ஜூன் 10 2004
தராசு
பெண்ணோவியம்
உங்க...சில புதிர்கள்
மேட்ச் பிக்சிங்
பருந்துப் பார்வை
க. கண்டுக்கொண்டேன்
முத்தொள்ளாயிரம்
என்னை எழுதியவர்கள்
சுய சாசனம்
களம்
கோடிட்ட இடங்கள்
காந்தீய விழுமியங்கள்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  க. கண்டுக்கொண்டேன் : த்ரிஷாவின் தண்ணீர் விளையாட்டு
  - ரமா சங்கரன்
  | Printable version |

  வித்யாபதி என்னும் கவிஞர் பீஹாரில் வாழ்ந்தவர். வித்யாபதியை  ஆதரித்து வந்த ராஜா சிப் சிங் என்ற வள்ளல் ஒருவரை பேரரசர் அக்பர் தண்டித்து விட்டார். அந்த வள்ளலை எப்படியாவது விடுவிப்பேன் என்று  அக்பரிடம் சவாலுரைத்தார் வித்யாபதி. இதனால் கோபமுற்ற அக்பர் அவரை ஒரு மரப்பெட்டியில் போட்டு பூட்டி விட்டார். வித்யாபதி பூட்டி வைக்கப்பட்டிருந்த  அந்த மரப்பெட்டியை மற்றொரு இடத்திற்குத் தூக்கிச் செல்ல உத்தரவிட்டார் அக்பர். சில மணி நேரங்களுக்குப் பின் அவரை அந்த மரப்பெட்டியில் இருந்து விடுவித்தார்  அக்பர். வித்யாபதி பெட்டிக்குள்  இருந்த சமயம் என்ன நடந்தது என்று சொன்னால் ராஜா சிங்கை விடுதலைச் செய்வதாகச் சொன்னார் மன்னர். தான் பெட்டிக்குள் இருந்தபோது வெளியே அரசவைப் பெண்கள் குளித்துக் கொண்டிருந்ததை கவிஞர் வித்யாபதியால் உணர முடிந்தது.

  வெளியே வந்த வித்யாபதி பெண்கள் குளிப்பதைப் பற்றி  சரமாரியாகப் பாடி மன்னரை மகிழ்வித்தார். "இது எனக்கு ஒரு மகிழ்ச்சியான நாள். மேகங்களிலிருந்து முத்துக்கள் உதிர்வது போல அவளுடைய தலைமுடியிலிருந்து தண்ணீர் கொட்ட, தங்கக் கிண்ணங்களைக் கவிழ்த்து வைத்தாற்போன்ற என் காதலியின்  மார்பகங்களை அந்த முத்துக்கள்  தொட்டுச் செல்ல, என் ஆசைக்கு  அதுவே எல்லையானது" - என்று வித்யாபதி   பாடலைப் பாடினார்.  "Bangiya Padavali" என்னும் வித்யாபதியின் நூலில் காணப்படும் இவ்வரிகளை  ஆங்கிலத்தில் ஏ.கே குமாரஸ்வாமியும் அருண் சென்னும் மொழிபெயர்த்துள்ளனர். ( "Bangiya Padavali"- songs of Radha and Krishna translated into English by A.K. Coomaraswamy and Arun Sen  London, 1915). வித்யாபதியின் இந்த குளியல் பாடல்தந்த வள்ளலை விடுவித்தது.  

  நாம் நீராடுவதைப் பற்றி அறிவியலும் இலக்கியங்களும் என்ன சொல்கிறதோ! நம் சினிமா நாயக நாயகிகளுக்கு அது பற்றி கவலையில்லை.   தேவிகா, வைஜயந்திமாலா தொடங்கி ராதா, அம்பிகா பின் தற்போதைய ஹீரோயின்கள் சிம்ரன், த்ரிஷா வரை சினிமாக்களில் விதவிதமான உடைகளுடன் விதவிதமான குளியல்களைக் காட்டி வருகிறார்கள். இப்போதைய சினிமாக்களில் நீச்சல்குளக் காட்சிகள் மறைந்து விட்டன. எல்லாமே கடற்கரையில்- அங்கேயே  ஆட்டம்பாட்டம் அதிகரித்து வருகிறது. ஆய்த எழுத்தில் த்ரிஷாவும் புதுக்கோட்டை சரவணன் திரைப்படத்தில்  சந்தியாவும் மண்குளியலின் மகத்துவத்தைக் காட்டியிருக்கிறார்கள். ஆசைகளை முற்றும் துறந்த முனிவர்கள்தான் மண்குளியலுக்குச் செல்வார்கள் என்ற நிலைப் போய் ஆடைகளை முடிந்த அளவு  துறந்துவிட்டவர்களுக்கு ஏற்றது  மண் குளியல் என்னும் நிலை உண்டாகியிருக்கிறது.

  தொன்மையான அக்னிபுராணத்தில் எட்டு வகையான குளியல்முறைகள் சொல்லப்படுகிறது. அதில் மண்குளியலும் அடங்கும். குளியல் பற்றி நம் சிற்பிகளும் ஓவியர்களும் கூட  தம் திறமையைக் காட்டிக் கலக்கியிருக்கிறார்கள். கர்நாடகா மாநிலத்தில் குளியல் பற்றி பல சிற்பங்கள் உண்டு. நஞ்சன் கூட்டில் ஒரு மரசிற்பம் பார்த்தேன். அதில் குளிக்கச் செல்லும் பெண்ணை "பாத்-ரோப்" அணிந்திருப்பது போலத் தோற்றம். கர்நாடகாவில்தான் எண்ணெய்க் குளியல் தோன்றியிருக்க வேண்டும் என்றும் அதற்கான சான்றுகள் பல ஷிமோகா மாவட்டத்தில் சாகர் தாலுக்காவில் காணப்படும் மல்லிகார்ஜுனா கோயில், உத்தர கன்னட மாவட்டத்தின் பாட்கலில் அமைந்த கெட்டப்பைய நாராயண் கோயில்களில் காணப்படுகிறது. நீண்டமுடியுடன் கூடிய ஒரு ஆணுக்கு இரு பெண்கள் எண்ணெய்த் தேய்த்துவிடுவதாக அமைந்த சிற்பம் ஷிமோகாவில் காணப்படுகிறது. கர்நாடகாவில் காணப்படும் குளியல் சிற்பங்களை   பலர் ஓவியங்களாக வரைந்திருக்கிறார்கள்.

  கர்நாடகாவில் காணப்படும் மற்றொரு வியப்பான செய்தி தண்ணீரில் நம் பெண்கள் சாகஸங்களைச் செய்தது. கிட்டத்தட்ட ஆய்த எழுத்துத் திரைப்படத்தில்  த்ரிஷாவும் சூர்யாவும் தண்ணீரில் செய்திருக்கும் காதல் சாகஸ விளையாட்டுகள் போல. ஆனால் நான் பார்த்தவரை ஓவியங்களில் பெண்கள்  மட்டுமே ஒருவரை ஒருவர் தூக்குவது போலவும் உடலை வளைத்து நீரிலேயே கழைக்கூத்தாடிகள் போல விளையாடுவது மாதிரியும் காணப்பட்டது. இது பற்றிய விவரங்கள் 'செளகண்டிகாபரிணயம்' என்னும் 19ஆம் நூற்றாண்டில் கல்லிலேயே செதுக்கப்பட்ட நூலில் காணப்படுகிறது. காடுகளில் மன்னருடன் அரசவைப் பெண்கள் முகாமிடும்போது அவர்கள் ஆற்றில் விளையாடி குளித்து மகிழ்வது பற்றிய சுவாரஸ்யமான செய்திகள் இதில் உண்டு.

  சிங்கப்பூரில் இந்தியா சுற்றுலா அலுவலகம் 1990களின் தொடக்கத்தில் திறக்கப்பட்டது. அப்போது அதன் தலைவராகச் செயல்பட்டவர் திரு பூரி. ஏர் இந்தியா அப்போது கல்கத்தாவிற்கு புதிதாக விமானச் சேவையைத் தொடங்கியபோது   எனக்கு கல்கத்தா, ஒரிஸ்ஸா, மும்பை, கர்நாடகா, ஹைதராபாத் போன்ற இடங்களுக்குச் செல்லும் வாய்ப்புக் கிட்டியது. திரு பூரி மூலம் என் பயணம் முழுமையான கலைப் பயணமாக அமைந்ததும் எனக்கு மறக்கமுடியாது. இந்திய ஓவியங்களைப் பற்றி அறிந்து கொள்ளவும் எனக்கு வாய்ப்பு கிட்டியது.

  தமிழில் சங்கப்பாடல்களில் மட்டுமின்றி, இந்தியால் எந்த மொழியிலும்  காதலை மையப்படுத்திய  ஓவியங்கள், கவிதைகள், காவியங்கள் எல்லாமே தலைவன்- தலைவியின் காதல், பிரிவு, ஒன்று கலத்தல்  என்நும் அடிப்படையை  பொதுவாகக் கொண்டது என்று கூறலாம்.  அதில் கண்ணன்- ராதையின் தாக்கங்கள் ஏராளம் உண்டு. அதில் பஞ்சாப் மலைப் பகுதிகளிலும் ராஜஸ்தானிலும் வரையப்பட்ட 'ராஜபுதன ஓவியங்கள்' பல இதன் அடிப்படையில் அமைந்தன. ராதையும் கோபிகைகளும்  மட்டுமின்றி பிற பெண்களும் குளிப்பது போன்ற பல ராஜபுதன ஓவியங்கள் (17-19ஆம் நூற்றாண்டு) புகழ் பெற்றன.   ராஜஸ்தானின் மாநிலமான பண்டியில்  (Bundi) தோன்றிய 'பண்டி' ஓவியங்களில் வெறும் குளியல் காட்சிகள் மட்டுமின்றி குளத்தைச் சுற்றி மயில்கள், பறவைகள், அழகான பண்டியின் இயற்கைக் காட்சிகள் காணப்படும்.  ராதாவும் கிருஷ்ணாவும் தாமரைக் குளத்தில் குளிப்பது போல வரையப்பட்டிருக்கும். பெண்கள் குளித்துவிட்டு ஆடை அணிந்துக் கொள்வது போலவும் அதை காதலன் ஒளிந்திருந்து பார்ப்பது போலவும் கூட 'பண்டி" ஓவியம் உண்டு.

    ராஜஸ்தானில் பண்டி ஓவியங்களுக்கு அடுத்தபடியாகப் புகழ் பெற்றது கிஷன்கார் அல்லது ஜோத்பூர் ஓவியங்கள்.  ராஜஸ்தானின் மற்றொரு மாநிலமான கிஷன்காரை (Kishangarh) ஆட்சி செய்த சாவந்த் சிங்கும் அவருடைய காதல் நாயகிக்கும் பொழுதுபோக்கே ராதா-கிருஷ்ணா காதல் லீலைகளை ஓவியங்கள், கதைகள், கவிதைகளை உருவாக்குவதுதான். இதற்காக பல கலைஞர்களை இந்த மன்னன் அமர்த்தினான். 'பண்டி' ஓவியங்களுக்கு அடுத்தபடியாக நடப்பில் வந்த காதல் ஓவியங்களில் சாவந்த் சிங்கின் கலையுணர்வால் பெண்களின் முகம் மாற்றியமைக்கப்பட்டது. முகம் நீள்வட்டமாகவும், கண்கள் காதுகளின் ஓரம் உள்ள தலைமுடியை தொடும்படி கவர்ச்சியாகவும் வரையப்பட்டன. மார்பகங்களும் பின்புறமும் வட்டவடிவ கிண்ணங்கள் போல வடிக்கப்பட்டன என்று கோட்ஸ் (Goetz) என்னும் ஆய்வாளர் கூறுகிறார். உலகப்போர்கள் முடிந்தபின்  ஐரோப்பிய நாடுகளில் பெண்கள் எப்படி  கலவரமான சூழ்நிலையில், மனநிலையில் காணப்பட்டார்களோ அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட,  வாழ்க்கையை முழுவதும் அனுபவிக்கத் துடிக்கும் எல்லை கடந்த ஆர்வத்துடன் கிஷன்கார் பெண்கள் ஓவியங்களில் காணப்படுகின்றனர் என்று அவர் ஒப்பிட்டுக் காட்டுகிறார்.

  அதேபோல பஞ்சாப் மலைகளில் உள்ள 'காங்க்ரா' பள்ளத்தாக்கின் முகப்பில் அமைந்தது 'குலெர்' (Guler). இந்த 'காங்க்ரா' ஓவியங்களில்  பெண்கள் குளிக்கும்போது கரையில் மற்ற பெண்கள் அமர்ந்து வாத்தியங்களை வாசிப்பது போன்ற காட்சிகள் காணப்படுகின்றன. 'காங்க்ரா' ஓவியங்களில் பெண்கள் நிர்வாணமாகக் குளிப்பதும் வரையப்பட்டிருக்கிறது. கண்ணன் துணிகளை திருடிப் போய் கதம்ப மரத்தில் ஒளித்துக் கொண்டு உட்கார்ந்திருப்பது மற்றும் யமுனா நதிக்கரையில் அலுப்பு தீர கண்ணனுடன் பெண்கள் குளிப்பது போன்ற 'காங்க்ரா' ஓவியங்கள் பிரபலமானவை. இவற்றில் பெண்கள் கைகளை உயர்த்தி தலைமுடியைக் கட்டிக் கொள்வதும், கைகளால் தன் அங்கங்களை மறைத்துக் கொண்டு கெஞ்சுவது போல காட்டப்பட்டிருப்பதும்,  சில பெண்களின் முகத்தில் கோபம் பொங்குவது தெரிவதும் இவை நிர்வாணத்தைவிட கலையுணர்வைக் காட்டும் ஓவியங்கள் என்பது பார்ப்பவர்களுக்குப் புரியும். தற்காலத்திய திரைப்படங்களில்  குளியல் காட்சிகளைப் பார்க்கும்போதும் நம் பழமையான ஓவியங்களில் ஒளிந்திருக்கும் உண்மையான காதலும் கலையும் புரியும்.

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |