்கவுண்டரில் கொல்லப்பட்ட ரவுடி வீரமணி இவரை நடுக்கடலுக்கு கடத்திச் சென்று தாக்கினார் என்ற செய்தி உண்மையா பொய்யா என்று தெரியவில்லை. இன்று டாடாவை மிரட்டியவர்களிடம் 20 கோடி வாங்கிக் கொண்டு தேர்தலில் தனித்து போட்டியிட்டதாக வரும் செய்திகள் உண்மையா பொய்யா என்று தெரியவில்லை.

வேண்டுகோள் : மேற்சொன்ன அடையாளங்களோடு இருக்கும் ஆத்மாவை யாரும் பார்த்தாலோ, அல்லது அவரைப்பற்றி கேள்விப்பட்டாலோ தெரிவிக்க வேண்டிய முகவரி.

காணாமல் போன தலைவர்கள் சங்கம்,
லஞ்சம் வாங்குவோர் காலணி,
போதை ஏறும் தெரு,
மதுப்பட்டி.
நிலையில்லா மாவட்டம் - 000001

| | | |
oooOooo
திருமலை கோளுந்து அவர்களின் இதர படைப்புகள்.   நையாண்டி பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |