ஜூன் 10 2004
தராசு
பெண்ணோவியம்
உங்க...சில புதிர்கள்
மேட்ச் பிக்சிங்
பருந்துப் பார்வை
க. கண்டுக்கொண்டேன்
முத்தொள்ளாயிரம்
என்னை எழுதியவர்கள்
சுய சாசனம்
களம்
கோடிட்ட இடங்கள்
காந்தீய விழுமியங்கள்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  காந்தீய விழுமியங்கள் : ஆத்மா
  - ஜெ. ரஜினி ராம்கி
  | Printable version |

  ஆத்மா பற்றிய காந்திஜியின் எண்ணங்கள் முற்றும் துறந்த ஆன்மீக மகானின் கருத்துக்களோடு ஒத்திருக்கும். இந்துக்களின் நம்பிக்கைகளை மட்டும்

  கருத்தில் கொள்ளமாமல் ஏனைய பிற மத நூல்களில் சொல்லியிருக்கும் விஷயங்களோடு ஒப்பிட்டு அனைத்து மதத்தினரும் ஓப்புக் கொள்ளும்படியான

  ஆன்மீக கருத்துக்களே காந்திஜியிடமிருந்து வெளிப்பட்டிருக்கின்றன. காந்திஜியால் கீதையிலிருந்தும் குரானிலிருந்தும் மேற்கோள்கள் காட்ட முடியும்.

  மதங்களை தாண்டிய ஆத்மா பற்றிய காந்திஜியின் தேடல்களை இந்த வாரம் பார்க்கலாம்.

  'ஆத்மாவை விட அருமையானதாக உடலைக் கருதக்கூடாது. ஆத்மாவை அறிந்துள்ளவன், பூதவுடலினின்றும் அது வேறானது என்பதை

  அறிந்துள்ளவன், வன்முறையைக் கையாண்டு தன் உடம்பை பாதுகாத்துக்கொள்ள முயலமாட்டான். ஆத்மாவானது ஓர் உடம்பில் இருக்கும்போதுதான்

  அது நம்மை நன்மையோ தீமையோ செய்விக்கிறது என்ற எண்ணம் முற்றிலும் தவறானது.  இந்த நம்பிக்கை காரணமாக கொடுமையான பாவங்கள்

  செய்யப்பட்டுள்ள. செய்யப்பட்டு வருகின்றன. வயது முதிர்ந்த நிலையில்தான் ஆத்மாவை அறியமுடியுமென்று சட்டம் எதுவுமில்லை. வயதான பலர்

  ஆத்மாவை பற்றி அறிந்து கொள்ளாமலே இறந்து விடுகிறார்கள். ஆன்மீக ஞானிகள் அவற்றை எட்டு வயதிலேயே அறிந்து
  கொள்ள முடிந்திருக்கிறது' (Collected Works of Mahatma Gandhiji) 17.9.1908)

  பெரும்பாலான ஆன்மீகவாதிகள் சொல்லியிருக்கும் விஷயம்தான் இது.  ஆத்மா என்பதுதான் நிரந்தரமான விஷயம். நமது சரீரம் என்பது ரெடிமேட்

  சட்டை போன்றது. மரணம் என்பது நாம் புது சட்டை மாட்டிக் கொள்ளும் ஒரு சாதாரண சம்பவம். எல்லா மக்களுக்கும் சாவைப் பற்றிய ஒரு பயம்

  எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

  'நாம் ஒரு பழைய வீட்டிலிருந்து புது வீட்டிற்கு இடம் மாறிப் போவதற்கு மகிழ்ச்சியடைவது போல, ஆத்மாவாகிய ஒரு நண்பன், தேய்ந்து போன

  உடம்பை விட்டுவிட்டு புதிதாக ஓர் உடம்பை பெறும்போது நாம் வருந்துதல் கூடாது. இறந்தவர் இளைஞராயிருந்தாலும் முதியவராகயிருந்தாலும்

  இதுவே உண்மை'  (Collected Works of Mahatma Gandhiji) 19.5.1919

  இருக்கிறவரை நிம்மதியாக வாழ்வோம் என்கிற எண்ணங்களெல்லாம் சமுதாயத்தில் குறைவாகவே தென்படுகின்றன. காந்திஜியும் அதை தவிர்க்க
  முடியாது என்றுதான் சொல்கிறார். நமது உடல் நம்முடன் இருக்கும்வரை மரணத்தை பற்றிய அச்சம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

  மரணத்தை பற்றிய அச்சம் விலக வேண்டுமானால் நாம் நமது ஆத்மாவை பற்றிய தேடுதலை தொடங்கவேண்டும். அத்தகைய தேடலுக்கு என்றுமே

  முடிவு இருக்காது. அது குறைந்த பட்சம் மரண பயத்தை நீக்கி இன்றைய நாளை நம்பிக்கையுடன் வாழ வழிவகை செய்துவிடும் என்கிறார்.

  'சரீரத்துடன் உள்ள, அதாவது அதனுள் சிறை வைக்கப்பட்டுள்ள ஆத்மாவுக்கு அச்சத்திலிருந்து முற்றிலுமாக விடுதலை என்பது இல்லை. தேகம்

  இருக்கிறது என்பதே ஒரு குறைபாடுதான். அது பிரித்து வைக்கும் ஒரு சுவர் போன்றது' (மீராவுக்கு பாபுவின் கடிதங்கள், 22.12.1932)

  கடவுள் இல்லை என்று சொல்லும் நாத்திகர்களை காந்திஜி, பரமாத்மாவை நம்மை மீறிய ஒரு இயற்கை சக்தியாக கருதிக் கொள்ளுமாறும்

  வேண்டுகோள் விடுக்கிறார். கடவுளை மறுக்கலாம்; ஏன் பரமாத்மா இருப்பதை கூட மறுத்துவிடலாம்.  ஆனால் ஆத்மாவை மட்டும் மறுக்கவே கூடாது

  என்பதுதான் காந்திஜியின் கருத்து.

  'மோட்சத்தை அடைந்த ஆத்மாவே கடவுள். எனவே அது எல்லாம் அறிந்த பேரறிவு பக்தி என்பதன் உண்மையான பொருள் ஆத்மாவை தேடுதல்
  என்பதேயாகும். ஆத்மா தன்னையறியும்போது பக்தியானது ஞானமாக மாறிவிடுகிறது. கடவுள் இருப்பதை மறுப்பவர்கள் தவறான வழிக்கு
  போய்விடுவார்கள். ஏனென்றால் அவர்கள் ஆத்மா இருப்பதையும் மறுப்பது கட்டாயமாகிவிடும்.'
  (Collected Works of Mahatma Gandhiji) 2.7.1913)

  ஆத்மா பற்றி விளக்கும் காந்திஜி, கடவுள் யார் என்பதை பற்றியும் ஆத்மா கான்செப்ட் மூலம் சுலபமாக விளக்கிவிடுகிறார். 

  'உடம்பு எடுத்த ஆன்மாக்கள் விடுதலை பெற்றபின் அடையக்கூடிய ஓர் பரமாத்மாவை நாம் கற்பனை செய்ய முடியுமென்றால் அதுவே கடவுளாகும்.

  அவர் பெளதிகப் பொருள் அல்ல, முற்றிலும் தூய உணர்வேயாகும். எந்தக் காலத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் நமக்கு அரசன் மாதிரியான கடவுள்

  தேவையில்லை. அது நமக்கு தேவையென்று நினைப்பதன் மூலம் முடிவுற்ற ஆத்மாவின் சக்திக்கு நாம் ஒரு வரம்பு வைக்கிறோம்'  (Collected Works

  of Mahatma Gandhiji) 30.5.1913)

  கடவுள் இல்லையென்று மூச்சுக்கு 300 தடவை முழுங்குபவர்கள் குறைந்த பட்சம் இயற்கையின் மீதாவது தங்களின் நம்பிக்கையை வைக்கவேண்டும்.

  அப்போதுதான் ஆத்மாவின் குரலுக்கு செவிசாய்க்க முடியும்.  ஆத்மாவின் குரல் உரத்து ஒலித்தால் மட்டுமே நல்ல சிந்தனைகளும் அதைத் தொடர்ந்து

  நல்ல செயல்களும் நடைபெற சாத்தியம் உள்ளது என்பதுதான் காந்திஜி சொல்லவந்த விஷயம்.

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |