ஜூன் 10 2004
தராசு
பெண்ணோவியம்
உங்க...சில புதிர்கள்
மேட்ச் பிக்சிங்
பருந்துப் பார்வை
க. கண்டுக்கொண்டேன்
முத்தொள்ளாயிரம்
என்னை எழுதியவர்கள்
சுய சாசனம்
களம்
கோடிட்ட இடங்கள்
காந்தீய விழுமியங்கள்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  தராசு : புதிய அரசும் பொடாவும்
  - மீனா
  | Printable version |

  மத்தியில் தற்போது பதவியேற்றுள்ள காங்கிரஸ் கூட்டணி அரசு குறைந்த பட்ச செயல்திட்டத்தை நிறைவேற்றப் போகிறதோ இல்லையோ - கட்டாயம் கூட்டணி கட்சிகளுக்குப் பாதகமாக உள்ள சட்ட திட்டங்கள் அனைத்தையும் வாபஸ் வாங்கப் போகிறது என்பதை சூசகமாக ஜானாதிபதியே கூறியுள்ளார். நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பேசியுள்ள ஜனாதிபதி பொடாவை வாபஸ் வாங்குவதைப் பற்றி மத்திய அரசு தீவிரமாகச் சிந்திக்கும் என்று மக்களுக்கு வாக்கு கொடுத்துள்ளார்.

  இந்தியாவில் அறிமுகமாகும் பல சட்டங்களும் தீவிரவாதிகளைக் குறிவைத்து இயற்றப்படுபவையே தவிர அரசியல்வாதிகளை மனதில் வைத்தல்ல. ஆனால் தற்போது தீவிரவாதிகளைத் தோற்கடிக்கும் விதமாக உள்ளூர் அரசியல்வாதிகளே அனைத்து அட்டூழியங்களையும் செய்வதால் அவர்களும் பொடாவில் உள்ளே போகும் நிலை ஏற்படுகிறது. மற்றபடி அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகள் அனைத்தையும் சட்டத் திருத்தங்களின் மூலம் முறையாகக் கட்டுப்படுத்துவது மத்திய அரசுக்கு ஒன்றும் பெரிய விஷயமே இல்லை.

  ஒரு சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்றால் அதிலுள்ள ஓட்டைகளை அடைக்கவேண்டுமே தவிர அச்சட்டத்தையே ரத்து செய்வது பிரச்சனைக்குத் தீர்வாகாது. உலக நாடுகள் அனைத்தும் பயங்கரவாதத்திற்கு எதிராக தங்கள் நாடுகளில் கடுமையான சட்ட திட்டங்களை அமலாக்கிவரும் இந்த வேளையில், பயங்கரவாதிகளின் நிரந்தர தாக்குதலுக்கு இலக்கான இந்தியாவில் - நடைமுறையில் உள்ள ஒரு பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்குவதன் மூலம் என்னென்ன பயங்கரங்கள் விளையும் என்பதை ஆட்சியாளர்கள் சற்று நிதானமாக யோசித்து உணரவேண்டும்.

  மத்திய அரசுக்கு நமது வேண்டுகோள் ஒன்றுதான். பொடாவில் திருத்தம் செய்யுங்கள். சட்ட நடைமுறைகளை இன்னும் தீவிரமாக்குங்கள். பொடா மூலம் கைது செய்யப்பட்டவர்களின் வழக்குகளைத் துரிதமாக விசாரித்துத் தீர்ப்பளிக்க கூடுதல் நீதிமன்றங்களை ஏற்படுத்துங்கள். இதன் மூலம் யாரவது பாதிக்கப்பட்டார்கள் என்றால் அவர்களுக்கு உடனடியாக நியாயம் வழங்குங்கள். ஆனால் பொடாவை வாபஸ் மட்டும் வாங்காதீர்கள்.

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |