ஜூன் 08 06
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
சிறப்பு ஆசிரியர் : டா வின்ஸி கோட் - ஜெயித்தது என்ன ?
- சுரேஷ் பாபு
Bookmark in Del.icio.us | | Printable version | URL |
"இந்தக் கான்ஸ்பிரசி தியரியை ஆராய்ச்சி செய்பவர்கள், அவை உண்மைதான் என்று நிரூபிப்பதில் வெற்றி அடையாத நிலையில், ஒரு கதையாக எழுதி அதை சரித்திரத்தகவல்களிடையே திறமையாக தன் கருத்துகளையும் புகுத்திச் சித்தரித்து, நிரூபிக்கப்பட்டுவிட்டதாகச் சொல்ல முயற்சித்திருக்கிறார் டேன் பிரவுன்."

வேகமான கதை - இரண்டே நாட்களில் முடித்தேன். கதையின் நம்பகத்தன்மையைப்பற்றி மட்டுமே இப்பதிவில் அலசப்போகிறேன். மதக்கோட்பாடுகளை இந்தக் கதை உடைக்கிறதா, தடை சரியா தவறா என்றெல்லாம் இல்லை.

லூவர் மியூசியத்தின் காப்பாளர் கொல்லப்படுவதில் துவங்குகிறது கதை. அவரைக்கொன்ற கேனையன், உடனே சாகும்படி கொல்லாமல், வயிற்றில் சுட்டு, கொஞ்ச நேரம் கொடுத்துவிடுகிறான். நேரம்தான் கிடைத்ததே, அதை உருப்படியாக உபயோகப்படுத்தி நேரடியாக விஷயம் சொல்லக்கூடாதா? சாகும் காலத்தில் அவரும் கஷ்டப்பட்டு பல குறியீடுகளை கண்ணுக்குத் தெரியாத இன்க் மூலமாகவும், தன் உடல் மூலமாகவும், அங்கங்கே உருவாக்கி, துப்பறிபவர்களையும், படிப்பவர்களையும் லூவரைச் சுற்றிக்காட்ட வைக்கிறார். ஆங்கில நாவல்களுக்கும் திரைப்படங்களுக்கும் மட்டுமே உரிய "கலந்துகட்டி" காம்பினேஷன் கதாபாத்திரங்கள் - கிரிப்டாலஜிஸ்ட் நாயகி, வரலாற்றாராய்ச்சியாள நாயகன்! போலீஸ் துரத்துவது பற்றி அவ்வப்போது கவலைப்பட்டுவிட்டு, இவர்கள் ஒவ்வொரு துப்பாக அறிந்து, ஒரு டப்பாவைக் கண்டுபிடிக்கிறார்கள். அத்தோடாவது முடிந்ததா? அந்த டப்பாவைத் திறக்க பாஸ்வேர்டு வேண்டுமே? உதவிக்காக இன்னொரு வரலாற்று ஆராய்ச்சியாளரிடம் போய், அவர் இவர்களை பாதுகாப்பாக (போலீஸ் துரத்துகிறதே!) இங்கிலாந்துக்குக் கடத்திப்போய், அங்கே சர்ச், சுடுகாடு எல்லாம் சுற்றி, ரகசியத்தை வெளியே எடுக்கிறார்கள்.. அப்படி என்ன ரகசியம் என்று கேட்கிறீர்களா?

da vinci code bookபைபிள் தொகுக்கப்பட்ட்போது சில காஸ்பெல்கள் விடப்பட்டுவிட்டன, ஓட்டெடுப்பு மூலம் மூன்றாம் நூற்றாண்டு ராஜா கான்ஸ்டண்டின் தெரிந்தெடுத்த காஸ்பெல்கள் மட்டுமே உள்ளன; விடுபட்டவைகளுல் கிறிஸ்துவுக்கு மணமாகி, குழந்தை பிறந்து, இன்றுவரை அந்தத் தலைமுறை (கரெக்டு - நீங்கள் ஊகித்தது சரிதான் - அந்த நாயகி யேசு வம்சாவழியாம்!) செழித்திருப்பதும், பெண்களுக்கெதிரான கத்தோலிக்ககோட்பாடுகளை உடைக்கும் ரகசியங்களும் அடக்கமாம். இந்த ரகசியங்களைக் காத்து, தக்க தருணத்தில் உலகிற்கு வெளிப்படுத்தும் எண்ணத்தில் இயங்கும் ரகசிய குழுவிற்கு மேற்படி மியூசியக்காப்பாளர்தான் இந்நாள் தலைவராம். (சில முன்னாள் தலைவர்கள் - லியர்னடோ டாவின்ஸி, ஐசாக் நியூட்டன்..)

ரகசியங்கள் வெளிவந்தனவா? கத்தோலிக்கக் கோட்பாடுகள் உடைந்தனவா? வெண்திரையில் / அச்சடித்த தாளில் காண்க!

கதையாகப் பார்த்தால் சுவாரஸ்யமாகத்தான் செல்கிறது. பாரீஸிலிருந்து இங்கிலாந்துக்கு கடத்தப்படுவது அவ்வளவு சுலபமா, ஒரு ராத்திரியிலேவா அவ்வளவும் நடக்கின்றன, இவ்வளவு கஷ்டப்பட்டா இந்த டுபாக்கூர் பாஸ்வேர்டைக்கண்டுபிடிக்க வேண்டும் போன்ற லாஜிக் கேள்விகள் கதை முடிந்தபின்புதான் கேட்கத் தோன்றுகிறது. அதுவே கதையின் வேகத்துக்கு சாட்சி.

நிஜத்துக்கு அருகே கதை அமைக்கும்போது கதாசிரியனுக்கு பலவிதமான இக்கட்டுகள் ஏற்படும். ஒரு கதை Hey Ramசரித்திரத்தை மாற்றி எழுதிவிட முடியாது என்பதால், ஆரம்பித்த இடத்திலேயே முடிக்க வேண்டியது கட்டாயம். ஹே ராம்-ஐ விமர்சிக்கும்போது சுஜாதா சொன்னது நினைவிருக்கிறதா? காந்தியைக் கொன்றது கோட்சே என்பதை மாற்ற முடியாது. சாகேத் ராமனும் கொல்ல முயன்றான் என்று மட்டும்தான் கதை அமைக்க முடியும். சார்லஸ் டிகால்-ஐ ஜேக்கல் கொல்ல முயற்சிப்பதாகத்தான் சொல்ல முடியும். கொன்றுவிட்டான் என்று சரித்திரத்தை மாற்றிவிட முடியாது - பல உதாரணங்கள் சொல்லிக்கொண்டே போகலாம்.

இந்தக்கதைக்கும் அப்படிப்பட்ட இக்கட்டுகள் நிறையவே இருந்திருக்கின்றன. இருந்தாலும் அவற்றைப்பற்றி பெரிய கவலை ஏதும் இல்லாமலே எழுதி இருக்கிறார். உதாரணமாக:

1. கான்ஸ்பிரசி தியரியை உண்மையாக நிறுவ முயற்சித்திருக்கிறார் - எந்த ஆதாரமும் இல்லாமல் - மோனாலிஸா படத்தின் இடது பாதி / வலது பாதி, லாஸ்ட் சப்பரில் யேசு மக்தலீனா(?)வைக் காதலுடன் பார்க்கிறார் என்றெல்லாம் ஜல்லியடிப்பதை ஆதாரமாக ஏற்க முடியாது.

2. சர்ச்சுக்கும், ஓப்பஸ் டே போன்ற அமைப்புகளுக்கும் இப்படி ஒரு ரகசியம் இருப்பது தெரியும், அதை அமுக்க ஆசைப்படுகிறார்கள் என்றும் போகிற போக்கில் சொல்லிவிட்டுப்போகிறார்  - கதையின் முக்கிய வில்லன் இவர்கள் இல்லை என்று சாமர்த்தியமாகத் தப்பித்தாலும், அவர்களுக்கு இப்படி ஒரு ரகசியம் இருப்பது தெரியும் என்று சொல்வதன் மூலம், கான்ஸ்பிரசி தியரிக்கு நம்பகம் கொடுக்க முயற்சிக்கிறார்.
 
3.கதையில் உறுதியாகவே, யேசுவிற்கு வாரிசு இருக்கிறது என்று சொல்லி விடுகிறார்.
 
Louvre Museum4. லூவர் மியூசியத்துப் பிரமிட்களுக்கு கதை முடிவில் புதிய வியாக்கியானம் கொடுக்கிறார். (படம் பார்க்க: அங்கே அழகாக் நின்று கொண்டிருப்பவர் யார் என ஊகிப்பவர்களுக்கு எந்த்ப்பரிசும் கிடையாது!). ஆக, உறுதிபடுத்தப்படாத வதந்திகளையும், சரித்திரத்தையும் போட்டுக்குழப்பி, இவர் சொல்ல வருவதுதான் உண்மை என்று நிறுவ முயற்சித்திருக்கிறார். அதே நேரத்தில் கற்பனைக்கதை என்ற டிஸ்கிளைமரை, இந்தப்புரட்டுவேலைக்கு பாதுகாப்பாகவும் உபயோகித்துக்கொண்டிருக்கிறார்.

ஜுராஸிக் பார்க் கதை படித்திருக்கிறீர்களா? கதைப்படி ஜுராஸிக் பார்க்கை நிர்மாணிக்கும் தொழிலதிபர் ஹேமண்ட் ஏன் அதை அவ்வளவு பணம் செலவழித்து,கஷ்டப்பட்டு, ஆராய்ச்சி செய்து, நிர்மாணிக்கிறார்? டைனோசார்களைப்பார்க்க ஆர்வம் உள்ள மக்களை அவர் தீவிற்கு வரவழைத்து,  டிஸ்னிலேண்ட் போன்ற ஒரு பிராண்டாக அதை நிலைநிறுத்திப் பணம் பார்க்கும் ஆர்வத்தில்.

அதே விளைவை, அவர் அளவுக்குக் கஷ்டப்படாமல், அவர் செலவழித்ததில் ஒரு சிறு பின்னம் மட்டுமே செலவழித்து அடைந்தவர் யார்? ஸ்பீல்பெர்க்! திரைப்படமாக எடுத்து, எல்லோரையும் அரங்கத்திற்கு வரவழைத்தார், ஜுராஸிக் பார்க் என்ற பிராண்டை நிலைநிறுத்தி, பணம் பார்த்தார் -ஹேமண்ட் போல கஷ்டப்படாமல்!

அதே போன்ற அணுகுமுறைதான் எனக்கு இந்த (டா வின்ஸி கோட்) கதையிலும் தெரிகிறது. கற்பனைப்பாத்திரங்கள் அடைய முடியாத் நிலையை, அந்தக் கற்பனையைச் செய்ததன் மூலம் அடைந்தவர்கள் என்ற முறையில், இருவரையும் (ஸ்பீல்பெர்க், டேன் பிரவுன்) ஒப்பிட முடியும்.

இந்தக் கான்ஸ்பிரசி தியரியை ஆராய்ச்சி செய்பவர்கள், அவை உண்மைதான் என்று நிரூபிப்பதில் வெற்றி அடையாத நிலையில், ஒரு கதையாக எழுதி அதை சரித்திரத்தகவல்களிடையே திறமையாக  தன் கருத்துகளையும் புகுத்திச் சித்தரித்து, நிரூபிக்கப்பட்டுவிட்டதாகச் சொல்ல முயற்சித்திருக்கிறார் டேன் பிரவுன்.

இது ஊரை ஏமாற்றும் வேலை தவிர வேறொன்றுமில்லை.

கதையைப் படிக்கலாமா என்று கேட்கிறீர்களா? அம்புலிமாமா கதை படிப்பது போன்ற மனோபாவத்துடன் படித்தால் நல்ல கதைதான். தாராளமாகப் படியுங்கள்.

| |
oooOooo
சுரேஷ் பாபு அவர்களின் இதர படைப்புகள்.   சிறப்பு ஆசிரியர் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |