ஜூன் 10 2004
தராசு
பெண்ணோவியம்
உங்க...சில புதிர்கள்
மேட்ச் பிக்சிங்
பருந்துப் பார்வை
க. கண்டுக்கொண்டேன்
முத்தொள்ளாயிரம்
என்னை எழுதியவர்கள்
சுய சாசனம்
களம்
கோடிட்ட இடங்கள்
காந்தீய விழுமியங்கள்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  உங்க...சில புதிர்கள் :
  - முத்துராமன்
  | Printable version |


  ஃபிராய்டின் ஆளுமைக் கோட்பாடுகள் பால்நிலை சார்ந்ததாகவே அமைந்திருக்கிறது. செக்ஸை மையமாகக் கொண்டு அமைந்ததுதான் இந்த
  நிலைகள்.

  The Oral stage

  ஒரு மனிதனின் தனிபட்ட குணங்களை நிர்ணயிப்பதில் அடிப்படை பங்கு வகிப்பது இந்த நிலைதான். பிறப்பிலிருந்து ஒரு வருஷ காலம் இந்தப் பருவம். இந்தப் பருவத்தில் குழந்தை தனது வாயின் மூலம் மட்டுமே இன்பம் அனுபவிக்கிறது. இந்தப் பருவத்தினை வாய்நிலை பருவம் என்றே குறிப்பிடுகின்றனர். இந்த குழந்தைப் பருவநிலைக்கும் ஆளுமைக்குமான தொடர்பு மிகவும் நுட்பமானது. சிக்கலானதும் கூட.

  இந்த நிலை தாயின் அன்பும் அரவணைப்பும் தேவைப்படும் காலத்தில் நிகழ்கிறது. இந்தச் சார்புநிலை நாம் முதிர்ச்சி அடைந்தபிறகும் கூட தொடர்கிறது.

  The Anal stage

  குழந்தையின் இரண்டம் வயதில் இந்த நிலை ஏற்படுகிறது. பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சிறுநீர் மற்றும் மலம் கழிக்கும் பயிற்சி அளிக்கும்போது தோன்றுகிறது. இந்த நிலையில் குழந்தையின் இன்பம் bowel control-டன் சம்பந்தபடுத்தப்பட்டது, குழந்தை மலத்தை வெளியேற்றுவதிலும், சற்று தாமதித்து அதை அடக்கி வைத்து பின்பு அதை வெளிப்படுத்துவதிலும் சுகம் பெறுகிறது.

  The Phalic stage

  இந்த வளர்ச்சி கட்டம் மிக முக்கியமானது. இது மூன்று வயது முதல் ஆறு வயதுக்குட்பட்ட நிலை. ஃபிராய்டின் புகழ்பெற்ற ஈடிபஸ் காம்ப்ளெக்ஸ் என்பது இந்த காலகட்டத்தில் ஏற்படுவதுதான். இது ஒரு விதமான autoerotic நிலை. இந்த நிலை சற்று வித்தியாசமானது. விருப்பும் வெறுப்பும் கலந்த ஒரு நிலை. ambivalent என்று குறிப்பிடுவார்கள்.

  இந்த ஈடிபஸ் காம்ப்ளெக்ஸ் குறித்து சற்று விளக்கமாகச் சொன்னால்தான் சரியாக இருக்கும்.

  இந்த நிலையில் ஒரு பையன் தன் தாயை தன்னுடைய அன்புக்குரியவராகத் தேர்ந்தெடுக்கிறான். தாயின் மீது கொண்ட அன்புக்குத் தடையாக இருப்பவர் தன்னுடைய அப்பாவாக இருப்பின் இந்த அன்பு தாயின் மீது அதிகமாகி, தந்தையை வெறுக்கும் மனநிலைக்கு மாறிவிடுகிறது.

  பெண்ணாக இருந்தால் தன் அன்புக்குரியவராக தன் தந்தையைத் தேர்ந்தெடுக்கிறாள். இதே போல பெண்ணுக்குத் தன் தந்தையின் மீது ஏற்படும் ஆசையும், தடங்கலாக இருக்கும் அம்மாவின் மீது வெறுப்பும் கொண்ட நிலை ஏற்படுகிறது. இதற்கு எலக்ட்ரா காம்ப்ளெக்ஸ் என்று சொல்கிறார்கள்.

  தாயின் மீது ஆசைப்படும் பையனுக்கு, தன் incestous ஆன நினைப்பு அப்பாவுக்குத் தெரிந்துவிட்டால் அப்பா தன்னை எதுவும் செய்துவிடுவாரோ என்று பயம் கொள்கிறான். இது ஒருவிதமான (ambivalent) விருப்பும் வெறுப்பும் கொண்ட ஒரு நிலை. இந்த பயம் காலம் கடக்கும்போது தன் அப்பாவுடன் தன்னை அடையாளம் கண்டு கொள்கிறான். ஈடிபஸ் சிக்கலும் மனதிற்குள் புதையத் தொடங்குகிறது.

  [இந்த ஈடிபஸ் காம்ப்ளெக்ஸ் பற்றி ஃப்ராங்க் ஓ கென்னர் ஒரு நல்ல கதையை எழுதியிருகிறார்.  மிக அழகாகச் சொல்லப்பட்ட அந்தக் கதை ஈடிபஸ் காம்ப்ளெக்ஸ். இந்தக் கதை திலகவதியின் மொழிபெயர்ப்பில் கடைத்தெருவின் ஞானி என்ற தொகுப்பில் வெளி வந்திருக்கிறது. ]

  ஆனால், அப்பாவின் மேல் ஆசைப்பட்ட பெண் குழந்தையின் நிலை வேறு மாதிரியாக இருக்கிறது. பெண்ணின் நிலையும் அதே போன்ற ஒரு பய உணர்ச்சி சார்ந்ததுதான். ஆனால், இது வித்தியாசமானது. பையனைப் போல இல்லாமல், அப்பாவின் மேல் கொண்ட ஆசையை முழுவதுமாக பெண்ணால் மனதில் போட்டு பூட்டி வைக்க முடிவதில்லை. இந்தச் சிக்கல் ஆழ்மனதில் இருந்து கொண்டே இருக்கிறது.

  இந்தச் சிக்கலைப் புதைத்தலில் ஏற்படும் பிரச்னைகளே ஆணுக்கும் பெண்ணுக்குமான குணாதிசய வேறுபாடுகளுக்குக் காரணமாக அமைந்துவிடுகிறது.

  அடிப்படையில் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணின் தன்மை இருக்கும் என்றும், ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆணின் தன்மை இருக்கும் என்றும் கூறுகிறார் ஃபிராய்டு. இதனால்தான் மகன் அப்பாவுடனும், மகள் தாயுடனும் கொண்டிருக்கும் உறவு வெறும் அன்பை மட்டும் கொண்டதாக இல்லாமல், வெறுப்பும் கலந்த தன்மையுடன் விளங்குகின்றன என்று சொல்லியிருக்கிறார். இந்நிலையில் குழந்தை தனது பிறப்புறுப்பை தடவிக் கொடுப்பதில் ஆர்வம் உடையவர்களாக இருக்கின்றனர்.

  இந்த நிலையின் இறுதிக் கட்டத்தில் குழந்தை தனது உடம்பின் மீது காட்டும் கவனத்தைக் குறைத்து வெளி உலகத்துடன் தொடர்பு கொள்வதிலும் சூழலுக்கு ஏற்ப சிறப்பாகச் செயல்படவும் ஆரம்பிக்கிறது.

  The Genital stage

  இதுவரை பார்த்ததெல்லாம் சுயகாதல் தன்மை கொண்டவை. அதாவது தன் உடம்பைச் சார்ந்து இன்பம் பெற்றவை. Narcissim என்று சொல்வார்கள். இந்த நிலை மாறி genital stage-க்கு வரும் பருவம் adolescence பருவம். இந்த ஜெனிட்டல் நிலையில்தான் சமூக விஷயங்களில் ஈடுபடுதல், காதல் போன்ற சமாசாரங்களெல்லாம் வருகின்றன. தன்னுலகிலிருந்து விடுபட்டு வெளியுலகை அறிய முற்படும் பருவம். இந்தப் பருவத்தில்தான் ஒருவன் தனது சமூகத்துடன் உறவாடும் நிலைக்கு வருகிறான்.

  சரி, பொதுவாக ஃப்ராய்டு சொன்னவற்றை இரண்டு வகைகளுக்குள் கொண்டு வந்துவிடலாம்.

  ஒருவர் தன்னுடைய வாழ்க்கை நலமாக அமைவதற்கும் தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கும் செயல்படும் நடவடிகைகளை எல்லாம் "ஈராஸ்" (Eros) எனப் பிரித்துவிட்டார். இதுவே மனிதனின் லைஃப் எனர்ஜி போன்றது. இதில் செக்ஸுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்.

  இன்னொடு பிரிவுக்கு "தானடாஸ்" (Thanatos) என்று பெயர். செக்ஸ் போன்ற இன்னொரு வலிமையான சக்தி இது. இந்த சக்தி வாழ்க்கையின் ஒவ்வொரு செயலிலும் எதிரானதாகவே இருக்கும். வன்முறையானது இந்த தானடாஸ்.

  மேலே சொல்லப்பட்டிருக்கும் நிலைகளில் தேக்கம் ஏற்படும்போதுதான் ஒருவனிடம் ஆளுமை கோளாறு ஆரம்பமாகின்றது.

  ஒருவருடைய ஆளுமையை மாற்றுவது என்பதெல்லாம் மணலை கயிறாகத் திரிக்கும் வேலைதான். ஒரு நபரின் ஆளுமைக்கு ஏற்ப அவருடைய உறவு மற்றும் வேலைகள் அமைந்தால் மட்டுமே வாழ்க்கை அந்த நபருக்கு சுலபமானதாக அமையும். எப்போது ஒருவருடைய ஆளுமை தனக்கும், மற்றவர்களுக்கும் சிக்கல்களையும் பிரச்னைகளையும் ஏற்படுத்துகிறதோ அதுவே ஆளுமைக் கோளாறு எனப்படுகிறது.

  ஃபிராய்டின் கோட்பாடுகளை பகுதிகளாக ஏற்பதோ, மறுப்பதோ முடியாது. மொத்தமாக ஏற்க வேண்டும் அல்லது மொத்தமாக மறுக்க வேண்டும். அவருடைய கருத்துகளை ஒட்டி வந்த பல ஒட்டுச் சித்தரிப்புகளும் உண்டு. சில முக்கியமான ஆளுமைக் கோளாறுகளையும் ஃப்ராய்டின் கருத்துகளை ஒட்டிச் சித்தரிக்கப்பட்ட சில  முயற்சிகளையும் அடுத்து வரும் வாரங்களில் பார்க்கலாம்.

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |